Search
  • Follow NativePlanet
Share
» »தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்

By Super Admin

முதலாம் ராஜராஜன் கட்டிய தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் எந்த அளவுக்கு கட்டிடக்கலையின் உச்சமாக கருதப்படுகிறதோ, அதற்கு கொஞ்சமும் குறையாத சிறப்புகளை, 2-ஆம் ராஜராஜனால் கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலும் பெற்றுள்ளது.

இந்தக் கோயிலில் காணப்படக்கூடிய மிக நுணுக்கமான கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளை தமிழ்நாட்டின் வேறெந்த கோயிலிலும் காண முடியாது.

கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், ஐராவதேஸ்வரர் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப் போற்றப்படுகின்றன.

இந்த மாதத்தின் டாப் 5 அட்டகாசமான கட்டுரைகள் கீழே

வரலாறு

வரலாறு

சோழ மன்னர்களில் 2-ஆம் ராஜராஜனால் 12-ஆம் நூற்றாண்டில் ஐராவதேஸ்வரர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்த இரண்டாம் ராஜராஜன், அங்கிருந்து பெயர்ந்து தாராசுரத்திற்கு வந்து இந்தக் கோயிலைக் கட்டியதாக சொல்லப்படுகிறது.

படம் : Vinoth Chandar

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

ஐராவதம் என்பது இந்திரனின் யானை. துர்வாச முனிவரின் சாபத்தினால் தன்னுடைய நிறத்தை இழந்த ஐராவதம், இங்கு வந்து சிவனை வழிபட்டு, சாப விமோச்சனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. இதன் காரணமாக இந்தக் கோயிலுக்கு ஐராவதேஸ்வரர் கோயில் என பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.

சிற்பிகளின் கனவு

சிற்பிகளின் கனவு

கட்டிட வல்லுனர்களால் "சிற்பிகளின் கனவு" என்று வர்ணிக்கப்படும் இந்தக் கோயில் முழுவதும் மிகவும் நுணுக்கமான சிறிய மற்றும் பெரிய சிற்பங்களால் நிறைந்துள்ளது. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.

படம் : Srikaanth Sekar

கொனார்க் பாணி வடிவமைப்பு

கொனார்க் பாணி வடிவமைப்பு

ஒரு தேரை, குதிரைகள் இழுத்துச் செல்வது போல அமைந்திருக்கும் ஐராவதேஸ்வரர் கோயில் கொனார்க் கோயிலை ஒத்துள்ளது.

படம் : Munish Palaniappan

ராஜ கம்பீர மண்டபம்

ராஜ கம்பீர மண்டபம்

ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது . இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வதுபோல் உள்ள சிற்பத்தின் சக்கரம், இன்றுவரை இந்தியக் கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.

படம் : Varun Shiv Kapur

சென்டிமீட்டர் அளவு சிற்பங்கள்!

சென்டிமீட்டர் அளவு சிற்பங்கள்!

ராஜ கம்பீர மண்டபத்தின் தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது. அதோடு நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே இங்கு மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.

படம் : Jean-Pierre Dalbéra

எமன் பெற்ற சாப விமோச்சனம்!

எமன் பெற்ற சாப விமோச்சனம்!

எமதர்மன் தான் பெற்ற சாபத்தால் உடல் எரிச்சல் தீர இங்குள்ள குளத்தில் நீராடி விமோச்சனம் பெற்றதாக நம்பப்படுகிறது.

படம் : Shriram Swaminathan

புதுமைகள்

புதுமைகள்

மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார், மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார். மேலும் கோயில் கருவரையில் லிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது.

படம் : Balaji.B

வித்தியாசமான சிற்பங்கள்!

வித்தியாசமான சிற்பங்கள்!

கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், மூன்றுமுகங்கள் மற்றும் எட்டுக்கைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.

படம் : sowrirajan s

புல்லாங்குழல் ஏந்திய சிவன்!

புல்லாங்குழல் ஏந்திய சிவன்!

அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும் குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல புதுமையான சிவன் சிற்பஙகள் இக்கோயிலில் காணப்படுகின்றன. இவற்றில் குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார்.

படம் : Jean-Pierre Dalbéra

இசைப்படிகள்

இசைப்படிகள்

நந்தியினருகே அமையப்பெற்றிருக்கும் பலி பீடத்தின் படிகள் இசையொலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளில் தட்டும்போது 'சரிகமபதநி' என்ற சப்த சுவரங்களும் ஒலிக்கின்றன.

படம் : Raamanp

உலகப்பாரம்பரியச் சின்னம்

உலகப்பாரம்பரியச் சின்னம்

1987-ல் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் 2004-ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரம் கோயிலும், ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.

படம் : Arian Zwegers

கல்வெட்டுகள்

கல்வெட்டுகள்

தமிழ்நாட்டு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புகளை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது. மேலும் இந்தக் கோயிலில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டில் ராஜராஜசோழனுக்கும் அவரது 5 மனைவியருக்கும் பள்ளிப்படை அமையப்பெற்றது என்ற செய்தி முதன் முதலாக அறியப்பட்டது.

படம் : Thamizhpparithi Maari

யானையா, காளையா??!!!

யானையா, காளையா??!!!

யானையா, காளையா என்று அடையாளம் காணமுடியாத அளவுக்கு இப்படி ஒரு அட்டகாச சிற்பத்தை அந்தக் காலத்திலேயே வடித்திருக்கிறார்கள்.

படம் : Balaji.B

தூண்கள்

தூண்கள்

மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் நுணுக்கமாகவும் அலங்கரிக்கப்பட்டுள்ள ஐராவதேஸ்வரர் கோயிலின் தூண்கள்.

படம் : Kanithapithan

நாட்டியத்தின் எல்லைகள்!

நாட்டியத்தின் எல்லைகள்!

நாட்டியத்தின் எல்லைகளை அழகாக விளக்குவதாக இந்தச் சிற்பம் காட்சி தருகிறது.

படம் : Jean-Pierre Dalbéra

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள்

63 நாயன்மார்கள் சிலையும் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன.

படம் : sowrirajan s

சுவரோவியம்

சுவரோவியம்

ஐராவதேஸ்வரர் கோயில் சுவற்றில் காணப்படும் சோழர்கால ஓவியம்.

படம் : Ssriram mt

இராமாயண காட்சி

இராமாயண காட்சி

வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து சுக்ரீவன் மீது அம்பெய்தும் ராமர்.

படம் : Balaji.B

கொடிமரம்

கொடிமரம்

ஐராவதேஸ்வரர் கோயிலின் கொடிமரம்.

படம் : Thamizhpparithi Maari

சிவனும், பார்வதியும்!

சிவனும், பார்வதியும்!

காளை மீது சிவபெருமானும், பார்வதி தேவியும்.

படம் : Rsp3282

பேன் பார்க்கும் குரங்கு

பேன் பார்க்கும் குரங்கு

குட்டிக் குரங்குக்கு பேன் பார்க்கும் அம்மா குரங்கு.

படம் : Rsp3282

நந்தி

நந்தி

ஐராவதேஸ்வரர் கோயிலின் நந்தி.

படம் : Thamizhpparithi Maari

கோயிலை எப்போது மற்றும் எப்படி அடைவது?

கோயிலை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடையலாம்

எப்போது பயணிக்கலாம்

படம் : Vinoth Chandar

ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?

பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X