Search
  • Follow NativePlanet
Share
» »மறக்கப்பட்ட தலைநகரான ''இஸ்லாம் நகர்'' பின்னணி பற்றி தெரியுமா?

மறக்கப்பட்ட தலைநகரான ''இஸ்லாம் நகர்'' பின்னணி பற்றி தெரியுமா?

இஸ்லாம் நகர் ஏன் மறைக்கப்பட்டது, போபால் எப்படி தலைநகராக மாற்றப்பட்டது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

வரலாற்று சிறப்புமிக்க இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில், போபால் சிற்றரசின் தலைநகராக சிறிது காலம் இருந்து வந்தது. தற்போது இந்த நகர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபால் மாவட்டத்தில் அமைந்திருக்கும் போபால் பெராசியா சாலைக்கு அருகில், போபாலிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. இஸ்லாம் நகரில் பண்டைய வரலாற்று நினைவுச் சின்னங்களைப் பார்க்கலாம். அதன் மூலம் இந்த இஸ்லாம் நகர் பண்டைய காலத்தில் எவ்வளவு சிறப்புற்று விளங்கியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

தற்போது மத்தியபிரதேச மாநிலம், மத்தியை ஆளும் கட்சியான பாஜகவால் ஆளப்பட்டு வருகிறது. இந்நகரைச் சுற்றி ஏராளமான சுற்றுலா பகுதிகள் உள்ளன. இஸ்லாம் நகர் ஏன் மறைக்கப்பட்டது, போபால் எப்படி தலைநகராக மாற்றப்பட்டது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

 ஜெகதிஷ்பூர் டூ இஸ்லாம் நகர்

ஜெகதிஷ்பூர் டூ இஸ்லாம் நகர்

இஸ்லாம் நகரின் இயற்பெயர் ஜெகதிஷ்பூர் ஆகும். ஒரு காலத்தில் இஸ்லாம் நகரை இரஜபுத்திர அரசர்கள் ஆண்டு வந்தனர். ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் 18 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் நகரின் மீது படையெடுத்து, இந்த பகுதியை தனது ஆட்சிக்குட்படுத்தினார். பின் இந்த பகுதியை இஸ்லாமியர்களின் நகரம் என்று அறிவித்து இந்த பகுதிக்கு இஸ்லாம் நகர் என்று பெயர் மற்றினார்.

Suyash Dwivedi

 சிற்றரசான போபால்

சிற்றரசான போபால்

அவர் போபாலை ஒரு சிற்றரசாக மாற்றி அதற்கு இஸ்லாம் நகரைத் தலைநகரமாக்கினார். ஆனாலும் அவரால் சிலகாலம் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது. 1923 ஆம் ஆண்டு நிசாம் உல் முல்க் என்ற மன்னர், இஸ்லாம் நகரைக் கைப்பற்றி தனது ஆட்சிக்குட்படுத்தினார். இறுதியாக இஸ்லாம் நகர் 1806 முதல் 1817 வரை சிந்தியர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. தற்போது இஸ்லாம் நகர் போபால் மாவட்ட நிர்கவாத்தின் கீழ் இருக்கிறது. இஸ்லாம் நகரைச் சுற்றிலும் ஏராளமான தோட்டங்கள் மற்றும் பூங்காக்கள் அமைந்திருக்கின்றன.

Suyash Dwivedi

இஸ்லாம் நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்!

இஸ்லாம் நகரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்!


பண்டைய வரலாற்று நினைவு மண்டபங்கள் மற்றும் அரண்மனைகள் ஆகியவை இஸ்லாம் நகரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களாக அமைந்துள்ளன. குறிப்பாக மிக அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும் சாமன் மகால், ராணி மகால் மற்றும் கோண்ட் மகால் போன்ற அரண்மனைகள் சுற்றலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடங்கள் ஆகும்.

போபாலில் இறங்கி பேருந்துகள் அல்லது ஆட்டோ ரிக்சாக்கள் மூலம் இஸ்லாம் நகரை மிக எளிதாக அடையலாம். மேலும் பயணிகளின் வசதிக்காக இஸ்லாம் நகரில் பல நல்ல உணவு விடுதிகள் மற்றும் ஏடிஎம் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. குளிர்காலத்தில் இஸ்லாம் நகருக்கு சென்று வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.


Vijay Tiwari09

இஸ்லாம் நகர் கோட்டை

இஸ்லாம் நகர் கோட்டை

இஸ்லாம் நகரில் சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவரும் முக்கிய அம்சம், இஸ்லாம் நகர் கோட்டை ஆகும். வரலாற்று அடிப்படையில் பார்த்தால் இந்த கோட்டைக்கும், இஸ்லாம் நகர் உருவானதற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவர் கிபி 1715ல் இஸ்லாம் நகர் கோட்டையை நிறுவினார்.
Vijay Tiwari09

கைமாறிய கோட்டை

கைமாறிய கோட்டை

1723 ஆம் ஆண்டில் நிஸாம் உல் முல்க் என்பவர் முகமது கானை வீழ்த்தி இஸ்லாம் நகர் கோட்டையைக் கைப்பற்றினார். மேலும் நிஸாம் உல் முல்க், முகமது கானை வற்புறுத்தி, இந்தக் கோட்டையின் தளபதியாக மாற்றினார். இறுதியாக 1806 முதல் 1817 வரை இந்தக் கோட்டை சிந்தியர்களின் கைகளில் இருந்தது. தற்போது இந்த கோட்டை போபால் மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது.

Vijay Tiwari09

 அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கோட்டை

அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த கோட்டை

இந்தக் கோட்டை அழகிய வேலைப்பாடுகளைக் கொண்டது. பண்டை சிற்பக் கலைகளுக்கு எடுத்துக்காட்டாக இப்போது விளங்கி வருகிறது. இந்தக் கோட்டையின் சில பகுதிகள் அழிந்துவி்ட்டாலும், பண்டைய காலத்தில் இந்த கோட்டை எந்த அளவிற்கு வளமாக இருந்திருக்கிறது என்பதை அறிய முடியும்.

Swapnil.karambelkar

சாமன் மகால்

சாமன் மகால்

அரண்மைனை தோட்டம் என்று அழைக்கப்படும் சாமன் மகால் 1715ல் ஆப்கானிஸ்தானிய தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவரால் கட்டப்பட்ட ஒரு முக்கிய அரண்மனையாகும். இவர் சிறிது காலமே இஸ்லாம் நகரை ஆண்டாலும், பல ஏராளமான நினைவுச் சின்னங்களை இஸ்லாம் நகரில் எழுப்பி இருக்கிறார். அந்த வகையில் அவர் கட்டிய சாமன் மகால் மிக முக்கியமான நினைவுச் சின்னமாக விளங்கி வருகிறது.

Asitjain

வியப்புக்குரிய மணற்கற்கள்

வியப்புக்குரிய மணற்கற்கள்

மணல் கற்களால் எழுப்பப்பட்டிருக்கும் சாமன் மகால், சுற்றுலாப் பயணிகள் பார்க்க வேண்டிய மிக முக்கிய ஒன்றாகும். இந்த அரண்மனை சீஷல் மகால் என்ற ஒன்றையும் கொண்டிருக்கிறது. இந்த மகலின் வாயில் 12 கதவுகளைக் கொண்டிருக்கும். இந்த மகாலில் இருக்கும் மிக முக்கிய அம்சம் இதன் நடுவில் அமைந்திருக்கும் அழகிய தோட்டம் ஆகும். இந்த தோட்டத்தின் நடுவில் இருக்கும் நீரூற்றுகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும்.

Anushka14

அரண்மனை அமைப்பு

அரண்மனை அமைப்பு


அரண்மனையின் அமைப்பு மற்றும் இந்த அரண்மனையில் இருக்கும் சிற்ப வேலைப்பாடுகள், முகலாய மற்றும் மால்வா மன்னர்களில் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இந்த அரண்மனையின் அழகை ரசிப்பதற்கும், இந்த அரண்மனையின் நடுவில் அமைந்திருக்கும் அழகியத் தோட்டத்தைப் பார்த்து ரசிப்பதற்கும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

Swapnil.karambelkar

ராணி மகால்

ராணி மகால்


ராணி மகால் அல்லது ராணி அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை இரண்டு மாடிகளைக் கொண்டிருக்கிறது. பெண்கள் தங்குவதற்காக 1720ல் ஆப்கானிஸ்தான் தளபதியான டோஸ்ட் முகமது கான் என்பவரால் கட்டப்பட்டது. அவருடைய ராணிகள் தங்குவதற்காக இந்த அரண்மனையை அவர் கட்டினார். இந்த அரண்மனையில் அமைந்திருக்கும் திறந்தவெளி பால்கனிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். மிகப் பெரிய பரந்து விரந்த குடைபோல் இருக்கும் இந்த அரண்மனையின் மேற்கூரை பண்டைய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

Anushka14

 பாதுகாப்புத் தளம்

பாதுகாப்புத் தளம்

இந்த அரண்மனை ஒரு பாதுகாப்புத் தளமாக விளங்குகிறது. இந்த அரண்மனையில் இருக்கும் சிறிய அறைகள் அந்த கால மன்னர்களின் எளிய வாழ்க்கை முறையை எடுத்து இயம்புகிறது. மேலும் இந்த அரண்மனை முகலாய, இரஜபுத்திர மற்றும் மால்வா அரசுகளின் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இந்த அரண்மனையில் அமைக்கப்பட்டிருக்கும் முக்கோண வடிவிலான தோட்டம் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவரக்கூடிய முக்கிய அம்சம் ஆகும். இந்த அரண்மனையில் ஒரு திறந்தவெளி மண்டபமும் அமைந்திருக்கிறது.

Swapnil.karambelkar

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


விமான வசதி

இஸ்லாம் நகருக்கு 11.2 கிமீ தொலைவில் உள்ள போபால் ராஜா போஜ் பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவிலிருந்து பல பகுதிகளிலிருந்தும் அதே நேரத்தில் உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தில் இறங்கி வாடகை டாக்ஸிகள் எடுத்து ரூ.2200 செலுத்தி இஸ்லாம் நகரைச் சென்றடையலாம்.

தொடர்வண்டி வசதி

இஸ்லாம் நகருக்கு அருகில் இருக்கும் போபாலில் மிகப் பெரிய தொடர்வண்டி நிலையம் அமைந்திருக்கிறது. இந்த தொடர்வண்டி நிலையத்திற்கு இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து பல தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி அங்கிருந்து டாக்ஸிகள், ஆட்டோ ரிக்சாக்கள் மற்றும் பேருந்துகள் மூலம் இஸ்லாம் நகருக்குச் செல்லலாம்.

சாலை வசதி

இஸ்லாம் நகர் சிறந்த சாலை வசதிகளைக் கொண்டிருக்கிறது. போபாலிலிருந்து தினமும் ஏராளமான பேருந்துகள் இஸ்லாம் நகருக்கு இயக்கப்படுகின்றன. மேலும் போபாலிலிருந்து இஸ்லாம் நகருக்கு ஏராளமான வாடகை டாக்ஸிகள் மற்றும் ஆட்டோ ரிக்சாக்கள் செல்கின்றன. ரூ.2200 செலுத்தி வாடகை டாக்ஸி எடுத்து போபாலிலிருந்து இஸ்லாம் நகருக்கு செல்லலாம். ஏசி டாக்ஸியாக இருந்தால் ரூ.3000 செலுத்தினால் போதும். மேலும் போபாலிலிருந்து இஸ்லாம் நகருக்கு போக்குவரத்து வசதிகள் மிக அம்சமாக அமைந்திருக்கின்றன.

 காலநிலை

காலநிலை

நவம்பர் முதல் பிப்ரவரி வரை உள்ள காலம் இஸ்லாம் நகருக்குச் செல்ல தகுந்த காலம் ஆகும். ஏனெனில் இந்த காலத்தில் உக்கிரமான வெயில் இல்லாமல் இங்கிருக்கும் அரண்மனைகளைக் களைப்பில்லாமல் சுற்றிப் பார்க்க முடியும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X