Search
  • Follow NativePlanet
Share
» »தாதா ஹரீர் வாவ் - திக்! திக்! திக்! பாதாளக்கிணறு!

தாதா ஹரீர் வாவ் - திக்! திக்! திக்! பாதாளக்கிணறு!

By

குஜராத்தின் அஹமதாபாத் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அசர்வா எனும் கிராமத்தில் ‘தாதா ஹரீர் வாவ்' படிக்கிணறு அமைந்திருக்கிறது.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு அற்புத கட்டிடக்கலை படைப்பாக இந்த படிக்கிணறு அமைப்பு அக்கால கலைஞர்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு மாளிகை கோபுர கட்டுமான அமைப்பை வானை நோக்கி உயர்த்தி எழுப்புவதற்கு பதிலாக பூமியில் கீழ் நோக்கி கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் இந்த தாதா ஹரீர் வாவ்!

கம்பீரமான இந்தியப் படிக்கிணறுகள்!

அஹமதாபாத் ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்!

529 ஆண்டுகள் பழமையானது!!!

529 ஆண்டுகள் பழமையானது!!!

தாதா ஹரீர் வாவ் படிக்கிணறு 1485-ஆம் ஆண்டு சுல்தான் பாய் ஹரீர் என்ற இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது.

அந்தக் காலத்திலேயே 1 லட்சம் செலவில்!!!!

அந்தக் காலத்திலேயே 1 லட்சம் செலவில்!!!!

தாதா ஹரீர் வாவ் படிக்கிணறு 500 ஆண்டுகளுக்கு முன்பே 3,29,000 மஹ்முதீஸ் (1 லட்சத்துக்கும் மேல்) செலவில் கட்டப்பட்டுள்ளது.

படம் : Xdezines

வாவ் ''வாரே வா!''

வாவ் ''வாரே வா!''

குஜராத்தி மொழியில் வாவ் என்றால் படிக்கிணறு என்று அர்த்தம்.

மணப்பாறைகள்!

மணப்பாறைகள்!

தாதா ஹரீர் வாவ் படிக்கிணறு மணப்பாறைகளைக் கொண்டு 5 அடுக்குகளாக சோலங்கி கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமோடு இணைந்த மதங்கள்!!

இஸ்லாமோடு இணைந்த மதங்கள்!!

இந்தப் படிக்கிணறு இஸ்லாமிய கட்டிட பாணியில் கட்டப்பட்டிருந்தாலும் ஹிந்து மற்றும் ஜைனக் கடவுள்களின் உருவங்கள் ஆங்காங்கே செதுக்கப்பட்டுள்ளன.

சட்டென்று மாறும் வானிலை!!!

சட்டென்று மாறும் வானிலை!!!

தாதா ஹரீர் வாவ் படிக்கிணறுக்குள் வெளியே உள்ள வெப்பநிலையை விட 5 டிகிரி குறைவாகவே காணப்படும். எனவே இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வெளியிலிருந்து உள்ளே வந்தபின் சட்டென்று குளிர்ச்சியை உணர்வார்கள்.

படம் : Xdezines

புரளி பேசிய பெண்கள்!!!

புரளி பேசிய பெண்கள்!!!

அந்தக் காலங்களில் தாதா ஹரீர் வாவ் படிக்கிணற்றுக்கு தண்ணீர் எடுத்துச் செல்ல வரும் பெண்கள் உள்ளே இருக்கும் கடவுள்களை வணங்குவதோடு, குளிர்ச்சியான வெப்பநிலையில் அமர்ந்து புரளி பேசினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

சூரியன் இல்லாவிட்டால்!!!

சூரியன் இல்லாவிட்டால்!!!

சூரிய வெளிச்சம் உள்ளே விழாத போது கும்மிருட்டாக இருக்கும் இந்த பாதாளக்கிணற்றில் இறங்கி நடந்து செல்வது திக்! திக்! அனுபவம்தான்!!! உச்சி மதியத்தில் இந்தப் படிக்கிணறு அமைப்புக்கு விஜயம் செய்வது சிறந்தது. அந்நேரத்தில் மட்டுமே சூரியக்கதிர்கள் முற்றாக இந்தக் கிணறு அமைப்புக்குள் ஊடுறுவி நுழைந்து வெளிச்சப்படுத்துகிறது.

தூண்கள்

தூண்கள்

கலையம்சத்தோடு செதுக்கப்பட்ட தூண்களைக்கொண்டு அடுக்கடுக்காக அமைந்திருக்கும் தளங்களில் வழியாக கீழே உள்ள கிணற்றுக்கு இறங்கி செல்வது போன்ற அமைப்பாக இந்த தாதா ஹரீர் வாவ் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

படம் : Xdezines

கவிழ்ந்திருக்கும் மாளிகை!!!

கவிழ்ந்திருக்கும் மாளிகை!!!

ஒரு மாளிகை கோபுர கட்டுமான அமைப்பை வானை நோக்கி உயர்த்தி எழுப்புவதற்கு பதிலாக பூமியில் கீழ் நோக்கி கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் இந்த தாதா ஹரீர் வாவ்.

கற்பனைக்கு அப்பாற்பட்டது!

கற்பனைக்கு அப்பாற்பட்டது!

உண்மையில் நிஜத்தில் இந்த ஹரீர் வாவ் எப்படியிருக்கும் என்பதை ஒருபோதும் உங்களால் கற்பனையில் யூகிக்க முடியாது என்பதுதான் உண்மை.

பார்க்க வேண்டிய கலைப்படைப்பு!

பார்க்க வேண்டிய கலைப்படைப்பு!

இந்தப் புகைப்படங்கள் சற்றே இதன் பிரம்மாண்டத்தை உணர்த்த உதவக்கூடும். ஆனால் வாழ்நாளில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கலைப்படைப்புகளில் ஒன்றான தாதா ஹரீர் வாவ் படிக்கிணற்றை பார்த்தபின்புதான் எப்படிப்பட்ட அற்புதம் இது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

மாயத்தோற்றங்கள்!

மாயத்தோற்றங்கள்!

திரும்பும் இடமெல்லாம் மாயத்தோற்றங்கள் போன்று நேர் வரிசையில் நிற்கும் எண்ணற்ற தூண்கள் உங்களை மிரளச் செய்துவிடும்.

கட்டுமான துல்லியம்

கட்டுமான துல்லியம்

எந்தப் புள்ளியில் நின்று நோக்கினாலும் கண்களை பறிக்கும் கட்டுமான துல்லியம் என்று இந்தக் கிணறு நம்மை மயக்கி சொக்க வைக்கிறது.

சமஸ்கிருதமும், அரபியும்!

சமஸ்கிருதமும், அரபியும்!

அடுக்கடுக்காக கீழ் நோக்கி இறங்கும் தளங்களின் சுவர்களில் சமஸ்கிருத மற்றும் அரபி வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

நீர்த்தேவையும், கலையும்!

நீர்த்தேவையும், கலையும்!

அந்தக் காலங்களில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு இந்தப் படிக்கிணறு உருவாகப்பட்டாலும், மிக நேர்த்தியாக நம் கலாச்சாரத்தையும், வரலாற்றுப் பெருமையையும் எடுத்துக்காட்டும் உன்னத கலை வடிவமாக இன்று நம்மிடையே இது மிஞ்சியுள்ளது.

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

தாதா ஹரீர் வாவ் படிக்கிணறு அஹமதாபாத் நகரத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. அஹமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையம் நிறைய வெளிநாடுகளுடன் விமான சேவையை கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அஹமதாபாத்தில் மிகப்பெரிய ரயில் சந்திப்பும் இருப்பதால் அஹமதாபாத் நகரை இந்தியா மற்றும் உலகின் மற்ற நாடுகளிலிருந்தும் எளிதில் அடைந்துவிட முடியும். எனவே சுற்றுலாப் பயணிகள் அஹமதாபாத் நகரை அடைந்த பின்பு குறைந்த வாடகையில் டேக்ஸி ஒன்றை அமர்த்திக்கொண்டு தாதா ஹரீர் வாவ் படிக்கிணறை சுலபமாக அடையலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X