Search
  • Follow NativePlanet
Share
» »தில்வாரா ஜெயின் கோயில் - ராஜஸ்தான்

தில்வாரா ஜெயின் கோயில் - ராஜஸ்தான்

ஜெயின மதம், பிற உயிர்களுக்கு எவ்வித்தத்திலும் தீங்கிழைக்காமல் சுய ஒழுக்கத்துடன் பொருளுலகத்தின் மேல் பற்று வைக்காமல் தன்னை உணர்த்து பரபிரம்மத்தை அடைய வேண்டும் என்ற உயர்ந்த வாழ்க்கை நெறியை போதிக்கிறது. ஆதி நாதர் என்ற ரிஷப தேவ முனிவர் ஜெயின மதத்தை தோற்றுவித்ததாக சொல்லப்படுகிறது.

ஹிந்து மத கோட்பாடுகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைய இந்த ஜெயின மதத்தினரின் கோயில்களும் ஹிந்து கோயில்களை போன்றே உள்ளன. பிரமிக்க வைக்கும் கலை நுணுக்கங்களுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில்களுள் பழமையானதாக சொல்லப்படும் தில்வாரா ஜெயின் கோயில்களுக்கு செல்லலாம் வாருங்கள்.

தில்வாரா ஜெயின் கோயில் :

தில்வாரா ஜெயின் கோயில் :

பாலைவன பிரதேசமான ராஜஸ்தானில் இருக்கும் ஒரே மலைவாசஸ் ஸ்தலமான மவுண்ட் அபுவில் இருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த தில்வாரா கோயில்கலானது கி.பி 11 - 13 ஆம் நூற்றாண்டு காலகட்டத்துக்குள் கட்டப்பட்டிருக்கிறது.

Photo:Rakhee

தில்வாரா ஜெயின் கோயில் :

தில்வாரா ஜெயின் கோயில் :

ஐந்து கோயில்களை உள்ளடக்கிய வளாகமான இந்த தில்வாரா கோயில்கள் ஜைனர்களின் புனித ஸ்தலமாகவும் இருக்கிறது. பளிங்கு கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த கோயில்கள் உலகில் இருக்கும் மிக அழகான ஜெயின கோயில்களில் ஒன்றாகவும் சொல்லப்படுகிறது.

Photo:Rakhee

தில்வாரா ஜெயின் கோயில் :

தில்வாரா ஜெயின் கோயில் :

இந்தியாவில் மற்ற இடங்களில் இதுபோன்ற ஜெயின் கோயில்கள் நிறைய இருந்தாலும் அவையெல்லாம் இந்த கோயில்களில் இருக்கும் தூண்கள், மாடங்கள், கதவுகள் போன்றவற்றில் இருக்கும் அழகுக்கு எவ்வகையிலும் நிகராக முடியாது என சொல்லப்படுகிறது.

Photo:Nathan Hughes Hamilton

தில்வாரா ஜெயின் கோயில் :

தில்வாரா ஜெயின் கோயில் :

இந்தியாவின் சுற்றுலா தலைநகரான ராஜஸ்தானில் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் கண்டிப்பாக ஒருமுறையேனும் செல்ல வேண்டிய இடமான இந்த கோயில் வளாகத்தில் இருக்கும் ஐந்து கோயில்களை பற்றியும் அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Photo:Rakhee

விமல் வாசகி கோயில் :

விமல் வாசகி கோயில் :

1031ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படும் இந்த கோயிலில் ஜெயின மதத்தை தோற்றுவித்தவரும் அம்மதத்தின் முதல் திர்த்தங்கரருமான ரிஷப தேவர் மூலவராக வீற்றிருக்கிறார். ஆணுக்குண்டான ஆயக்கலைகள் 72 மற்றும் பெண்ணுக்கான 64 ஆயக்கலைகள் இவரே மனித குலத்திற்கு கற்பித்ததாக நம்பப்படுகிறது. இவரின் மகன் தான் இந்தியாவின் முதல் சக்கரவர்த்தியான 'பாரத்' ஆவார். இக்கோயில் தூண்களில் உள்ள வேலைப்பாடுகள் தன்னிகரற்றதாகும்.

Photo:Rakhee

லூனா வாசகி :

லூனா வாசகி :

வஸ்துபால் தேஜ்பால் சகோதரர்களால் 1230ஆம் நேமிநாத் என்பவருக்காக கட்டிய கோயில் தான் இந்த லூனா வாசகி ஆகும். இந்த கோயில்லில் இருக்கும் மத்திய மண்டபத்தின் மேற்கூரையில் பளிங்கு கற்களில் குடையப்பட்ட கல் ஆபரணங்கள் நம்மை நிச்சயம் பிரமிப்பில் ஆழ்த்தும். மேலும் இந்த கோயிலில் பளிங்கு கல்லினால் குடையப்பட்ட 72 ஜைன மத தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் மற்றும் ஹச்திசாலா என்ற மண்டபத்தில் அவ்வளவு உயிர்ப்புடன் வடிக்கபப்ட்ட 12 யானைகளின் சிற்பங்கள் உள்ளன. உலகிலேயே மிக அழகான மற்றும் நுணுக்கமான பளிங்கு சிற்பங்கள் உள்ள கோயிலாக இது சொல்லப்படுகிறது.

Photo:BOMBMAN

பிட்டல்ஹார் கோயில் :

பிட்டல்ஹார் கோயில் :

பகமா ஷாஹ் கவ்டியா என்பவரால் கட்டப்பட்ட இந்த கோயிலில் தான் ஐந்து விதமான உலோக கலவையினால் உருவாக்கப்பட்ட ரிஷப தேவரின் மிகப்பெரிய உலோக சிலை இருக்கிறது. அந்த சிலையில் பிட்டல் (பித்தளை) அதிகமாக உபயோகிக்க படுத்தப்பட்டிருப்பதலேயே இது 'பிட்டல்ஹர் கோயில்' என்று அழைக்கப்படுகிறது.

பிரஸ்வனாதா கோயில் :

பிரஸ்வனாதா கோயில் :

தில்வாரா கோயில் வளாகத்தில் இருக்கும் கோயில்களிலேயே மிகவும் உயரமான கோயிலாகும் இது. பிரஸ்வநாத் என்பவர் மூலவராக இங்கே வீற்றிருக்கிறார். இந்த கோயிலின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இங்குள்ள சுவர்களில் கஜுராகோவிலும், கோனார்க் சூரிய கோயிலிலும் இருப்பது போல மைதுன சிற்ப்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

Photo:Rakhee

மகாவீர் சுவாமி கோயில் :

மகாவீர் சுவாமி கோயில் :

ஜைன மத துறவிகளில் மிக முக்கியமானவராக கருதப்படும் மகாவீரரை மூலவராக கொண்ட இக்கோயில் 1582ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலில் உள்ள சுவர்களில் சிறிய மிக நுணுக்கமான சிற்பங்களை நாம் காணலாம்.

Photo:Rakhee

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X