Search
  • Follow NativePlanet
Share
» »தூங்குறதுக்காகவே சுற்றுலா! கொஞ்சம் வித்தியாசமா இல்ல... இந்த 6 இடத்துக்கும் தூங்க போங்க..

தூங்குறதுக்காகவே சுற்றுலா! கொஞ்சம் வித்தியாசமா இல்ல... இந்த 6 இடத்துக்கும் தூங்க போங்க..

அட நிஜமாத்தாங்க சொல்றோம். தூங்குறதுக்காகவே சுற்றுலா போகலாம். அதுவும் நம்ம இந்தியாவுல. நம்மளோட சுற்றுலா அப்படிங்குறது எதுக்காக.. என்ன காரணத்துக்காக நாம சுற்றுலா போறோம். இருக்குற நகரத்து இரைச்சல் தாங்காமலும், அலுவலக பள்ளி கல்லூரி அவஸ்தைகள்ல இருந்து சின்னதா ஒரு பிரேக் எடுத்துட்டு அட்டகாசமான ஒரு புத்துணர்வுக்காகத்தான.. அப்ப தூங்குறதும் ஒரு வகையில புத்துணர்வுக்குதான. ஆனா சின்ன வித்தியாசம் நம்ம ரூம்ல கெடந்து தூங்காம இந்த ஆறு எடத்துக்கும் போறோம்.

ஏண்ணே.. செவனேன்னு கெடந்து தூங்குறத உட்டுப்புட்டு இத்தன மயிலு தாண்டி போகனுமானு கேக்றவியலுக்கு பதில் இந்த கட்டுரையோட முடிவுல இருக்கு. படிச்சா நீங்களே புரிஞ்சிப்பீங்க..

நாகோ, இமாச்சல பிரதேசம்

நாகோ, இமாச்சல பிரதேசம்


நாகோவுக்கு சென்று திரும்பிய என் நண்பரோட உறவினர் சொன்னாரு. ரெண்டு மூனு கிமீக்கு அங்குட்டு எவனாச்சு வத்திபெட்டி பத்த வச்சாக்கூட இங்குட்டு கேக்குமாம். அந்த அளவுக்கு அமைதியான ஒரு இடம் இந்த நாகோ.

அட.. கொஞ்சம் நல்லா இருக்குல.. நம்ம கேக்குற பைக் ஹாரன் சத்தமும், இரைச்சல்களும் இல்லாம காதின் அருகில் காதல் மொழி பேசி விளையாடி, அன்புக்கு அடிமையாகி மடியில் படுத்து உறங்கிட சரியான ஒரு இடம்னா அது நிச்சயமா நாகோதான்.

குண்டூசி விழுந்தாகூட டிங்னு சத்தம் எழும்புமாம். அவ்ளோ அமைதி..

இங்க வீடுகள்லாம் எப்படி இருக்கும்னு நினைக்குறீங்க.

Sumita Roy Dutta

வீடுகளின் அமைவு

வீடுகளின் அமைவு

நம்ம ஊரு மாதிரிதான் ஆனா மலை அடிவாரம். குளிரும் மதிய வேளைகள்ல லைட்டா தொட்டுவுட்டு போறாப்ல வெய்யிலும் உள்ளாரு ஜிவ்வுனு ஏறும் பாத்துக்கிடுங்க.

அடடே.. அழகா இருக்கேனு பாத்தா எங்கயாச்சும் ஒரு சில வீடுகள் பக்கத்துல பக்கத்துல இருக்கும். கொஞ்சம் தள்ளி இருக்குறது தனிமையாலாம் பீலிங்கா இருக்காது. ஏன்னா பக்கத்துல நிறைய வயல்வெளிகளும், மலைகளும் மரங்களும் உங்களிடம் நலம் விசாரிக்கும்.

இங்க மட்டும் வந்து தங்குங்க.. அடடே என்னா சுகம் என்னா சுகம்.. நல்லா தூங்கி எந்திருச்சி போகலாம்.

Snotch

லடாக், ஜம்மு காஷ்மீர்

லடாக், ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் இப்ப வேணும்னா பதற்றமா இருக்கலாம். ஆனா சில இடங்கள் இருக்கு.. இங்கெல்லாம் மயான அமைதிதான் நிலவுது. இங்க எந்த பிரச்சனையும் இருக்காது. ஜாலியா சுற்றிப் பாக்கலாம். கொண்டாடலாம். உங்க துணையோட உங்களுக்கு இருக்குற தனிமைய திகட்ட திகட்ட அனுபவிக்கலாம். அதுவும் இல்லாம நல்லா தூங்கலாம்.

hamon jp

தூங்க மட்டும்தானா

தூங்க மட்டும்தானா

அட இவ்ளோ பைசா செலவு பண்ணிட்டு சொம்மா தூங்கி எந்திச்சி வர்றதுக்கா.. லடாக்க பாருங்கவே.. கொள்ள இடங்க கெடக்கு சுத்திப் பாக்க..

அதுவும் இல்லாம இங்க போட்டோ எடுத்து, அத பெருமையா கெத்தா சொல்லிக் காமிச்சிக்கலாம். அதுமில்லாம இங்க உங்களோட காதல் அனுபவத்த சொல்லி சொல்லி மகிழ ஏராளமான பகுதிகள் இருக்கு.. காஷ்மீர்னா சும்மாவா.. சும்மா குளு குளுனு.. நல்லா சுகமா தூங்கி எந்திருச்சி நிறைய இடங்கள சுத்திட்டு திரும்பி வாங்க..

Jochen Westermann

 ஆலப்புழா

ஆலப்புழா


சுத்தியும் தண்ணி.. தண்ணியில மிதக்குற போட்டு.. எந்த சலனமும் இல்லாம ஒரு அழகான ஆழமான தூக்கம். உங்களால முடியுமா.. முடியனுமே.. அப்பதானே ஆலப்புழாவுக்கு டூர் போக முடியும்.

இங்கன கெடக்கு ஆலப்புழா.. அட்ச்சி தூக்கி வண்டில போட்டா ஆறு மணி நேரத்துல போய் சேர்ந்துடலாம். சரி அங்க போயி என்ன பண்றது?

Mpmanoj

ஆலப்புழாவுல என்ன பண்லாம்

ஆலப்புழாவுல என்ன பண்லாம்

அட்டகாசமா ஒரு பயணம்.. போட்டிங்க்.. ரொம்ப ஸ்லோவா அலுங்காம குலுங்காம படகுல நீங்களும் உங்க காதல் துணையும்தான்.. இந்த உலகமே உங்களுக்கு படைக்கப்பட்டதுதான். அப்பா அம்மா மாமா மாமி நாத்தானாருனு யாருமே இல்லாம தொந்தரவே இல்லாம மகிழ்ச்சிய வெளிப்படுத்த இது சிறப்பான இடமாச்சே.. அதோட சுத்திப் பாக்க ஏகப்பட்ட எடம் கெடக்குது.

சுத்தி சுத்தி டயர்ட் ஆகிட்டீங்கன்னு வைய்ங்க.. நேரா போட் ஹவுஸ் வந்துடுங்க.. ஆற்றோட படகோட.. படகோட நீங்களும் படுத்து உறங்குங்க.. உங்க வீட்டு தூக்கம் எங்க வீட்டு தூக்கம் இல்ல.. உலகமகா தூக்கத்த போட்டுட்டு ஊருக்கு கிளம்புங்க.. யாரு கேக்குறா.. அனுபவிக்குறதுக்குதான இந்த லைஃப்.. வேற எதுக்கு.

Prof. Mohamed Sharee

கன்ஹா தேசியப் பூங்கா

கன்ஹா தேசியப் பூங்கா

வெறுமனே தூங்குறதுக்கு கன்ஹாவுக்கு போக சொல்லல.. ஆனா காட்டுல தூங்குற அந்த அனுபவம் எப்படி இருக்கும்னு உங்களுக்கு அனுபவிச்சி பாக்க தோணுதா.. ?

காட்டு சவாரி போயி, காடு முழுக்க சுத்தி பாருங்க...ரொம்ப டயர்ட் ஆய்டுவீங்க அப்கோர்ஸ்.. இங்க புலி இருக்கு, குரங்கு, கரடி அப்றம் இன்னும் நிறைய விலங்குகள்லாம் இருக்கு.. எல்லாத்தையும் பாத்துட்டு திரும்பி வந்தீங்கன்னா.. ஒரு நல்ல படுக்கை.. சுத்தியும் காடுகளுக்கே உரித்தான நிசப்தம்.. அப்பப்ப ஒரு விதமான சத்தம். உலகத்துலயே வேற யாருமே இல்லனு ஒரு எண்ணம் உங்களுக்குள்ள வரும்.

நீங்களும் உங்க துணையோட தனியா இருக்க இதுவும் சிறப்புதானே..

Asimmateen1

பெல்லிங்

பெல்லிங்

காங்க்டாக் சிக்கிம் மாநிலத்தின் சிறந்த ஊர் எதுனு யாருகிட்டயாச்சும் கேட்டீங்கன்னு வைங்க. நிச்சயம் இதத்தான் சொல்லுவாங்க.. ஆமா நிச்சயமா நல்ல பகுதிதான். ஏன்னா அப்படி ஒரு அமைதியான தூக்கத்தை உங்களுக்கு தரப்போகுதே. அப்படி என்னெல்லாம் கிடைக்கும் அப்படி தான நினைக்குறீங்க?

Nagarajupingali

வாங்கோ.. தூங்குங்கோ.. காதலிங்கோ..

வாங்கோ.. தூங்குங்கோ.. காதலிங்கோ..


இல்லிங்க்... ஏதோ சொல்லணும்னு தோணிச்சிங்க்.. காங்டாக்ல இருந்துங்க் 117 கிமீ தூரத்ல இருக்குதுங்க். பச்சை நிறத்தில் அழகிய வண்ணங்களில் சுற்றியும் இருக்கும் மலைகள், காய் கறி செடிகள், மரங்கள், அதில் பூக்கும் மலர்கள், உதிர்ந்து விழும் இலைகள், நீர் நிலைகள், நிலை குலையா அழகுச் சுற்றுப் புறங்கள் என உங்களை மகிழ்விக்கும் அட்மாஸ்பியர் என்விரான்மென்ட் கொண்டிருக்கிறது.

புகைப்படம் எடுக்க கை துரு துருனு வரும். ஏன்னா அவ்ளோ அழகு.. நீங்க லைட்டிங், பில்டர்னு எதுவுமே செட் பண்ணத் தேவையில்ல, நேச்சுரல் லைட்டிங்க்ல அட்டகாசமான புகைப்படங்கள் எடுக்கனுமா பெல்லிங்க்கு வாங்க...

இங்க வந்தீங்கன்னா தூங்கி எழுந்து காதலிக்கலாம். காதலிச்சி டயர்ட் ஆகி தூங்கலாம்.

Gauranshnm18

டோர்ஸ், மேற்கு வங்கம்

டோர்ஸ், மேற்கு வங்கம்

டோர்ஸ்... உங்களுக்கு டீ பிடிக்கும் என்றால் நிச்சயம் வரலாம்... டீ பிடிக்கலனாகூட வரலாம் தப்பில்ல.. உங்களோட அழகிய எண்ணங்களை நிகழ்காலத்துல முயற்சித்து பாக்குறதுக்கு நிச்சயம் சிறந்த இடமா இது இருக்கும்.

டார்ஜிலிங் பக்கம்தான். சிலிகுரி மாவட்டத்துல வடக்கு பக்கம் இருக்கு இந்த பகுதி.

தூங்கி எழுந்து மகிழ்றது மாதிரி இங்க பாக்கவேண்டிய இடங்கள்னா அது கொருமரா தேசிய பூங்கா, ஜல்டாபாரா காட்டுயிர் சரணாலயம், புக்ஸா புலிகள் சரணாலயம்னு நிறைய இடங்கள் இருக்கு.

இங்க ஒரு ரூம் எடுத்து தூங்கி எந்திச்சீங்கன்னா அப்படி ஒரு அழகான அனுபவம் கிடைக்கும்..

என்னங்க..இந்த ஆறு இடத்துல ஆலப்புழா மட்டும்தான் பக்கத்துல இருக்குனு நினைக்குறீங்களா.. வாராணம் ஆயிரம் சூர்யா சொல்றமாதிரி இங்க இருக்கு அமெரிக்கா.. அதவிட பக்கத்துலதா இந்த ஆறு இடங்களும் இருக்கு.. வாழ்க்கைய வாழணுமா.. சும்மா என்ஜாய் பண்ணுங்கப்பு... ஆமாப்பு... என்ஜாய் பண்ணுங்க..

Rajibnandi -

Read more about: himachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X