Search
  • Follow NativePlanet
Share
» »சென்னை கோவளத்துல இப்படி ஒரு திருவிழா - போலாமா?

சென்னை கோவளத்துல இப்படி ஒரு திருவிழா - போலாமா?

சென்னை கோவளத்தில் குதூகலிக்கலாம் வாருங்கள். கோவலாங் பாய்ண்ட் சறுக்கு, இசை யோகா திருவிழா 2018. ஆட்டம் பாட்டம் நீர்ச்சறுக்கு இசை .யோகா என அத்தனை மகிழ்ச்சி தருணங்களையும் ஒன்றாக கழிக்க கோவளம் செல்லுங்கள்

By Udhaya

சென்னை கோவளத்தில் கு தூகலிக்க லாம் வாருங் கள். கோவ லாங் பா ய்ண்ட் சறுக்கு, இசை யோகா திருவிழா 2018. ஆட்டம் பா ட்டம் நீர்ச்ச றுக்கு இசை .யோகா என அத் தனை மகிழ் ச்சி தரு ணங் களையும் ஒன்றா க கழிக்க கோ வளம் செ ல்லுங்கள். விழாவின் நிக ழ்ச்சிகள் பற்றியும், கோவ ளம் எப்படி செ ல்வது என்பது பற்றியும் இ ந்த பதிவில் கா ண்போம் வாருங்கள்.

 நீர்ச்சறுக்கு

நீர்ச்சறுக்கு

நீர்ச்சறுக்கு போட்டியில் வல்லவரா நீங்கள் நிச்சயம் உங்களால் முடியும் இந்த போட்டியில் வெல்ல. வாருங்கள் கோவளத்துக்கு என்று வரவேற்போடு உங்களை அழைக்கிறது கோவளம் கடற்கரை.

கடல் அலையில் வேகமாக சென்று சறுக்கி அதிக சாகசங்கள் செய்வது ஒருவருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும். சாகச பிரியர்கள் இந்த தருணத்துக்காகத் தானே காத்திருந்தீர்கள் வாருங்கள். கலந்து கொண்டு வெற்றிக் கனியை கவ்வி செல்லுங்கள்.

covelongpoint.com

 யோகா மற்றும் உடற்கட்டு

யோகா மற்றும் உடற்கட்டு

யோகா செய்பவர்களுக்கு என தனியே திருவிழா நடக்கிறது. இங்கு கலந்துகொள்பவர்கள் யோகா வில் பெரிய அளவில் இருப்பவர்கள் மட்டுமல்ல யோகா பயின்றுகொண்டு இருப்பவர்களும்தான்.

உங்கள் ஆழ் மன ஆசைகளை சரியான பாதையில் செலுத்த நீங்கள் யோகா வை நாடலாம். இது உங்களை நல்வழிப்படுத்தும். மனதை அலை பாய விடாமல் ஒருங்கே செலுத்தி தேவையானவற்றை தேர்ந்தெடுக்க வைக்கும். இப்படி ஒரு யோகா திருவிழா அநேகமாக தமிழகத்திலேயே இது மட்டும்தான்.

covelongpoint.com

இசை

இசை

இசைக்கு மொழி இல்லை. எதையுமே இசையில் புரிந்துகொள்ளவும் புரிய வைக்கவும் முடியும். அது எட்டு வயது சிறுமியானாலும் எம்பது வயது பெரியவரானாலும் சரி. இசையை வெறுப்பவர்கள் யாரும் இல்லை. அவர்களுக்கு புரியும் மொழியில் இசையை கலவையாக்கி கையில் தருவார்கள். இதுதான் இசைத் திருவிழா.

இரண்டு வகையான திருவிழாக்கள் இருக்கின்றன.

1 கடற்கரை மேடை

2 அலைச்சறுக்கல் மேடை


இரண்டும் கொஞ்சம் வித்தியாசப்படும் நிகழ்ச்சிதான் என்றாலும் இரண்டுமே இசை நிகழ்ச்சிதான்.

covelongpoint.com

 கலை

கலை


இங்கு வரைகலை, ஓவியங்கள், புகைப்படங்கள் என நிறைய கலைப் பொருள்களை காணமுடியும். கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பார்வைக்கும் வைத்திருப்பர்.

சாகசங்கள் செய்து காட்டும் கலைஞர்களும் இங்கு இருப்பார்கள்.

covelongpoint.com

 உணவு

உணவு

உலகெங்கிலும் இருந்து வந்த கலைஞர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகள் மட்டுமல்லாது, உணவுப் பொருள்களும் இங்கு கிடைக்கும்.

உங்களுக்கு வேண்டுமான உணவை தேர்ந்தெடுத்து உண்டு மகிழலாம்.

PC: Wings and Petals

கோவளம் என்றால் இதுதான்

கோவளம் என்றால் இதுதான்


அமைதியான கடல் காற்று, வெண்மையாய் மிளிரும் கடற்கரை மணல், வண்ணமிகு கடற்சிற்பிகள், கம்பீரமாய் நிற்கும் பனை மரங்கள், இதமான-மாசு கலவாத--கடல்காற்று, வரலாற்று நினைவுச் சின்னங்கள் மற்றும் நீர் விளையாட்டுகள் போன்றவைகள் நிறைந்த இந்த ரம்மியமான சூழ்நிலை உங்களை ஈர்த்து உங்கள் மனதை உற்சாகப்படுத்திவிடும்.

கோவளம் எனும் அழகியல் சொர்க்கம்

கோவளம் எனும் அழகியல் சொர்க்கம்

சென்னையிலிருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தென் திசையில், கிழக்கு கடற்கரைச் சாலையில், மாமல்லபுரம் செல்லும் வழியில் கோவளம் என்ற மீனவ கிராமம் அமைந்துள்ளது.

தற்சமயம் அதிக பிரபலம் அடைந்து வரும் இந்த கடற்கரையின் அழகு, உலகின் பல பகுதிகளிலிருந்து வரும் உல்லாசப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறது.

jazz

 காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் இடம்

காஞ்சிபுரம் மாவட்டத்திலிருக்கும் இடம்

பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த கோவளம் கடற்கரை, சென்னைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவசியம் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு சுற்றுலா ஸ்தலமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள திருப்போரூர் தாலுக்காவிலிருக்கும் இந்த கடற்கரைக் கிராமம் மீன்பிடி தொழிலுக்கும் பெயர் பெற்ற இடமாகும். இந்த கிராமத்து மக்களின் முக்கிய தொழில் மீன்பிடித்தல் என்பது குறிப்பிடத்தக்கது.


Kmanoj

 எப்படி அடைவது?

எப்படி அடைவது?

சென்னையில் இருந்து கோவளம்செல்ல பழைய மகாபலிபுரம் சாலையையோ கிழக்கு கடற்கரைச் சாலையையோ நீங்கள் தேரிந்தெடுக்கலாம். சுற்றுலாப் பயணிகள் வசதியாக கோவளத்திற்குச் செல்ல மாநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் சென்னையின் பல பகுதிகளில் இருந்தும் இயக்கி வருகின்றன.

சென்னை கடற்கரையிலிருந்தும் செங்கல்பட்டிலிருந்தும் கரையோரமாக படகின் வழியாகவும் நீங்கள் கோவளத்திற்குப் போக முடியும். ஆர்காடு நவாப் சாதித் அலி என்பவர் கோவளத்தை ஒரு துறைமுக நகராக அறிமுகப்படுத்தினார். இந்த பழமையான துறைமுகத்தின் தடயங்களை இன்றும் இங்குக் காணமுடிகிறது.

இங்கிருந்து 5 கீ.மீ தொலைவில், கிழக்குக் கடற்கரை சாலையில் தக்சன சித்ரா என்ற செயற்கை கிராமம் உள்ளது. இந்த திறந்தவெளி அருங்காட்சியகம் ஆந்திரா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் கலாச்சாரம், பண்பாடு, கலை மற்றும் வழ்க்கை முறையை படம்பிடித்துக் காட்டுகிறது. தஷின சித்ரா அருங்காட்சியகத்திற்கு மிக அருகில் எம் ஜி எம் டிஸ்ஸி வேர்ல்ட் என்ற பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை பூங்கா உள்ளது. எல்லா வயதினருக்கும் ஏற்ற கேளிக்கையும் விளையாட்டுகளும் இங்கு உண்டு.

Vijayaraghavan Rajendran

 சூப்பர் சுற்றுலாவுக்கு பயணியுங்க!

சூப்பர் சுற்றுலாவுக்கு பயணியுங்க!

சென்னையில் காணப்படும் மற்ற கடற்கரைகளை விட சற்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் கோவளத்தில், பாறைகள் மீது அலைகள் மோதி அடிக்கும் காட்சியையும் மணல் நிறைந்த நீண்ட கடற்கரைப் பகுதியையும் நீங்கள் பார்த்து ரசிக்கலாம். இந்த கடற்கரையின் வளைவானத் தோற்றம் இதன் அழகை மேலும் மிளிரச் செய்கிறது. வாரத்தின் இறுதியில், கூட்டமாக வரும் கிராமவாசிகள் கட்டுமரங்களில் ஆர்வத்துடன் ஏறி கடலலைகளுடன் விளையாடுவதை நீங்கள் பார்க்கலாம். கடல் நீரில் கேளிக்கை அனுபவிக்க விரும்புகிறவர்களுக்கு இதுவே சிறந்த கடற்கரை. இங்கு நீங்கள் கடலோர நடைப்பயிற்சி செய்தால் அது உங்கள் மனதிற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும்.

Destination8infinity

Read more about: travel beach chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X