Search
  • Follow NativePlanet
Share
» »பஞ்சாப்பில் குளிர்கால விழாக்களை எப்படி கொண்டாடுவாங்க தெரியுமா?

பஞ்சாப்பில் குளிர்கால விழாக்களை எப்படி கொண்டாடுவாங்க தெரியுமா?

By Bala Karthik

தென்னிந்தியாவின் மூர்க்கத்தனமான மாநிலமான பஞ்சாப், அதீத சீக்கிய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கொண்டு பிரதானமாக காட்சியளிக்கும் ஓர் அழகிய இடமாகும். ஐந்து நிலங்களின் நீர் என்னும் இலக்கிய ரீதியான பெயரை பஞ்சாப்பிற்கு வழங்கிட, அந்த ஐந்து நதிகளாக சுட்லெஜ், செனாப், பியாஸ், ஜெலாம், மற்றும் ரவியானது காணப்பட, இதன் கிளைகளாக இந்து நதியானதும் காணப்படுகிறது.

சீக்கியர்களின் ஆதிக்கம் நிறைந்த பஞ்சாப், பதினைந்தாம் நூற்றாண்டின் ஆதியாக அமைய, பஞ்சாப்பில் சுமார் 75 சதவிகித சீக்கியர்கள் வாழ்கின்றனர். ஆகையால், வித்தியாசமான கலாச்சாரத்தை கொண்ட இவ்விடம், தனித்துவமிக்க விழாக்களையும் கொண்டிருப்பதோடு, தனித்துவமிக்க பாரம்பரியத்தையும் பின்பற்றிட, இந்த அழகிய மாநிலத்தில் கீழ்க்காணும் செயல்களை நாம் செய்வது மனதில் சந்தோஷத்தை விதைக்கும் எனவும் இந்த பதிவின் மூலம் உங்களுக்கு தெரியவருகிறது.

புகழ்மிக்க பொற் கோயிலுக்கு ஒரு அழகிய பயணம்:

புகழ்மிக்க பொற் கோயிலுக்கு ஒரு அழகிய பயணம்:

இவ்விடத்தை ஸ்ரீ ஹர்மந்திர் ஷாகிப் எனவும் அழைக்கப்பட, இந்த புகழ்மிக்க பொற் கோயில் உலகிலேயே அதீத புனித தன்மைக்கொண்ட சீக்கியர்களின் யாத்ரீக தளமாக விளங்க, இந்த பொற் கோயில் நம்மை நெகிழ செய்வதோடு, இந்த ஆலயத்தின் குவிமாடமானது 100 கிலோ சுத்த தங்கத்தையும் கொண்டிருக்கிறது.

மனிதனால் உருவாக்கப்பட்ட குளம் அல்லது சரோவர் இதன் மத்தியில் கட்டப்பட்டிருக்க, இந்த நீர் நிலையில் நாம் மூழ்கி எழுந்து செல்வது, நம்முடைய அனைத்து பாவத்தையும் நீக்குவதாகவும் நம்பப்படுகிறது. அதிகாலையில் நாம் பொற் கோயிலுக்கு புறப்பட்டு செல்ல, லாங்கரால் உருவாக்கப்பட்ட உலகிலேயே பெரிய சமையலறை ஆனதும் இந்த பொற் கோயிலில் காணப்படுவதனை நம்மால் பார்க்க இயலும்.

 பங்க்ரா மற்றும் கட்கா நடனத்தை நாமும் பார்த்திடலாம்:

பங்க்ரா மற்றும் கட்கா நடனத்தை நாமும் பார்த்திடலாம்:

பஞ்சாப்பின் பாரம்பரிய நடனமான பங்க்ராவும், தற்காப்பு கலை பெருமையை பாரம்பரிய வடிவம் கொண்டு தாங்கி நிற்கும் கட்காவும் என ஆர்ப்பாட்டங்கள் நிறைந்ததாக இவ்விடமானது காணப்படுகிறது. இந்த கலாச்சார நடனமானது பல்வேறு சந்தர்ப்பங்களான திருமணம், விழாக்களான பைசகியில் அரங்கேறுகிறது. குருத்வராக்களால் கொண்டாடப்படும் கட்காவை நாம் பார்க்க, சந்தர்ப்பங்களில் நம் மனதை இவை நெகிழவும் செய்கிறது.

சுவையூட்டும் பஞ்சாப் உணவை சுவைத்து மகிழலாம்:

சுவையூட்டும் பஞ்சாப் உணவை சுவைத்து மகிழலாம்:

தனித்துவமிக்க உணவான இது, பஞ்சாப்பில் காணப்படும் சுய சமையல் வடிவத்தையும், மூலப்பொருட்களையும் கொண்டிருக்க, இதன் முடிவாக பழங்காலத்து விவசாயத்தையும், பண்ணை வாழ்க்கையையும் இவ்வுணவு நமக்கு நினைவுப்படுத்துகிறது. இந்த சமையலின் வடிவமாக தந்தூரி இருக்க, பஞ்சாப்பில் தோன்றிய இந்த உணவு, தட்டை ரொட்டி வடிவத்தையும், அல்லது பஞ்சாப்பில் பிறந்த ரொட்டியின் வடிவத்தையும் கொண்டிருக்கிறது.

இத்துடன் சர்ஷான் சாக்குடனான மக்கி கீ ரொட்டியை சேர்த்து, ஒரு டம்ப்ளர் லஸ்ஸி குடிப்பதனால் உன்னதமான சுவையை உங்கள் நா வானது உணரவும் கூடும்.

வாகா எல்லையில் காணப்படும் உடன்படிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்:

வாகா எல்லையில் காணப்படும் உடன்படிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்:

புகழ்மிக்க வாகா எல்லையை இந்தியா பாகிஸ்தான் பிரித்திட, இந்தியாவிற்கு அமிர்தசரஸும், பாகிஸ்தானுக்கு லாஹூரும் விளங்குகிறது. ஒவ்வொரு நாளும், மாபெரும் உடன்படிக்கை நிகழ்ச்சியானது வாகா எல்லையில், சூரிய அஸ்தமனத்திற்கு முன்னே நிகழ்கிறது.

இரு நாடுகளிலிருந்தும் இந்த எல்லைக்கோட்டில் கூடும் மக்கள் ஆயிரக்கணக்கானோர் இராணுவ வீரர்களின் அணிவகுப்பை கண்டுகளிக்க, இந்தியாவிலிருந்தும், பாகிஸ்தானிலிருந்துமென எண்ணற்ற இராணுவ வீரர்கள் ஒருங்கிணைந்து இந்த நிகழ்வை வண்ணமயமாக மாற்றுகின்றனர். இந்த உடன்படிக்கையானது குளிர்க்காலத்தில் மாலை 4.15 மணிக்கும், கோடைக்காலத்தில் மாலை 5.15 மணிக்குமென 45 நிமிடங்கள் நடைபெறுகிறது.

ஜுட்டிஸ் மற்றும் புல்காரிக்காக ஒரு அழகிய ஷாப்பிங்க் போகலாம்:

ஜுட்டிஸ் மற்றும் புல்காரிக்காக ஒரு அழகிய ஷாப்பிங்க் போகலாம்:

பாரம்பரிய சரிகை வேலைப்பாட்டுடன் கூடிய புல்காரி பஞ்சாப்பில் தோன்றிட, இந்த "புல்கரி" என்பதனை இலக்கிய ரீதியாக "மலர்களால் ஆன பணிகள்" என அழைக்கப்படுகிறது. அழகிய குவியல்களை இங்கே கொண்டு புல்கரி ஷால்களும், தலைக்கவசமும் காணப்பட, அமிர்தசரஸ் அல்லது பட்டியலாவில் ஏராளமான கடைகளில் நம்மால் வாங்கவும் முடிகிறது.

அத்துடன் இங்கே பாரம்பரிய ஜுட்டிகளான, ஒரு வகை காலணியும் பிரசித்திப்பெற்று பஞ்சாப்பில் விளங்குகிறது. நம்மால் விதவிதமான துடிப்பான வண்ணத்தையும், வடிவமைப்பையும் மலிவான விலையில் பஞ்சாப் முழுவதும் வாங்குவதற்கு ஏதுவாகவும் பார்த்திட முடிகிறது.

லோஹ்ரி மற்றும் பைசகி விழா கொண்டாட்டம்:

லோஹ்ரி மற்றும் பைசகி விழா கொண்டாட்டம்:

பஞ்சாப்பின் குளிர்க்கால திருவிழாவான லோஹ்ரி, குளிர்காலத்தின் முடிவிலும், சீக்கிய புது வருடத்தின்போது பைசகியும் கொண்டாடப்படுகிறது. லோஹ்ரியை ஜனவரி மாதத்தில் கொண்டாடப்பட, பைசகியை வழக்கமாக ஏப்ரல் 13 அல்லது 14இல் கொண்டாடப்படுகிறது.

நெருப்பு மூட்டி லோஹ்ரியை கொண்டாட, கரும்பு, கொட்டைகள், கடுகு கீரைக்கொண்டு உருவாக்கப்படும் ஒரு வித சுவையான உணவும் இங்கே இந்த சமயத்தில் புகழ்பெற்று விளங்குகிறது. ஏப்ரல் மாதத்தில் நாம் பஞ்சாப்பை பார்த்திட, பைசகி விழாவின் போது அரங்கேறும் பங்க்ரா நடனத்தையும் மறக்காமல் காணுங்கள்.

ஜாலியன் வாலாபாஹ்ஹில் ஒரு மரியாதை அஞ்சலி:

ஜாலியன் வாலாபாஹ்ஹில் ஒரு மரியாதை அஞ்சலி:

ஒவ்வொரு இந்திய புத்தகங்களிலும் ஜாலியன் வாலாபாஹ் எனப்படும் மூர்க்கத்தனமான, கொடூரமான கொலைப்பற்றி காணப்பட, 1919ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராஜால் அரங்கேறியது. இவ்விடமானது இந்த கொடூர படுக்கொலையில் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்த அமைக்கப்பட, நினைவிடமான ஜாலியன் வாலாபாஹ், தேசிய முக்கிய துவத்துடனும் விளங்குகிறது.

இவ்விடமானது சுவற்றில் எண்ணற்ற புல்லட் துளைத்த புள்ளிகளைக் கொண்டிருக்க, இந்த சம்பவத்தின் கதையையும் அந்த புள்ளிகள் நமக்கு தெள்ள தெளிவாய் உணர்த்தி மனதை நெகிழ செய்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more