Search
  • Follow NativePlanet
Share
» »பஞ்சாபின் அழகிய அணைகள் பற்றி தெரியுமா?

பஞ்சாபின் அழகிய அணைகள் பற்றி தெரியுமா?

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக விளங்குகிறது. இமயமலைக்கு செல்லும்

By Udhaya

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான பதான்கோட், கங்ரா மற்றும் டல்ஹௌசி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அதோடு இந்த நகரம் இமயமலை தொடருக்கு நுழைவு வாயிலாக விளங்குகிறது. இமயமலைக்கு செல்லும் முன் பல சுற்றுலாப் பயணிகள் இந்நகருக்கு வருவதுண்டு. 1849-ஆம் ஆண்டு வரை, பதானியா குலத்தை சேர்ந்தவர்கள் ஆண்ட நூர்பூர் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கியது பதான்கோட். பதான்கோட்டிலும் அதனை சுற்றியும் பல சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. அவைகளில் முக்கியமான ஒன்று தான் 900 ஆண்டுகளுக்கு முன் பதானியா ராஜ்புட்களால் கட்டப்பட்ட நூர்பூர் கோட்டையாகும். இது போக ஷாஹ்பூர்கண்டி கோட்டை, கத்கர் சிவன் கோவில் மற்றும் ஜுகியல் நகரியம் போன்றவைகள் புகழ் பெற்ற தலங்களாக உள்ளன. வார இறுதி நாட்கள் மற்றும் பதான்கோட்டின் உள்ளூர் விடுமுறை தினங்களை களிக்க புகழ் பெற்ற தலங்களான ஜ்வாலாஜி மற்றும் சிண்ட்பூர்ணிக்கு செல்லலாம்.

தேய்ன் அணை

தேய்ன் அணை


தேய்ன் அணை என்றழைக்கப்படும் ரஞ்சித் சாகர் அணை பூமியை தோண்டி கட்டப்பட்ட அணைகளிலேயே பெரிய அணையாகும். மேலும் இந்தியாவிலேயே இங்கே தான் அதிக சுற்றளவை கொண்ட சுழலியூட்டுங் குழாய்கள் உள்ளன. தற்போது இது பஞ்சாபில் உள்ள மிகப்பெரிய ஹைட்ரோ எலெக்ட்ரிக் அணையாகும். ராவி நதியின் மீது அமைந்துள்ளது இந்த அணை. இதன் நகரியத்தை குருத்வாரா ஸ்ரீ சிங் சபா என்று அழைக்கின்றனர். அழகிய மலைகளும் ஏரியும் சூழ அமைந்திருக்கும் இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வருகிறது.

KawalSingh

நங்கல்

நங்கல்

நன்கு திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ள நகரமான நங்கல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடியிருப்புகளைக் கொண்டு சிறப்பாக பங்கீடு செய்யப்பட்டுள்ள தொகுதிகளுடன் காணப்படும் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்நகரம் நங்கல் நிக்கு, ஹம்பேவால் மற்றும் தொபேட்டா காலனி ஆகிய மூன்று கிராமங்களின் பகுதியாக இருந்துள்ளது. ஷிவாலிக்குகள் மற்றும் பல்வேறு நதிகளினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள நங்கலின் இயற்கை அழகு, காண்போரை கட்டிப்போடக்கூடியதாகும். 1955 ஆம் ஆண்டில் சட்லெஜ் நதியின் மேல் பக்ரா நங்கல் அணை கட்டப்பட்ட பின்னர் இந்த இடம் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த அணையிலிருந்து உருவான அழகிய ஏரி இவ்விடத்தின் பிரதான ஈர்ப்பாகத் திகழ்கிறது. சுற்றுலாப் பயணிகள் ஜுல்ஃபா மாதா கோயில், குருத்வாரா விபௌர் சாஹிப் மற்றும் ஸ்ரீ பாபா உதோ ஜி மஹாராஜின் வரலாற்று சிறப்புமிக்க கோயில் போன்ற பல்வேறு இதர ஸ்தலங்களுக்கும் சென்று வரலாம். ஏராளமான தர்மசாலாக்கள் மற்றும் விடுதிகள் இங்கு உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் தங்கும் வசதியைப் பற்று கவலை கொள்ளத் தேவையில்லை. ரூப்நகரின் முக்கிய நகரிலிருந்து சுமார் 63 கி.மீ. தொலைவில் உள்ள நங்கலை சாலை வழியாக எளிதில் சென்று அடையலாம்.

Ambuj Mishra

பக்ரா அணை

பக்ரா அணை

பக்ரா அணை, சட்லெஜ் நதியின் மீது அமைக்கப்பட்டுள்ள பக்ரா-நங்கல் அணையின் ஒரு அங்கமாகும். பிலாஸ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணை பக்ரா கிராமத்தின் பெயரில் இருந்தே தனது பெயரைப் பெற்றுள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய அணையாக அறியப்படும் இது, அதன் அபரிமிதமான நீர் மின் சக்தி ஜெனரேட்டர்களின் மூலம் இது அமைந்துள்ள மாவட்டத்துக்கு மட்டுமின்றி அருகாமையில் உள்ள மாநிலங்களான ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் ஆகியவற்றுக்குமான நீர் மின் சக்தி உற்பத்திக்கு பெருமளவில் உதவி புரிந்து வருகிறது. இப்பகுதியின் மழைக்கால வெள்ளப்பெருக்குகளைக் கட்டுப்படுத்தவும் இந்த அணை உதவுகிறது. அது மட்டுமின்றி, சிறப்பான நீர்ப்பாசன வசதியை நல்கி, இப்பகுதியின் விவசாய உற்பத்தியை உயர்த்தவும் உதவி வருகிறது. மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பிரபலமான நீர்த்தேக்கமான கோவிந்த் சாகரை தன்னகத்தே கொண்டுள்ள பெருமையையும் பெற்றுள்ளது இந்த அணைக்கட்டு. இதன் தனித்துவமான இயற்கை அழகு மற்றும் பச்சை பசேலென்ற சுற்றுப்புறம் ஆகியன நாடெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்த்து வருவதில் பெரும் பங்கு வகிக்கின்றன.

Raghbirkhanna

ஹைட்ராலிக் ஆராய்ச்சி நிலையம், பதான்கோட்

ஹைட்ராலிக் ஆராய்ச்சி நிலையம், பதான்கோட்

இங்கே காட்சியாக வைக்கப்பட்டுள்ள பல மாதிரி அணைகள் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்காகவும் இந்த ஹைட்ராலிக் ஆராய்ச்சி நிலையம் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த அணை மற்றும் நீர்ப்பாசன திட்டங்கள் கட்ட பயன்படுத்திய பொறியியல் நுட்பத்தை கண்டு ஆச்சரியப் படாத சுற்றுலாப் பயணிகள் இருக்குவே முடியாது. இந்த நிலையம் பதான்கோட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள மாலிக்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த மாதிரிகளின் முழு விவரத்தையும் அறிந்து கொள்ள அதனை பற்றிய விரிவான விளக்கங்களையும் காட்சிப்படுத்தியுள்ளது.

Karantsingh

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X