Search
  • Follow NativePlanet
Share
» »திக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை! திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா?

திக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை! திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா?

திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது. அதாவது ‘திண்டு’ என்றால் தலையணை என்று அர்த்தம், ‘கல்’ என்றால் மலை என்று அர்த்தம். இந்

By Udhaya

திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது. அதாவது 'திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், 'கல்' என்றால் மலை என்று அர்த்தம். இந்த மலையானது இந்நகரத்தை துருத்தி கொண்டு தலையணை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் இந்த பெயர் வந்தது. இந்த மலைகளின் உச்சியில் திண்டுக்கல் கோட்டையானது அமைந்துள்ளது. இந்த மலை உச்சியில் இருந்து திண்டுக்கல் நகரை பரிபூரணமாக பார்த்து ரசிக்க முடியும். மேலும் இந்த மலை உச்சியில் உள்ள சுத்தமான காற்று உங்கள் சோர்ந்த ஆன்மாவிற்கு ஒரு புத்துனர்வை தரும்.

அழகோ அழகு

அழகோ அழகு

நிச்சயம் மழைக்காலங்களில் அழகிய பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் இந்த மலை திண்டுக்கல்லின் முக்கியமான சுற்றுலா அம்சமாகும். மேலும் இது மிகவும் சிறப்பான ஒரு பொழுது போக்கு அம்சமும் கூட. மதுரைக்கு வருகை தரும் மக்கள் நிச்சயம் இம்மலைக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி வருகை தந்துவிட்டு செல்லலாம். சுற்றுலாவின்போது அருகில் நிறைய இடங்களையும் பார்க்கலாம்.

Jaseem Hamza

பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்

பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல்

பெகாம்பூர் பெரிய பள்ளி வாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. ராஜா ஹைதர் அலி அவர்களின் இளைய சகோதரி, அம்மீர்-உன்-நிஷா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயரால் இந்த மசூதி அன்போடு பெகாம்பூர் என்று திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.

Ssriram mt

புனித ஜோஸப் தேவாலயம்,

புனித ஜோஸப் தேவாலயம்,

1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

Ssriram mt

 கிறிஸ்து அரசர் ஆலயம்

கிறிஸ்து அரசர் ஆலயம்

கிறிஸ்து அரசர் ஆலயம் கொடைக்கானலில் கோக்கர்ஸ் வாக்கில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் கிரானைட் கற்களால் கட்டப்பட்டுள்ளது. காலனி ஆட்சியில் கட்டப்பட்ட இந்த தேவாலயமானது காலனித்துவ கட்டிட கலையின் தாக்கத்தை அதன் கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் கலை வேலைப்பாடுகள் மூலம் பிரதிபலிக்கிறது. சுற்றுலாவாசிகள் மத்தியில் இந்த தேவாலயமானது ஒரு முக்கிய இடமாக உள்ளது.

R.K.PRAGADHEESH

ஆஞ்சனேயர் கோவில்

ஆஞ்சனேயர் கோவில்

ஆஞ்சனேயர் கோவில் நிலக்கோட்டை தாலுகாவில் உள்ள ஆனைப்பட்டியில் அமைந்துள்ள 300 ஆண்டுகள் பழமையான கோயில். இந்த கோயில் மதுரை ராணி மங்கம்மாவினால் கட்டப்பட்டது.

இது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பேரணை பாலத்தின் அருகில் அமைந்துள்ள்து. நீர் முழு கொள்ளளவு இருக்கும் போது இந்த கோயிலின் விக்ரகம் பாதி நீரில் மூழ்கியபடி காணப்படும்.

Jaseem Hamza

 ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில்

ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில்

ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில் தேவி மாரியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழங்கால கோவில் சிலை சிறந்த ஆட்சியாளர் திப்பு சுல்தான் மூலம் நிறுவப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

இந்த கோவிலில் விநாயகர் சிலைகள், முருகன், மதுரை வீரன், காளி மற்றும் துர்கா சிலைகள் காணப்படுகின்றன. கோவில் அமைப்பு ஒரு சதுர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அறங்காவலர் குழு இந்த கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது.

Jaseem Hamza

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X