Search
  • Follow NativePlanet
Share
» »மோடி மசூதி, ரூப்மதியின் காதல், எண்ணெய் கோயில், காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் - எந்த ஊரில

மோடி மசூதி, ரூப்மதியின் காதல், எண்ணெய் கோயில், காளிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் - எந்த ஊரில

By Udhaya

இந்தியா பல்வேறு இனங்கள் வாழும் நாடு. அந்தந்த இனக்குழுக்களுக்கு உரிய தன்மையோடு, அவர்களின் பண்பாட்டையும் சேர்த்து பாதுகாப்பதில் இந்தியாவுக்கு நிகர் வேறெந்த நாடும் இல்லை. 1860ல் அரசி கட்டிய மசூதி, 11ம் நூற்றாண்டின், அழகிய திருக்கோயில், 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு நிறைவடையாத ஒரு மண்டபம், ரூப்மதியின் காதல் கதையை சுமக்கும் ஒரு ஏரி, எண்ணெய் வணிகரின் கோயில், காளி தெய்வத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோயில் ஆகியன பற்றி இந்த பதிவில் நாம் காண விருக்கிறோம்.

மோடி மசூதி

மோடி மசூதி


போபால் நகரத்தின் வரலாற்று பக்கங்கள் மட்டுமல்லாமல் இந்திய முஸ்லீம் பெண்களின் வரலாற்றிலும் தனியிடம் பெற்ற தலமாக மோடி மசூதி உள்ளது. 1860-ம் ஆண்டில் ஆட்சி செய்து வந்த சிக்கந்தர் பேகம் என்ற முஸ்லீம் அரசி இந்த மசூதியை கட்டுவதற்கான ஆணையை பிறப்பித்தார். அந்நாட்களில் நன்கு படித்தவராக இருந்த அவர், வெளித்தோற்றத்தில் நவீன கால மங்கையாகவும் உலவி வந்தார். டெல்லியிலுள்ள ஜும்மா மசூதியின் வடிவமைப்பையே பெரிதும் பெற்றுள்ள மோடி மசூதி, அந்த மசூதியின் அளவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது. அளவில் ஜும்மா மசூதியை விட சிறியதாக இருந்தாலும், மோடி மசூதி, அதன் கலைநயமிக்க கட்டிடக்கலை மற்றும் அற்புதமான வடிவமைப்புகளின் காரணமாக பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது. கருஞ்சிவப்பு நிற கோபுரங்கள் மற்றும் தங்க ஈட்டி போன்ற வடிவங்களை கொண்டுள்ளதால் காண்பவரைத் திணறடிக்கும் கலை மோடி மசூதிக்கு கைவந்த கலையாக உள்ளது. மின்னும் வெண்மை நிற பளிங்கு கற்களால் கட்டப்பட்டுள்ளதால் இந்த மசூதி வெண்மையாக பளபளப்புடன் காணப்படுகிறது. இந்த வண்ணச் சிதறல் மூலமாகவே இந்த மொத்த இடமும் சொர்க்கம் போல பளபளக்கத் துவங்குகிறது. இதன் காரணமாகவே இந்த மசூதி 'முத்து மசூதி' என்ற பெயராலும் அழைக்கப்பட்டு வருகிறது.

wiki

எப்படி செல்வது

எப்படி செல்வது

புதுதில்லியிலிருந்து 8 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த மசூதி. ராஜ்காட் விஜய்காட் தாண்டி கொஞ்ச தூரம் நடந்து சென்றால் நீங்கள் மோடி மசூதியை அடையலாம்.

அருகில் காணவேண்டிய இடங்கள்

மும்தாஜ் மஹால், கபூதர் மார்க்கெட், ஷா புர்ஜ், ராஜீவ் காந்தி தேசிய பூங்கா, டெல்லி கேட், ஜும்மா மசூதி, யமுனா நதி என நிறைய இடங்கள் இதைச் சுற்றியே காணப்படுகிறது.

 நவ தோரான் திருக்கோவில்

நவ தோரான் திருக்கோவில்

நீமுச் மாவட்டத்தில் உள்ள கோர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது நவ தோரான் திருக்கோவில். இந்த அழகிய திருக்கோவில், 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இரண்டு வரிசைகளில்,அழகிய அலங்கார வளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த வளைவுகள் கோவிலின் மத்தியில் சந்திக்கின்றன. இரண்டு தூண்கள் கோவிலின் கூரையை தூக்கிப் பிடித்தவாறு நிற்கிறது. இக்கோவிலின் மிகப் பெரிய சிறப்பு அங்கிருக்கும் அழகிய வராஹர் சிலையாகும். இலை வடிவில் பதாககைகள், மாலையோடு நிற்பவர்கள், மகராஸ் தலை என கோவில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோர் கிராமத்தில், விக்ரம் சிமெண்ட் கேம்பஸ் அருகில் நவ தோரான் திருக்கோவில் அமைந்துள்ளது.

எப்படி செல்வது

எப்படி செல்வது

இந்தூர் நகர ரயில் நிலையத்திலிருந்து 5.30 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடைந்துவிடலாம்.

அருகில் காணவேண்டிய இடங்கள்

நீச், கைலேஷ்வர் மகாதேவ் கோயில், சித்தோர்கர், சித்தோர்கர் கோட்டை, ராம்புரா ஏரி, ரத்தன்கர்க் என நிறைய இடங்கள் காணப்படுகின்றன.

மஹுவா சிவன் கோயில்

மஹுவா சிவன் கோயில்

வரலாற்றின் பக்கங்களில் பொதிந்துள்ள மற்றும் ஒரு வைரக்கல் இந்த மஹுவா சிவன் கோயில் ஆகும். ஷிவ்புரி பகுதியில் மஹுவா எனும் சாதாரண கிராமத்தில் உள்ள இந்த கோயிலில் 6 மற்றும் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்று சின்னங்கள் காணக்கிடைக்கின்றன. ரானோத் கல்வெட்டுக்குறிப்புகளில் இந்த மஹுவா கிராமம் மதுமதி என்ற பெயரால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் சைவ மார்க்கம் தீவிரமாக பின்பற்றப்பட்டு வந்ததற்கான ஆதாரங்கள் அந்த கல்வெட்டுக்குறிப்பில் காணப்படுகின்றன. இந்த கோயில் ஸ்தலத்தில் உள்ள சைவ மண்டபம் 7ம் நூற்றாண்டில் பாதியில் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு நிறைவடையாத கட்டுமானம் அல்லது புதுப்பிப்பு பணியை குறிப்பிடும் வகையில் இக்கோயில் காட்சியளிக்கிறது. இந்த மஹுவா சிவன் கோயிலானது நகர பாணி கோயிற்கலை வடிவமைப்புடன் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் கருவறை வாசற்பகுதியின் இருபுறமும் கங்கை மற்றும் யமுனை ஆகிய நதிக்கடவுள்களை குறிக்கும் சுவர்ச்சிற்ப வடிப்புகளை காணலாம்.

Teacher1943

ரேவா குந்த்

ரேவா குந்த்

பாஸ் பகதூர் மற்றும் ரூப்மதியின் காதல் கதைக்காக உருவாக்கப் பட்ட மற்றுமொரு நினைவுச் சின்னம் தான் ரேவா குந்த் ஆகும். ரூப்மதி பெவிலியனுக்கு தண்ணீர் விநியோகம் செய்யும் பொருட்டாக பாஸ் பகதூர் உருவாக்கிய செயற்கை ஏரிதான் ரேவா குந்த்! இந்த ஏரி மத சார்புடையதாக இருப்பது இதன் மற்றுமொரு பெருமையாகும். இந்த பகுதியில் உள்ள மற்ற ஏரிகளைப் போல, இன்றும் புறக்கணிக்கப்படாமல் இந்த ஏரியைப் பாதுகாத்து வைத்திருக்கும் பெருமை மத நம்பிக்கையுடைய இந்துக்களையே சேரும். இந்த ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலப்போக்கில் கட்டிடங்கள் பலவும் எழுப்பப்பட்டுள்ளன. இந்த ஏரியின் தென்-மேற்கு பகுதியில் காலப்போக்கில் விஸ்தரிக்கப்பட்டுள்ள, பல்வேறு வகையான தூண்கள் மற்றும் வளைவுகளை கொண்டுள்ள பெவிலியன் பகுதி இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் புனிதப் பயணிகளின் ஓய்விடமாக உள்ளது. இந்த ஏரியின் வடக்கு எல்லையில் பாஸ் பகதூர் மாளிகைக்கு தண்ணீர் சப்ளை செய்யும் தண்ணீர் தூக்கி ஒன்றும் உள்ளது. மண்டுவிற்கு சுற்றுலா வரும் போது ரேவா குந்த் வருவதும் உங்களுடைய பயண திட்டத்தில் இருக்கட்டும்.

 தேலி கா மந்திர்

தேலி கா மந்திர்

தேலி கா மந்திர் குவாலியர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ளது. இது எண்ணெய் வணிகரின் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது 100 அடி உயரம் உள்ள பிரம்மாண்டமான கட்டுமானமாகும். இதன் கூரையானது திராவிடக் கட்டிடக் கலையம்சத்துடனும், சிற்பங்களும், வேலைப்பாடுகளும் வட இந்திய பாணியிலும் அமைந்துள்ளன. இந்து மற்றும் புத்த மதக் கட்டிடக் கலைநுணுக்கங்கள் கலந்துள்ளன. குவாலியர் கோட்டை வளாகத்தினுள் காணப்படும் பழமையான கட்டிடம் இதுவாகும். இது 11ஆம் நூற்றாண்டு அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாக இருந்து பின்னர் சிவன் கோவிலாக மாற்றப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இக்கோவிலின் உள்ளே அம்மன் சிலை, பாம்பு சிலைகள், காதல் செய்யும் ஜோடிகளின் சிற்பங்கள், கருடன் சிலை ஆகியவை உள்ளன.

 தேவி ஜக்தம்பா கோயில்

தேவி ஜக்தம்பா கோயில்

கஜுராஹோ சுற்றுலாஸ்தலத்தில் உள்ள புகழ் பெற்ற கோயில் அமைப்புகளில் இந்த தேவி ஜக்தம்பா கோயில் முக்கியமான ஒன்றாகும். இது நிஜம்தானா? இந்த அமைப்புகள் யாவும் நம் முன்னோர்கள் உருவாக்கியதா? என்று சிலிர்க்க வைக்கும் மற்றொரு படைப்பு இந்த தேவி ஜக்தம்பா கோயில் கோயில். துல்லியம் மற்றும் தனித்தன்மை ஆகிய இரண்டும் இந்த கோயில் வடிவமைப்பின் ஒவ்வொரு அங்கத்திலும் பொதிந்து கிடக்கின்றன. கோயில் சுவர்களில் அற்புதமான சிற்ப உருவங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. முதலில் விஷ்ணு பஹவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பின்னர் பார்வதி தேவிக்கானதாய் மாற்றப்பட்டு இறுதியின் காளி தெய்வத்துக்கு இந்த கோயில் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பிரிவுகளைக்கொண்ட வடிவமைப்பாக இது காட்சியளிக்கிறது. தோற்றத்தில் சித்திரகுப்தா கோயிலையும் இது ஒத்திருக்கிறது. உள்நுழையமுடியாத கருவறையின் மீது இந்த கோயில் எழுப்பப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். ஏனைய கஜுராஹோ கோயில்களைப்போன்றே இந்த கோயிலின் சுவர்களிலும் பிரமிப்பூட்டும் சிற்ப வடிப்புகள் காணப்படுகின்றன. வேறெங்கும் காண முடியாத கலையம்சங்களுடன் வீற்றிருக்கும் இக்கோயில் கஜுராஹோ விஜயத்தில் தவறவிடக்கூடாத ஒரு அம்சமாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X