Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா?

தமிழகத்திலேயே அதிக அளவு மழை பெறும் இடம் எது தெரியுமா?

மழை.. பூமிக்கு கிடைத்த வரம். அப்ப மற்ற கிரகங்களிலெல்லாம் மழை வருமா என்பதெல்லாம் இருக்கட்டும். இந்தியாவிலேயே அதிக மழை பெறும் ஊர் எது தெரியுமா. ஆமா மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சி தான். அப்றம்... தமிழகத

By Udhaya

மழை.. பூமிக்கு கிடைத்த வரம். அப்ப மற்ற கிரகங்களிலெல்லாம் மழை வருமா என்பதெல்லாம் இருக்கட்டும். இந்தியாவிலேயே அதிக மழை பெறும் ஊர் எது தெரியுமா. ஆமா மேகாலயாவில் இருக்கும் சிரபுஞ்சி தான். அப்றம்... தமிழகத்தில்... சரி.. மழை அதிகம் பெய்யும் அப்படினாலே அந்த இடம் நிறைய செழிப்பான தாவரங்களோடத் தானே இருக்கும். அப்போ இயற்கையாவே சுற்றுலாவுக்கான அம்சங்கள் நிறைந்திருக்கும் அல்லவா. அப்படி சுற்றுலாவுக்கான அம்சங்கள் நிறைந்த ஒரு இடத்துக்கு இப்பவே திட்டமிட்டு போகலாமா?

தேவலா

தேவலா

தேவலா எனும் பகுதி தமிழ்நாடு - கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள ஒரு பகுதியாகும். இதை பகுதி என்று சொல்வதைவிட காடு என்றுதான் சொல்லவேண்டும். மசினகுடிக்கு எப்படி சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து செல்கின்றனரோ அதைப் போல இன்னும் இரண்டு மூன்று வருடங்களில் இங்கு செல்வார்கள். அந்த அளவுக்கு சிறப்பான இடம் இதுவாகும். அப்படி இந்த இடத்துக்கு எப்படித்தான் போறதுனு நீங்க கேக்குறது புரியுது.. வாங்க போகலாம்.
Jaseem Hamza

 எப்படி செல்வது

எப்படி செல்வது

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த இடம் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் விரும்பும் ஊட்டிக்கு அருகேதான் அமைந்துள்ளது. இது பெரும்பாலானோரால் கேரள வனப்பகுதி என்று நம்பப்பட்டாலும், இது தமிழகத்தின் பகுதிதான்.

கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், ஊட்டி வழியாக தேவலாவை அடையமுடியும்.

அல்லது கோயம்புத்தூர் பாலக்காடு மன்னார்க்காடு நீலாம்பூர் வழியாகவும் இந்த ஊரை அடைய முடியும்.

 சுற்றுலா செல்வோம்

சுற்றுலா செல்வோம்


தேவலா மற்ற இடங்களைப் போல் இருந்தாலும், இதற்கு ஒரு தனித்தன்மை உண்டு. இங்கு சுற்றுலாப் பயணிகள் என நிறைய பேரைக் காணமுடியாது. அழகின் மொத்த உருவமே உங்கள் கண் முன் இருப்பதாக தோன்றும் இந்த இடத்தை நீங்கள் பார்க்கும்போது.

இந்த காடுகளின் நடுப்பகுதிகளில் சில விலையுயர்ந்த விடுதிகளும் வசதியான விடுதிகளும் இருக்கின்றன. அவற்றை தங்க பயன்படுத்திக்கொள்ளலாம் என்றாலும், அருகில் காணவேண்டிய இடங்களுக்கு செல்வது சிறந்தது.

100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த இடம் மிகவும் சிறப்பான சுற்றுலாவுக்கு வழிவகுக்கும்

கடல் மட்டத்திலிருந்து 1300 அடி உயரத்தில் இருப்பதால் இயற்கையாகவே கோடைக்கு உகந்த நிலப்பரப்பாக இருக்கிறது.

AmirthaJawaharlal

தேவாலா அருகே கட்டாயம் காண வேண்டிய இடங்கள்

தேவாலா அருகே கட்டாயம் காண வேண்டிய இடங்கள்

பண்டலூர், உப்படி எனும் மலைக்கிராமங்கள் இதன் அருகே இருக்கின்றன. நீங்கள் நல்ல சுற்றுலாவை அனுபவிக்கு இங்கு செல்லமுடியும். ஊட்டியிலிருந்து தேவாலா செல்லும் வழியில் நடுகனி எனும் ஊர் இருக்கிறது. இங்கு சுற்றிப்பார்க்க சில இடங்கள் பசுமையாக அமைந்திருக்கிறது. மேலும் இங்கு தோட்டம் அமைந்துள்ளது. உள்ளூர் மக்களின் உதவி கிடைத்தால் இங்குள்ள மலைப் பகுதியில் உச்சிக்கு சென்று பார்க்கலாம். எனினும் இதில் அனுபவம் இல்லாதவர்கள் செல்வது ஆபத்தானது. நமது வாசகர்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஊட்டியிலிருந்து செல்லும்போது சன்டிநுல்லா என்ற பெயரில் ஒரு பெரிய ஏரி காணப்படுகிறது. இதன் அருகே இருக்கும் காடுகளுக்கு குலிசோலை பாதுகாக்கப்பட்ட காடுகள் என்று பெயர். இங்குதான் காமராஜர் சாகர் அணை என்ற ஒன்று இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் பைக்காரா அணையும் நீர்வீழ்ச்சியும் கண்ணில் படுகின்றன. அதன் பிறகு சில பல கொண்டை ஊசி வளைவுகள் ஒரு இடம் நமக்கு வித்தியாசமாக காட்சி தருகிறது அதுதான் ஊசிப்பாறை காட்சி முனை. இங்கிருந்து உலகத்தை பார்க்கும் ரசனையே தனிதான்.

RajeshKavil

ஊட்டி அருகே நீங்கள் நிச்சயம் தவற விடக்கூடாதவை

ஊட்டி அருகே நீங்கள் நிச்சயம் தவற விடக்கூடாதவை


வென்லாக் டவுன்ஸ்

வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில், ஐரோப்பியர்கள் மத்தியில் இந்த இடம் வேட்டைக்கு மிகவும் பிரபலமாக இருந்தது. பிரபலமான ஊட்டியின் வேட்டை நடைபெற்று வந்த இடம் இதுதான்.

முக்கூர்த்தி தேசிய பூங்கா

முக்கூர்த்தி தேசிய பூங்கா நீலகிரியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்தப் பூங்கா ஊட்டி மலையின் மேற்கில் மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்த இடத்தில் ஒரு தேசிய பூங்கா அமைக்கப்பட முக்கிய காரணம், நீலகிரியின் தார் வகையைப் பாதுகாக்கவே. இது மேற்கு தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியாக இருப்பதால், இந்த தேசிய பூங்கா யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மையமாகத் திகழ்கிறது. முக்கூர்த்தி தேசிய பூங்கா சில பகுதிகளில் உயர்த்தப்பட்டுள்ளது, இந்த ஏற்றங்கள் 4.900 அடி முதல் 8.625 அடி வரை வேறுபடுகின்றன. பூங்காவில் உள்ள பிரபலமான சிகரங்கள் - கொல்லரிபெட்டா , முக்கூர்த்தி மற்றும் நீலகிரி சிகரம். இந்த மூன்று சிகரங்களும் பூங்காவில் உயர்ந்துள்ளன. சிகரங்களின் சிறப்பு அவற்றில் உள்ள கிரானைட் பாறைகள்.

பொடானிக்கல் கார்டன்

பொடானிக்கல் கார்டன் எனப்படும் அரசு தாவரவியல் பூங்கா, 22 ஹெக்டேர் பரப்பளவில், ஊட்டியில் அமைந்துள்ளது. தொட்டபெட்டா மலைச் சரிவுகளில் விரிந்துள்ள இந்தப் பூங்காக்கள், பசுமையான கம்பளம் போன்று காட்சியளிக்கும். இந்தப் பூங்காவை பராமரிக்கும் பொறுப்பு தமிழ்நாடு தோட்டக்கலை துறையிடம் உள்ளது. இந்தப் பூங்கா 1847ல், ஆங்கிலக் கட்டிடக்கலை நிபுணர் வில்லியம் கிரஹாம் மெக்இவோர் என்பவர் மூலம் வடிவமைக்கப்பட்டது. சுதந்திரத்திற்கு முன், உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. அதுவும் மாதத்திற்கு ரூ.3 கட்டணத்தில், ஐரோப்பியர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. இங்கு ஏராளமான தாவர இனங்கள் காணப்படுவதால், ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் லட்சக் கணக்கில் வருகிறார்கள். செடிகள், கொடிகள், மரங்கள் மற்றும் பொன்சாய் வகைத் தாவரங்கள் உள்ளன. பூங்கா வளாகத்தில், குறைந்தது 20 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிற ஒரு மரத்தின் தண்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கிறது.


பனிச்சரிவு ஏரி

நீலகிரி மலையில் அமைந்துள்ள பனிச்சரிவு ஏரி ஊட்டியில் இருந்து சுமார் 22 கிமீ தொலைவில் உள்ளது. 19 ஆம் நூற்றாண்டின் போது இந்தப் பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவின் காரணமாக இந்தப் பெயர் அமைந்தது.

சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் மத்தியில் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக உள்ளது இந்த ஏரி. ஏரியைச் சுற்றியுள்ள மலைகள்,மெக்னொலியாஸ், ரோடோடென்ட்ரொன்ஸ் மற்றும் ஆர்க்கிட் மலர்களால் மூடப்பட்டு, ரம்மியமான தோற்றத்தை கொடுக்கும். ஏரியில் சில மக்கள் மீன்பிடிக்கவும் செய்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் மீன் பிடிக்கத் தேவையான வலை, தண்டுகள் மற்றும் மற்ற பாகங்களை வழங்கும் கடை ஒன்று அருகே திறக்கப்பட்டுள்ளது.

சில சுற்றுலா பயணிகள், ஏரிக்கு அருகே முகாம்கள் அமைத்து தங்குவர். சிலர் படகு விளையாட்டை விரும்புகின்றனர் சிலர் ட்ரெக்கிங் போன்ற சாகச செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இப்படியாக, தேவாலா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாக வீடு திரும்பலாம். இதுபோன்ற கட்டுரைகள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்க மேலுள்ள மணி பொத்தானை அழுத்தி நோட்டிபிகேஷன் ஆன் செய்யுங்கள்.

AmirthaJawaharlal

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X