Search
  • Follow NativePlanet
Share
» »சில்கா ஏரி - இயற்கை காதலர்களின் இந்திரபுரி

சில்கா ஏரி - இயற்கை காதலர்களின் இந்திரபுரி

ஓடிஸா மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த சில்கா ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய 'Brackish Water' எனப்படும் நல்ல நீரும், கடல் நீரும் கலந்த நீரை கொண்டிருக்கும் ஏரி ஆகும். குளிர் காலத்தில் இந்தியாவில் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து வரும் பறவைகள் அதிகமாக வரும் இடமாக இது இருக்கிறது. புலம்பெயர் காலத்தில் மட்டும் இங்கு கிட்டத்தட்ட 160 வகையான பறவைகள் இந்த ஏரிக்கு வருகின்றன. இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற சுற்றுலாத்தலமான இங்கு மேலும் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

redBus.in இல் ஹோட்டல் புக் செய்து 25% கட்டண தள்ளுபடி பெற இங்கே கிளிக்கவும்

ஏரியின் வரலாறு:

புகைப்படம்: Rita Willaert

வரலாற்று காலத்தில் இருந்தே இந்த ஏரி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. கி.மு 200களில் கலிங்க அரசன் காரவேலன் காலத்தில் கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்கையில் இது முக்கிய துறைமுகமாக திகழ்ந்திருக்கிறது. ஆங்கிலேயர்கள் சில்கா ஏரியின் கரையை முதலில் அடைந்து பின்னர் படையெடுத்து சென்று ஓடிஸாவை கைப்பற்றியிருக்கிறார்கள்.

விலைமதிப்பற்ற இயற்கை வளங்கள்:

புகைப்படம்: Rita Willaert

இதன் தனித்துவமான நீர் அமைப்பினால் இங்கு பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் போன்றவை செழிப்பாக வளர்கின்றன. ஓடிஸாவில் அதிக மீன்வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகவும் இந்த ஏரி இருக்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து செல்கின்றன. நன்னீர் மற்றும் கடல் நீர் ஆகியவற்றில் வாழும் மீன்கள் இரண்டுமே இங்கு செழித்து வாழ்கின்றன. கடல் கழுகுகள் , கிரேய்லாக் கீஸ் , ஜகானா , ஹீரோன்ஸ் மற்றும் ப்லமிங்கோஸ் போன்ற பல்வேறு வகையான பறவைகள் காரீபியக்கடல், மங்கோலியா, ரஸ்யா, இரான் போன்ற நாடுகளில் இருந்து இங்கு வருகின்றன.

என்னவெல்லாம் இருக்கின்றன இங்கே சுற்றிப்பார்க்க?

புகைப்படம்: Aditi

இந்த ஏரியில் அமைந்திருக்கும் நலபன் தீவு தான் இங்கிருக்கும் மிக முக்கிய சுற்றுலாத்தளம் ஆகும். இந்த தீவு மொத்தமும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. நவம்பரில் இருந்து பிப்ரவரி காலகட்டத்தில் இங்கு வந்தால் 1000க்கும் மேற்ப்பட்ட பறவைகளை கண்டு மகிழலாம். உங்களுக்கு பறவைகளை புகைப்படம் எடுக்க பிடிக்கும் என்றால் உடனே உங்கள் கேமராவை தூக்கிக்கொண்டு கிளம்பிடுங்கள்.

இரவாடி டால்பின்கள் புகைப்படம்: Steve Browne & John

இரவாடி டால்பின்கள் சில்கா ஏரியின் சிறப்பம்சம் ஆகும். மிகவும் அருகி வரும் இவ்வகை டால்பின்களை இந்தியாவில் இந்த ஏரியில் மட்டுமே நாம் காண முடியும். இந்த ஏரியில் இருக்கும் சட்பதா என்னும் சிறு தீவுக்கு பக்கத்தில் இவைகளை அதிகமாக நாம் காண முடியும். சில சமயம் இந்த ஏரியினுள் நாம் படகில் செல்கையில் படகுக்கு போட்டியாக டால்பின்கள் குதித்து குதித்து நீந்தி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

இந்த பறவைகள் சரணாலயத்தை தவிர இந்த தீவில் இருக்கும் கலிசை அம்மன் கோயில் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தீவுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் இங்கு மறக்காமல் வந்து செல்கின்றனர்.

சில்கா ஏரி - இயற்கை காதலர்களின் இந்திரபுரி

தீவை நோக்கி கப்பலில் பயணம் புகைப்படம்: Alaina Browne

எப்படி அடையலாம்?

NH5 தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை அல்லது கொல்கத்தாவில் இருந்து இந்த ஏரியை நேரடியாகவே சாலை மூலம் அடைய முடியும். விமானம் மூலமெனில் சில்கா ஏரியில் இருந்து 100கி.மீ தொலைவில் உள்ள புபனேஸ்வர் விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலம் இந்த ஏரியை அடையலாம். புபனேஸ்வர் நாட்டின் எல்லா முக்கிய பகுதிகளுடனும் நேரடியாக ரயில் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் முதலில் புபனேஷ்வரை அடைந்து அங்கிருந்து மற்றொரு ரயில் மூலம் சில்கா ரயில் நிலையத்தை அடையலாம். சில்கா ஏரிக்கு அருகில் பர்குல், ரம்ப்ஹ போன்ற இடங்களில் ஓடிஸா சுற்றுலாதுறையினால் நடத்தப்படும் தங்கும் விடுதிகள் உள்ளன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X