Search
  • Follow NativePlanet
Share
» »தேவ்பாக் - சொக்கவைக்கும் உல்லாச கிராமம்!!!

தேவ்பாக் - சொக்கவைக்கும் உல்லாச கிராமம்!!!

By

தேவ்பாக் கடற்கரை கிராமம் கர்நாடகாவின் கர்வார் மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றில் அமைந்துள்ளது.

தேவ்பாகின் நீண்ட வெள்ளை மணல் பரப்பும், ஒளி வீசும் வானமும் அதை பூலோக சொர்க்கமாகவே மாற்றியிருக்கிறது. ஒருமுறை தேவ்பாக் வந்த மகாகவி ரபீந்திரநாத் தாகூர் அதன் கவர்ச்சியில் மயங்கி தேவ்பாகைப் பற்றிப் பாடியுள்ளார்.

அற்புதமான ஓய்வு நேரம்!!!

அற்புதமான ஓய்வு நேரம்!!!

கடற்கரையில் காலாற நடந்தோ, கைப்பந்து விளையாடியோ அல்லது சூரியன் கடலில் இறங்கும் காணக்கிடைக்காத அஸ்தமன காட்சியை பார்த்துக்கொண்டோ உங்கள் ஓய்வு நேரத்தை மகிழ்ச்சியுடன் களிக்கலாம்.

படம் : Natesh Ramasamy

கவர்ச்சி அம்சங்கள்

கவர்ச்சி அம்சங்கள்

கடற்கரையில் விளையாடுவதையும், ஓய்வெடுப்பதையும் தவிர தேவ்பாகை சுற்றி வேறு சில கவர்ச்சியான அம்சங்களும் இருக்கின்றன. நீர் மூழ்கு விளையாட்டு, பாராசூட் சறுக்கு, படகுச்சவாரி, மோட்டார் சொகுசுப்படகுப்பயணம், ஆழ்கடல் நீச்சல் போன்ற பல வகையான நீர் விளையாட்டுகளும் பொழுது போக்கு அம்சங்களும் இங்கு நிறைந்துள்ளன.

படம் : Abhijeet Rane

குடில்கள்

குடில்கள்

காடுகளுக்கு மத்தியில் உள்ள தேவ்பாக் கடற்கரை கிராமத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு வசதியாக மரத்திலாலும், மூங்கில்களாலும் அழகான சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

படம் : Kunal Mukherjee

கிராம மக்கள்

கிராம மக்கள்

கடற்கரையிலிருந்து தேவ்பாக் கிராமத்துக்கு சென்றால் அங்கு கிராம மக்கள் கானாங்கெளுத்தி மீன், நண்டு போன்றவற்றை பையில் வைத்து எடுத்துச் செல்வதை பார்க்கலாம்.

படம் : Mujib MK

கடலில் மீன் பிடிக்கலாம்!

கடலில் மீன் பிடிக்கலாம்!

நீங்கள் ஒரு கட்டுமரத்தை அமர்த்திக்கொண்டு கடலுக்குள் சென்று மீனவர்கள் உதவியுடன் தூண்டிலிலும், வலையிலும் மீன் பிடித்து பொழுதை கழிக்கலாம்.

படம் : solarisgirl

சங்கமம்

சங்கமம்

சீறிப்பாய்ந்து வரும் காளி ஆறு கடலில் கலக்கும் காட்சி அற்புதமானது. எனவே நீங்கள் தேவ்பாக் செல்லும்போது அந்தக் காட்சியை காண மறந்துவிடாதீர்கள்.

படம் : Mujib MK

மோட்டார் படகு பயணம்

மோட்டார் படகு பயணம்

மோட்டார் படகுகளில் அதிவேகமாக சீறிப்பாய்ந்து செல்வது தேவ்பாகுக்கு சுற்றுலா வருபவர்கள் ஆர்வத்தோடு ஈடுபடும் பொழுதுபோக்கு.

படம் : Abhijeet Rane

அருகாமை ஸ்தலங்கள்

அருகாமை ஸ்தலங்கள்

தேவ்பாக் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள சிவகாட் கோட்டை, வெங்கட்ரமணா கோயில் மற்றும் நாகநாத கோயில் ஆகிய இடங்களையும் சுற்றுலாப் பயணிகள் தவறவிட்டுவிடக்கூடாது.

படம் : Abhijeet Rane

கார்வார் டூ தேவ்பாக்!

கார்வார் டூ தேவ்பாக்!

கார்வார் கடற்கரையிலிருந்து தேவ்பாக் கடற்கரை கிராமம் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு செல்வதற்கு கார்வாரிலிருந்து ஃபெர்ரி படகுகள் இயக்கப்படுகின்றன.

படம் : Abhijeet Rane

கார்வாரை எப்படி அடைவது?

கார்வாரை எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Abhijeet Rane

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

கார்வார் ஹோட்டல்கள்

படம் : Mujib MK

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X