Search
  • Follow NativePlanet
Share
» »தர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயில் பற்றி தெரியுமா உங்களுக்கு?

தர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயில் பற்றி தெரியுமா உங்களுக்கு?

By Naveen

அந்நிய மதங்கள் நுழைந்து வாள் முனையிலும், நம் மக்களின் வறுமையை பயன்படுத்தியும் இந்த மண்ணை பாழாக்கும் முன்பாக இந்திய தேசத்தில் பல்வேறு நம்பிக்கைள் கொண்ட மக்கள் ஒருவருக்கொருவர் இயைந்தே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக திகழும் ஒரு இடம் தான் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் தர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயில் ஆகும்.

கர்நாடக மாநிலத்தின் மிகமுக்கிய ஆன்மீக ஸ்தலமாக திகழும் இந்த கோயிலின் பின்னணியில் இருக்கும் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றைப் பற்றியும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக திகழும் இவ்விடத்தின் சிறப்புகள் பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

எங்கே இருக்கிறது?:

எங்கே இருக்கிறது?:

கர்நாடக மாநிலத்தில் உள்ள தக்ஷின கன்னடா மாவட்டத்தில் நேத்ராவதி நதிக்கரையில் அமைந்திருக்கிறது தர்மஸ்தலா என்னும் இந்த புண்ணிய கேந்திரம்.

கேரளாவில் உள்ள சபரி மலை, ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாச்சலபதி கோயில், தமிழகத்தில் உள்ள பழனி முருகன் கோயில் ஆகியவற்றுக்கு இணையானது இந்ததர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயில் ஆகும்.

Dinesh Kumar (DK)

மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டு:

மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டு:

சிவபெருமான் மஞ்சுநாதராக அருள்பாளிக்கும் இக்கோயிலில் ஹிந்து வழக்கப்படி பூஜைகள் நடந்துவந்தாலும் சமண மதத்தை சேர்ந்தவர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் இக்கோயில் இயங்கிவருகிறது.

இங்கே சிவபெருமானுக்கு இணையாக ஜைன மதத்தை சேர்ந்த தீர்ந்தங்கரர்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டு வழிபடப்படுகின்றனர்.

இந்த வழக்கத்திற்கு பின்னிருக்கும் வரலாற்றை கொஞ்சம் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டு:

மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டு:

பல காலத்திற்கு முன்பு இந்த பகுதியில் ஹெக்டே என்ற பெயர்கொண்ட ஜைன மதத்தை சேர்ந்த குடும்பத்தினர் வாழ்ந்துவந்திருக்கின்றனர். அவர்களுக்கு சிவபெருமானை தரிசிக்கவேண்டும் என்ற ஆசை வரவே தங்களுக்கு பணிவிடை செய்யும் அன்னப்பா என்பவரை அழைத்து ஒரு சிவலிங்கத்தை கொண்டுவருமாறு பணித்துள்ளனர்.

Dinesh Kumar (DK)

மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டு:

மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டு:

தனது எஜமானரின் கட்டளைக்கு ஏற்ப அடுத்த நாளே மங்களூருக்கு அருகே உள்ள கத்ரி என்ற இடத்தில் இருந்து ஒரு லிங்கத்தை கொண்டுவந்து பிரதிர்ஷ்டை செய்துவிடுகிறார் அன்னப்பா.

இந்த லிங்கத்தை சுற்றி தான் இன்று நாம் பார்க்கும் மிகப்பெரிய கோயிலானது ஜைன மதத்தை சேர்ந்த ஹெக்டே குடும்பத்தினரால் கட்டப்பட்டு இன்றுவரை நிர்வகிக்கப்படுகிறது.

Dinesh Kumar (DK)

கடவுளர் சந்நிதிகள்:

கடவுளர் சந்நிதிகள்:

இந்ததர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயிலில் சிவபெருமானான மஞ்சுநாதர், திரிமூர்த்திகளின் தாயான ஆதிபராசக்தி, தர்ம தெய்வங்கள் என்றலைக்கப்படும் காலரஹு, காலர்கயி, குமாரசுவாமி மற்றும் கன்னியாகுமரி ஆகியோரது சந்நிதிகளும் இருக்கின்றன.

Dinesh Kumar (DK)

யாத்ரிகர்கள்:

யாத்ரிகர்கள்:

ஒவ்வொருநாளும் சராசரியாக 10,000 பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகைதருகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாதி மத பேதமின்றி 'அன்னபூர்ணா' என்ற சத்திரத்தில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

Dinesh Kumar (DK)

திருவிழா:

திருவிழா:

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் இங்கு நடக்கும் 'லக்ஷதீபா' என்ற விழா இக்கோயிலில் நடக்கும் பிரதான விழாவாகும்.

இந்த விழாவின் போது கோயில் பிரகாரம் முழுக்கவும் தீபங்கள் ஏற்றப்பட்டு மொத்த கோயிலும் தீப ஒளியில் ஜொலிக்கிறது.

தர்ம திருமணம்:

தர்ம திருமணம்:

வரதட்சிணை கொடுமையை ஒழிக்கவும், திருமணம் செய்ய பொருளாதார வசதி இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டும் இக்கோயிலை நிர்வகிக்கும் ஹெக்டே குடும்பத்தை சேர்ந்த வீரேந்திர ஹெக்டே என்பவரால் 1972ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மணமக்களுக்கு இலவசமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது.

இத்திருமணத்திற்கு தேவையான தங்க தாலி, மனமக்களுக்கான உடை மற்றும் சில சீர்வரிசைகளும் இலவசமாக வழங்கப்படுகிறது.

Dinesh Kumar (DK)

பாஹுபலி சிலை:

பாஹுபலி சிலை:

தர்மஸ்தலா கோயிலுக்கு அருகிலேயே 1973ஆம் ஆண்டு ஒரே கல்லில் குடையப்பட்ட 39அடியும் 175டன் எடையும் கொண்ட மிகப்பெரிய பாஹுபலி சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

ஜைன மதத்தின் முக்கிய குருவாக பார்க்கப்படும் பாஹுபலியை மஞ்சுநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தவறாமல் வந்து வழிபட்டு செல்கின்றனர்.

எப்படி சென்றடைவது?:

எப்படி சென்றடைவது?:

தர்மஸ்தாலா கிராமம் பெங்களூரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு உடுப்பியிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலும், மங்களூரிலிருந்து 76 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

இந்த கிராமத்துக்கு கர்நாடகாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் தினந்தோறும் இயக்கப்படுகின்றன. பெங்களூரிலிருந்து சாலை மூலமாக தர்மஸ்தாலா சென்றடைய குறைந்தது 6 மணி நேரம் ஆகும்.

தமிழ் பயண வழிகாட்டி:

தமிழ் பயண வழிகாட்டி:

தர்மஸ்தலா ஸ்ரீ மஞ்சுநாதர் கோயிலை பற்றிய முழுமையான தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழில் உள்ள ஒரே பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Dinesh Kumar (DK)

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X