Search
  • Follow NativePlanet
Share
» »கோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா ?

கோவை - மைசூர் via மசினக்குடி இப்படியொரு வழி இருக்கா ?

உதகை, தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்துள்ள சுற்றுலாத் தலமான இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி ஆண்டு தோறும் நாடுமுழுவதும் இருந்து பல லட்சம் சுற்றுலாப் பயணிகள் இங்கே பயணிப்பது வழக்கம். இதனாலேயே மலைகளின் இலவரசி என்ற புனைப் பெயரையும் இந்த உதகை கொண்டுள்ளது. குறிப்பாகச் சொல்லப் போனால், உதகை என்னும் உதகமண்டலத்தை ஒட்டிய சமவெளி மாவட்டமான கோயம்புத்தூர் மக்களுக்கு உதகை ஒரு கெஸ்ட்ஹவுஸ் போலத்தான். வாரம், மாதம் என ஒரு முறையேனும் கோவை மக்கள் அடிக்கடி பயணிக்ககூடிய தலமாக உதகை உள்ளது. அதெல்லாம் சரி, கோவையில் இருந்து மைசூர் செல்ல திட்டமிடும் பயணிகள் உதகை வழியாக எப்படி பயணிக்கலாம், எந்த ரூட்டு பெஸ்ட் என பார்க்கலாம் வாங்க.

கோவை - உதகை

கோவை - உதகை

கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் வரை ஆங்காங்கே கொஞ்சம் நகரமயமாக்களின் கட்டிடங்கள் இருந்தாலும், மலையேறத் துவங்கியது முதல் குன்னூர், உதகை வரையில் கண்ணுக்கு குளிர்ச்சியாக, திட்டுதிட்டான மேகக் கூட்டங்கள் மட்டுமே நம்மை வரவேற்று அழைத்துச் செல்லும். குறிப்பாக, பைக்கில் இச்சாலையில் பயணம் மேற்கொள்வது அவ்வளவு ரம்மியமானதாக இருக்கும்.

Chris Stevenson

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

குறிப்பிட்ட நேரத்தில் மைசூரை சென்றடைய வேண்டிய கட்டாயத்தில் இருந்தீர்கள் என்றால் உதகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தவறாது காண வேண்டிய சுற்றுலாத் தலங்களைத் தவிர்த்து தொடர்ந்து பயணிக்கலாம். நேரம் இருப்பின் உதகையில் பொடானிக்கல் கார்டன், தொட்டபெட்டா சிகரம், உதகை ஏரி, கல்ஹத்தி நீர்வீழ்ச்சி, மலர் கண்காட்சி உள்ளிட்ட உலக பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களுக்கு பயணிக்கலாம்.

Adam Jones

உதகை - மசினகுடி

உதகை - மசினகுடி

உதகையில் இருந்து வெறும் 30 கிலோ மீட்டர் தொலைவில் தமிழக - கர்நாடக எல்லைக்கு முன்பாக அமைந்துள்ளது மசினகுடி. கோத்தகிரி- உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை சங்கமிக்கும் இடத்தில் இருந்து முதுமலை வனச்சரகத்தை நோக்கி பயணிக்க வேண்டும். இச்சாலையிலேயே சோலூர் மலைக் காடு, கல்ஹத்தி, எப்பநாடு, கடநாடு உள்ளிட்ட தேயிலைத் தோட்டங்களும், அடர் வனக் காடுகளும் நிறைந்த சாலையில் அவ்வப் போது யானை, கரடி, புலி உள்ளிட்ட வன விலங்குகளையும் காணக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். பயணத்தில் மசினகுடிக்கு முன்னதாக முதுமலை சரணாலயத்தையும் கண்டு ரசிக்கலாம்.

Maria Kiran

மசினகுடி

மசினகுடி

மசினகுடி, மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் மிக அழகான, மனிதனால் இன்னமும் சற்றும் மாசுபடுத்தப்படாத இடங்களில் ஒன்றாக திகழ்கிறது மசினகுடி. முதுமலை தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்திருக்கும் இந்த ஊரானது வார இறுதி விடுமுறைகளை கழித்திட அற்புதமான இடங்களில் ஒன்றாக இருக்கிறது.

Ashwin Kumar

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

மசினகுடியில் தெப்பக்காடு யானைகள் முகாம், சபாரி, தேயிலைத் தோட்டங்கள், கோபாலசுவாமி பெட்டா கோவில், கல்லிகுடர் ரப்பர் தோட்டங்கள், முதுமலை வனவிலங்கு சரணாலயம், பறவைகள் சரணாலயம் போன்ற இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்க்கலாம்.

DRUID1962

தெப்பக்காடு யானை முகாம்

தெப்பக்காடு யானை முகாம்

தெப்பக்காடு யானை முகாம், நிலத்தில் வாழும் மிகப்பெரிய உயிரினத்தை கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பார்வையாளர்கள் காண உதவுகின்றது. இந்த வளாகத்தின் உள்ளே தினந்தோறும் ஒரு ஜோடி யானைகள் விநாயகருக்கு பூஜை செய்கின்றன. காலையிலும், மாலையிலும் தெப்பக்காடு யானை முகாமில் யானை சவாரிகள் அனுமதிக்கப்படுகின்றன. மாலை நேரங்களில் யானைகள் உணவு அருந்தும் நேரத்தில் அவற்றை பார்வையிட பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

H.snehamithra

சபாரி

சபாரி

மசினகுடியில் இருக்கும் வனப்பகுதியில் அதிகாலை 6:30 - 8.30 வரையும், மாலை 3 - 6 வரையும் யானை மீதும், ஜீப்பிலும் சபாரி செய்யலாம். இந்த சபாரி பயணத்தின் போது புள்ளிமான்கள், சிங்கவால் குரங்குகள், பலவகையான பறவைகள் போன்றவற்றை கண்டு மகிழலாம். இங்கே ஜீப், கார் போன்ற வாகனங்களில் செல்வதை காட்டிலும் யானையின் மீது அமர்ந்து வன உயிரினங்களை கண்டு மகிழலாம்.

Marcus Sherman

பந்திப்பூர்

பந்திப்பூர்

மசினகுடியில் இருந்து பயணத்தை மீண்டும் தொடங்கினோம் என்றால் அடுத்த 21 கிலோ மீட்டர் தொலைவில் பந்திப்பூரை அடைந்து விடலாம். பந்திப்பூர் தேசிய வனவிலங்கு பூங்காவிற்கு புகழ்பெற்றது. சாகச விரும்பிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இத்தலத்திற்கு வருடம் முழுவதும் மலையேறுபவர்கள், கல்லூரி மாணவர்கள் வருவது வழக்கம். நாகூர், கபினி மற்றும் மோயார் போன்ற ஆறுகளால் சூழப்பட்டிருக்கும் இந்த வனவிலங்கு பூங்காவின் எல்லா மூலைகளிலிருந்தும் பயணிகள் உட்சென்று இயற்கையின் விந்தையை ரசிக்கலாம்.

Ambigapathy

பந்திப்பூர் - மைசூர்

பந்திப்பூர் - மைசூர்

மேற்குத் தொடர்ந்து மலையடிவாரமான பந்திப்பூரைக் கடந்தால் மைசூர்- உதகை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்த 80 கிலோ மீட்டர் பயணம் தொடரும். மைசூருக்கே உரித்தான கட்டிட நயமும், மலைகளில் தழுவிவரும் ஜில்லென்ற காற்றும் நம்முடனேயே பயணிக்கும் அழகு சோர்வை நீக்கி விடும். மனகல்லி, பெகுர், நஞ்சனகூடா உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து கபினி ஆற்று பாலத்தை கடந்தால் அடுத்து நாம் அடையப் போகும் நகரம் மைசூராகத்தான் இருக்கும்.

Jaseem Hamza

உங்கள் வசதிக்கு!

உங்கள் வசதிக்கு!

கோயம்புத்தூரில் துவங்கிய இப்பயனத்தில் மைசூர் வரை எண்ணற்ற சுற்றுலாத் தலங்களை கடக்க வேண்டியிருக்கும். இவை ஒவ்வொன்றும் தவறவிடக் கூடாத நீங்கா நினைவுகளைத் தரவல்லது. இருப்பினும், உங்களது வசதிக்கு ஏற்ப பயணத்தை திட்டமிட்டீர்கள் என்றால் ஒரே பயணத்தில் பல தலங்களை ரசித்துவிடலாம்.

Woodthought

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more