Search
  • Follow NativePlanet
Share
» » பச்சை பச்சை எங்கேயும் பச்சை ! இப்படி ஒரு இடம் இந்தியாவுலதானுங்க!

பச்சை பச்சை எங்கேயும் பச்சை ! இப்படி ஒரு இடம் இந்தியாவுலதானுங்க!

இந்தியாவின் இயற்கை அழகுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலை தன் பகுதியில் அமைந்திருக்கும் இடங்களை வளமாக மாற்றி வைத்திருக்கிறது. அப்படிபட்ட இடங்களில் நாம் நிச்சயம் காணவேண்டியது பாஞ்ச்கணி எனும் பகுதி. இயற்கையின் ஒட்டு மொத்த அழகையும் குத்தகைக்கு எடுத்ததுவோ என்னவோ தெரியவில்லை அப்படி ஒரு எழில் நிறைந்த பகுதி இது. இங்கு நிறைய இடங்கள் அருகாமையில் இருக்கின்றன. அதில் இன்று நாம் காணவிருப்பது தோம் அணை பற்றியும், அதன் அழகு புகைப்படங்களையும்தான். வாருங்கள் காண்போம்.

தோம் அணை

தோம் அணை

வாய் கிராமத்தின் அருகில் இந்த தூம் அணைக்கட்டு உள்ளது. இது மிகவும் அழகானதும், உழவுத் தொழிலுக்கு பயனுள்ளதானதாகவும் அமைந்துள்ளது.

solarisgirl

எப்போது கட்டப்பட்டது தெரியுமா

எப்போது கட்டப்பட்டது தெரியுமா

இந்த அணை எப்போது கட்டப்பட்டது தெரியுமா? விவசாய நீருக்கும் மின்சாரம் தயாரிக்கவும் உதவும் இந்த அணை 1976ல் கட்டப்பட்டது.

neelnimavat

 சுற்றுலாவுக்கு சிறந்த பொழுதுபோக்கு

சுற்றுலாவுக்கு சிறந்த பொழுதுபோக்கு


இந்த அணையில் நீர் விளையாட்டும் படகு சவாரியும் சிறந்து விளங்குகின்றன. இதற்காகவே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர். அதிவேக மோட்டார் படகுகள், ஸ்கூட்டர் படகுகள் போன்றவையும் இங்கு கிடைக்கின்றன என்பது ஒரு விசேஷமான அம்சம்.ஆனால் அதுமட்டுமல்ல.

Bagheera2

 இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைகள்

இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலைகள்

இந்த பகுதியில் நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து சென்றால் இயற்கையின் அழகை ஒரே நாளில் ரசித்துவிட்டு திரும்ப முடியும். உங்களுக்கான ஒரு திருப்தியும் கிடைக்கும். குடும்பம் அல்லது நண்பர்களுடன் பயணிக்கும் உங்களின் சுற்றுலா எந்த வித அதிருப்தியும் இல்லாமல் முழுக்க முழுக்க நிம்மதியான பயணமாக அமையும்.

The.sgr

 புகைப்படங்களை காண்போமா

புகைப்படங்களை காண்போமா

உங்களுக்காக சில புகைப்படங்களை இங்கு தருவிக்கிறோம். கண்டுகளியுங்கள். தொடர்ந்து அருகாமையிலிருக்கும் சுற்றுலாப் பகுதிகளையும் காண்போம்.

Kundansonuj

அழகின் உருவான தோம்

அழகிய தோம் அணையும் சுற்றுலா பகுதிகளும்

அழகின் உருவான தோம்

அழகிய தோம் அணையும் சுற்றுலா பகுதிகளும்

அழகின் உருவான தோம்

அழகிய தோம் அணையும் சுற்றுலா பகுதிகளும்

அழகின் உருவான தோம்

அழகிய தோம் அணையும் சுற்றுலா பகுதிகளும்

அழகின் உருவான தோம்

அழகிய தோம் அணையும் சுற்றுலா பகுதிகளும்

எங்கே இருக்கிறது

வாய் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 8 கிமீ தூரத்திலும், சதாராவிலிருந்து 38 கிமீ மற்றும் மும்பையிலிருந்து 155 கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த தோம் அணைப் பகுதி.

கிருஷ்ணா ஆற்றின் கருணையால் கிடைத்த இயற்கை வளம் கொண்டு சுற்றுலா பயணிகளை தன்பால் ஈர்த்து வருகிறது இந்த அணை.

உங்களுக்கு நினைவிருக்கா

சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் ஒரு பாடல் வரும். ஏக் தோ தீன் சார் என்று.. அந்த பாடலை சூர்யாவே பாடியிருப்பார். அந்த பாடலின் படப்பிடிப்பு நடந்த இடம் இந்த அணையிலிருந்து மிக அருகிலேயே அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த பகுதிகள் பஞ்ச்காணி என்று அழைக்கப்படுகிறது. இந்த படம் தவிர்த்து கன்காஜல், ஓம்காரா, தபாங், ஸ்வாதேஷ், இஸ்க்யா, சிங்கம்,தியோல், போல் பச்சன், ஜிலா காஸியாபாத் உள்ளிட்ட இன்னும் பல படங்கள் இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ளது.

வாசகர் விருப்பம்

வாசகர் ஒருவர் இந்த இடத்தை எப்படி வர்ணிக்கிறார் பாருங்கள். இது மிகவும் அழகான இடம்.. பார்ப்பதற்கு லா பங்காங் போலவே அச்சு அசலாக இருக்கிறது.(பங்காங் என்பது ஜம்முவின் லடாக் பகுதியில் இருக்கும் அற்புதமான இடமாகும்) நிச்சயமாக இது மிகச்சிறந்த சுற்றுலா. நண்பர்களே நீங்கள் அந்த கோவிலுக்கு சென்றீர்களா? என்றும் கேட்டுள்ளார் அவர்.

கோவில்

அவர் சொன்ன கோவில் வாய் கிராமத்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ள கிருஷ்ணா தேவி கோவில். இந்த கோவிலின் சிறப்பு என்பது சற்று வித்தியாசமானது. பெயரிலேயே அது இருக்கிறது. கிருஷ்ணா என்பது இங்கு கடவுளைக் குறிப்பதில்லை. அது ஆற்றின் பெயரைக் குறிக்கும் சொல். அந்த காலத்தில் சிறு தெய்வ வழிபாட்டை பின்பற்றிய மக்களின் கோவில் அது. இன்று பல பக்தர்கள் இங்கு தவறாமல் சென்று வருகின்றனர்.

எங்கு தங்கலாம்

நிச்சயமாக மகாபலேஸ்வர் தங்குவதற்கு மிகச் சிறந்த இடமாக அமையும். அல்லது கொஞ்சம் அருகிலேயே வேண்டும் என்றால் பஞ்ச்கணியில் அருமையான இயற்கை எழில் சூழ விடுதிகள் கிடைக்கின்றன. இதை விட சிறந்த தேர்வு ஒன்றும் இருக்கிறது. இந்த அணைக்கு அருகிலேயே வெறும் 4 கிமீ தொலைவில் பண்ணை வீடுகள் கிடைக்கின்றன. அப்றம் என்ன பயணத்துக்கு திட்டமிட்டுவிடலாம்தானே!

சரி சரி.. உங்கள் பயணத்திட்டத்துக்கு முன் சற்று இந்த அணைப்பகுதியின் அழகையும் ரசித்துவிட்டு செல்லுங்கள். புகைப்படங்களாக கொடுத்துள்ளோம்.

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

அழகிய தோம்

அழகிய தோம் அணையின் புகைப்படங்கள்

Read more about: travel maharastra
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X