Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பிரபலமான சாகச விளையாட்டுகள் என்னென்னவென்று தெரியுமா?

இந்தியாவில் பிரபலமான சாகச விளையாட்டுகள் என்னென்னவென்று தெரியுமா?

By Naveen

பயணங்கள் தரும் புதிய அனுபவங்கள் வாழ்க்கை மீதான நமது கண்ணோட்டத்தையே முழுதாக மாற்ற வல்லவை. பயணங்களின் போது சந்திக்கும் புதிய மனிதர்கள், புதிய இடங்களை காணும் கணங்கள், செய்யக்கிடைக்கும் புதிய விஷயங்கள் போன்றவை தான் வாழ்தல் மீதான காதலை நமக்கு உணர்த்துகிறது.

அதிலும் குறிப்பாக சவால்கள் நிறைந்த சாகச பயணங்களும், விளையாட்டுகளும் நமக்குள் பெருமாற்றத்தை ஏற்ப்படுத்துவதோடு மன உறுதியையும் அளிக்கின்றன. அப்படி இந்தியாவில் உள்ள பிரபலமான சுற்றுலாத்தலங்களில் நடக்கும் பலவிதமான சாகச விளையாட்டுகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

சங்களா பள்ளத்தாக்கு:

சங்களா பள்ளத்தாக்கு:

திபெத்திய எல்லையில் இருந்து வெறும் 30கி.மீ தூரத்தில் உள்ள இந்த சங்களா பள்ளத்தாக்கு மலையேற்றம் செய்ய அற்புதமான இடமாகும். இன்னும் வெளியுலகிற்கு அதிகம் அறிமுகம் ஆகாத இந்த ஊரின் மற்றொமொரு சிறப்பு இங்கே தான் உலகின் மிகவும் சுவையான ஆப்பிள்கள் கிடைக்கிறதாம்.

Eshank Sehgal

சங்களா பள்ளத்தாக்கு:

சங்களா பள்ளத்தாக்கு:

சங்களா பள்ளத்தாக்கு ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் கின்னார் மாவட்டத்தில் உள்ளது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியானதால் 1989ஆம் ஆண்டு வரை வெளியாட்கள் யாரும் இங்கே வர அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Lihi Koren

சங்களா பள்ளத்தாக்கு - ட்ரெக்கிங் பாதை:

சங்களா பள்ளத்தாக்கு - ட்ரெக்கிங் பாதை:

சங்களா-பத்செரி-ரக்செம்-சித்குள்-சங்களா என்ற இந்த பாதையில் பொதுவாக ட்ரெக்கிங் நடைபெறுகிறது. இந்த ட்ரெக்கிங் பயணத்தை நிறைவு செய்ய நான்கு நாட்கள் ஆகும். வழி நெடுகிலும் ஆப்பிள் தோட்டங்களையும், ஊசியிலை காடுகளையும், ஹிந்து மற்றும் புத்த மத கோயில்களையும்,இமயமலையின் பேரழகையும் நெருக்கமாக கண்டு மகிழலாம்.

Wolfgang Maehr

சங்களா பள்ளத்தாக்கு :

சங்களா பள்ளத்தாக்கு :

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தலைநகரான சிம்லாவில் இருந்து 222கி.மீ தொலைவில்சங்களா பள்ளத்தாக்கு உள்ளது. சிம்லா-சங்களா உலகில் இருக்கும் மிகவும் ஆபத்தான சாலைகளில் ஒன்றாக சொல்லப்படுகிறது. கரணம் தப்பினால் மரணம் என்பது போன்ற ஆபத்தான வளைவுகள் இந்த சாலையில் இருக்கின்றன.

Ashish Gupta

சங்களா பள்ளத்தாக்கு :

சங்களா பள்ளத்தாக்கு :

அபாயகரமான சிம்லா-சங்களா சாலை !!

Nikhil Hirurkar

குல்மார்க்:

குல்மார்க்:

இந்தியாவில் இருக்கும் குட்டி சுவிற்சர்லாந்து என்று அழைக்க அனைத்து தகுதிகளையும் தன்னிடத்தே கொண்ட இடம் காஷ்மீர் மாநிலத்தில் இருக்கும் குல்மார்க் தான்.

அதுவும் குளிர்காலத்தில் மொத்த ஊரே ஒரு விளையாட்டு திடலாக மாறிவிடுகிறது. குளிர்கால விளையாட்டுகளில் ஈடுபட விரும்புகிறவர்கள் நிச்சயம் வர வேண்டிய இடமாகும் இது.

batschmidt

குல்மார்க்:

குல்மார்க்:

ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள குல்மார்கில் ஒவ்வொரு குளிகாலத்தின் போதும் ஸ்கீயிங்எனப்படும் பனிச்சறுக்கு, ஐஸ் ஸ்கேடிங் மற்றும் ஸ்னோ போர்டிங் போன்ற பனியில் ஈடுபடக்கூடிய சாகச விளையாட்டுகள் நடக்கின்றன.

Sailing Nomad

குல்மார்க்:

குல்மார்க்:

குல்மார்கில் உள்ள அபர்வத் என்ற மலையின் மேல் தான் இந்த சாகச விளையாட்டுகள் அனைத்தும் நடக்கின்றன. கோண்டோலா என்ற இடத்தில் இருந்து 4கி.மீ கேபிள் கார் பயணத்தின் மூலமே இந்த மலையை நம்மால் சென்றடைய முடியும்.

இந்த பயணம் தான் உலகின் மிக நீளமான கேபிள் கார் பயணமாக சொல்லப்படுகிறது.

Utsav Verma

குல்மார்க்:

குல்மார்க்:

கோண்டோலா - அபர்வத் கேபிள் கார் பயணம் !!

ராப்டிங் :

ராப்டிங் :

ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றில் இயற்கையின் பேராற்றலுக்கு சவால் விட்ட படி படகில் அமர்ந்து சாகசப்பயணம் செல்வதென்பது அத்தனை சுலபம் இல்லை என்றாலும் சாகசங்களை விரும்புகிறவர்களுக்கு அது சாதாரணம் தான்.

சாகசப்பபடகு சவாரி ஹிமாலய மலைப்பகுதிகளில் ஓடும் ஆறுகளில் தான் முதன்முதலில் துவங்கப்பட்டது என்றாலும் தற்போது தென் இந்தியாவிலும் அது பிரபலமடைந்து வருகிறது

B Balaji

ராப்டிங் -ரிஷிகேஷ் :

ராப்டிங் -ரிஷிகேஷ் :

யாத்திரீகர்கள் வந்து செல்லும் முக்கிய இடங்களில் ஒன்றான ரிஷிகேஷ் சாகசப்படகு சவாரி செய்ய உலகின் சிறந்த இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. சிவபுரியில் இருந்து லக்ஷ்மண சுஹ்லா வரையிலான 16கி.மீ தொலைவு உள்ள ஆற்றுப்பதை பல ஆபத்தான திருப்பங்களையும், சுழல் உருவாகும் இடங்களையும் கொண்டுள்ளது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கு சாகசப்படகு சவாரி செய்ய ஏற்ற காலநிலை நிலவுகிறது.

மற்ற நேரங்களில் வெள்ளப்பெருக்கும் கடும் குளிரும் நிலவும் என்பதால் படகு சவாரி அந்நேரங்களில் இங்கு தடை செய்யப்படுகிறது.

B Balaji

ராப்டிங் - சன்ஸ்கர்:

ராப்டிங் - சன்ஸ்கர்:

படூம் மற்றும் சிமோ பகுதிகளுக்கு இடையே சன்ச்கர் ஆற்றில் நடக்கும் சாகசப்படகு சவாரி அந்தப்பகுதியின் பேரழகை ரசிக்க அருமையான வாய்ப்பை நமக்கு நல்குகிறது. ஆற்றின் இருபுறங்களிலும் 100 அடிக்குமேலான மலைகளை கடந்து செல்கையில் வேறெங்கோ மாய உலகம் ஒன்றினுள் செல்லும் பரவசம் நம்மை தொற்றிக்கொள்ளும்.

லடாக்கில் நாம் அதிகம் அறிந்திராத சில அழகான பிரதேசங்களை தாண்டி செல்லும் இந்த சாகசப்பயணம் சன்ச்கர் ஆறு இந்து மகா சமுத்திரத்தில் கலக்குமிடத்தில் நிறைவடைகிறது.

Philip Larson

ஸ்கூபா டைவிங்:

ஸ்கூபா டைவிங்:

ஆழ்கடலில் மூழ்கி நீந்தும் ஸ்குபா டைவிங் எனப்படும் இந்த சாகச விளையாட்டு தற்போது இந்தியாவில் வேகமாக பிரபலமடைந்து வரும் சாகச விளையாட்டுகளில் ஒன்றாகும். இது கடற்கரைகளை ஒட்டியிருக்கும் சுற்றுலா நகரங்களில் பரவலாக இப்போது நடத்தப்படுகிறது.

Sunphol Sorakul

ஸ்கூபா டைவிங்:

ஸ்கூபா டைவிங்:

ஸ்கூபா டைவிங் செய்யும் முன்பு 2-3 நாட்கள் பயிற்சி எடுத்துக்கொள்வது கட்டாயம். பயற்சி முடித்த பிறகு சுவாச உபகரணங்கள், நீச்சல் அடிக்க ஏதுவாக இருக்கும் பிரத்யேக உடைகள் போன்றவற்றை அணிந்துகொண்டு கடலில் மூழ்கி பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களையும், பவளப்பாறைகளையும் கண்டு ரசிக்கலாம்.

Arun Katiyar

ஸ்கூபா டைவிங்:

ஸ்கூபா டைவிங்:

இந்தியாவில் கோவா, லட்சத்தீவுகள், பாண்டிச்சேரி, அந்தமான் தீவுகள் போன்ற இடங்களில் ஸ்குபா டைவிங் தனியார் முகவங்களால் நடத்தப்படுகிறது. ஆழ்கடல் நீச்சல் மூலம் புதியதொரு உலகமான பேரழகு வாய்ந்த கடல் பகுதிகளை நேரடியாக ரசிக்களாம்.

Sunphol Sorakul

ஹாட் ஏர் பலூன்:

ஹாட் ஏர் பலூன்:

துருக்கி, கிரீஸ், ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மட்டுமே நடைபெற்று வந்த ஹாட் ஏர் பலூன் பயணங்கள் இப்போது இந்தியாவிலும் நடைபெற துவங்கியிருக்கின்றன. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் அதிகம் வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் சில தனியார் முகவங்களால் நடத்தப்படுகிறது.

ஹாட் ஏர் பலூன்:

ஹாட் ஏர் பலூன்:

ராஜஸ்தானில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களான உதய்பூர், ஜெய்பூர், ரதம்போர் மற்றும் புஷ்கர் ஆகிய நகரங்களில் நடத்தப்படுகிறது. இந்த ஹாட் ஏர் பலூன் பயணங்கள் பொதுவாக அதிகாலையில் சூரிய உதயத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவும், மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணிநேரம் முன்பாகவுமே நடத்தப்படுகிறது.

அதற்கு காரணம் அந்த சமயங்களில் தான் காற்றின் வேகம் குறைவாக இருக்கும். ஒருவேளை அந்த நேரத்திலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் இந்த பலூன் பயணம் ரத்து செய்யப்படும்.

ஹாட் ஏர் பலூன்:

ஹாட் ஏர் பலூன்:

ஹாட் ஏர் பலூனில் ஒரு மணிநேரம் வரை நாம் வானில் பறக்கலாம். வானில் பறக்கும் நேரத்தை தவிர அதற்காக தயாராகும் நேரத்தை கணக்கிட்டால் மொத்தம் மூன்று மணிநேரம் வரை பலூனில் நாம் இருக்கலாம். நாம் பறக்கும் நேரத்தில் இருக்கும் வானிலை, காற்றோட்டம் போன்றவற்றை பொறுத்து தரையிலிருந்து 1200 அடி உயரம் வரை நாம் செல்லலாம்.

ஹாட் ஏர் பலூன்:

ஹாட் ஏர் பலூன்:

ஒரே சமயத்தில் இந்த பலூனில் நான்கு பேர் முதல் எட்டுப்பேர் வரை பயணம் செய்யலாம். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பலூனில் ஏற அனுமதியில்லை.

ராஜஸ்தானில் வருடம் முழுக்க ஒரே மாதிரியான வெப்ப நிலையை நிலவுகிறது. எனவே இதன் காரணமாக பலூன் பயணம் ரத்து செய்யப்படுவது கிடையாது. அப்படியே ரத்து செய்யப்படுவதாய் இருந்தால் நிறுவனத்தால் நம்மிடம் அதுகுறித்து முன்னரே தெளிவாக சொல்லப்பட்டு பணம் திரும்ப அளிக்கப்படும்.

ஹாட் ஏர் பலூன்:

ஹாட் ஏர் பலூன்:

ஹாட் ஏர் பலூன் பயணம் மேற்கொள்ள அக்டோபர் முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டம் உகந்ததாகும். இதற்கு கட்டணமாக ஒருவருக்கு 8000-9000 வரை வசூலிக்கப்படுகிறது.

அடுத்த முறை எங்காவது சுற்றுலா சென்றால் அங்கே நடக்கும் சாகச விளையாட்டுகளையும் நிச்சயம் முயற்சி செய்து பாருங்கள்.

Read more about: adventure goa scuba diving kashmir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X