Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா – கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத பன்றிமலை!

தமிழ்நாட்டில் இப்படி ஒரு இடமா – கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத பன்றிமலை!

மேற்கு தொடர்ச்சி மலைகள் என்றாலே நம் நினைவுக்கு வருவது ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, குடகு போன்ற பிரபலமான சுற்றுலாத் தலங்கள் தான். ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி மேற்கு தொடர்ச்சி மலைகளுக்குள் எண்ணற்ற சிறு சிறு அழகிய இடங்கள் உள்ளன. இயற்கை அன்னையால் மிகுதியாக ஆசீர்வதிக்கப்பட்ட அப்படிப்பட்ட இடங்களில் ஒன்று தான், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த பன்றிமலை. சுற்றிலும் பசுமை, இதமான வானிலை, லேசான சாரல், இயற்கை எழில் கொஞ்சும் சிறு சிறு சுற்றுலாத் தலங்கள் என இந்த இடம் மிக அழகாக இருக்கிறது. இதனைப் பற்றிய முழு தகவல்களும் கீழே!

மேகங்கள் உரசி செல்லும் பன்றிமலை

மேகங்கள் உரசி செல்லும் பன்றிமலை

டார்ஜலிங், கொடைக்கானல், குடகு போன்ற இடங்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரு அற்புத உணர்வை நீங்கள் இங்கேயே தமிழ்நாட்டிலேயே பெறலாம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான். திண்டுக்கல் மாவட்டத்தின் மையத்தில் இருந்து சுமார் 40 கிமீ தூரத்தில் அமைந்து உள்ளது இந்த அழகிய பன்றிமலை. சுற்றிலும் பசுமை, சிறு சிறு நீரோடைகள், நீர்வீழ்ச்சிகள், இதமான வானிலை, நம்மை தொட்டு செல்லும் மேகம் என இந்த இடமே ஒரு அழகான சோலை போல காட்சியளிக்கிறது. இந்த இடத்தை நீங்கள் தவற விடலாமா?

அலாதியான பைக் பயணம்

அலாதியான பைக் பயணம்

நண்பர்களுடன் ஒரு ரைடு போக வேண்டும், நெரிசலில் இருந்து ஒரு தனி விடுப்பு எடுக்க வேண்டும், அன்புக்குரியவருடன் செல்ல வேண்டும், அல்லது தனியாக ஒரு குட்டி ட்ரிப் போக வேண்டும் என்று ஆசையாக உள்ளது எனில் இந்த உடம் உங்களுக்கு ஒரு சரியான சாய்ஸ். பெயரை கேட்டு ஒரு முடிவுக்கு வர வேண்டாம். பெயருக்கும் இந்த இடத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. இந்த இடம் முழுவதும் ஒரு இயற்கை சோலையாக இருக்கிறது. திண்டுக்கலில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளதால் நீங்கள் உங்களது சொந்த பைக்கிலோ, அல்லது திண்டுக்கலில் இருந்து வாடகை பைக்கிலோ நீங்கள் இங்கு ட்ரிப் பிளான் பண்ணலாம்.

இயற்கை எழில் கொஞ்சும் பயணம்

இயற்கை எழில் கொஞ்சும் பயணம்

காலையில் ஒரு 8 மணிக்கு நீங்கள் பன்றிமலை நோக்கி பயணிக்கலாம். பைக்கில் பயணம் செய்வது மிகவும் உற்சாகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் உங்கள் கண்களுக்கே ஒன்னும் புலப்படாது. போகிற வழி முழுக்க இயற்கை அன்னையின் அழகை ரசித்துக் கொண்டே சொல்லலாம். சாலையே தெரியாது. முற்றிலும் பனி மட்டுமே இருக்கிறது. மேகங்கள் உங்களை தொட்டு செல்வதை நீங்களே உணருவீர்கள். போகிற வழியில் சூடாக தேநீர், மசாலா பொறி, கடலை என வெவ்வேறு கிராம பாங்கான உணவுகளை நீங்கள் ருசித்துக் கொண்டே போகலாம். அதோடு மிக முக்கியமாக பன்றிமலையில் சூடான சுவையான பரோட்டா கிடைக்கிறது. நிச்சயம் சுவைக்க மறக்காதீர்கள்.

கேம்பிங் செய்வதற்கு ஏற்ற இடம்

கேம்பிங் செய்வதற்கு ஏற்ற இடம்

முழுவதும் காபிதோட்டம் கம்பளி ஆடைகள், ஜாக்கெட்டுகள் எடுத்து செல்லுங்கள். கெட்டில், பிஸ்கட் பாக்கெட்டுகள், சாக்லேட், ரெடியாக இருக்கும் உணவுகள் போன்றவற்றை நீங்கள் எடுத்து செல்லலாம். . இங்கே கேம்பிங் போடுவது மிகவும் பிரபலம். சில தனியார் ஆபரேட்டர்களும் இங்கே கேம்பிங்கை நிர்வகிக்கிறார்கள். நீங்கள் அந்த அனுபவத்தில் ஈடுபட மறக்காதீர்கள். இயற்கை அன்னையின் மடியில் இருப்பதை நீங்கள் உணருவீர்கள். மேலும், சுற்றிலும் அட்டை பூச்சிகள் இருப்பதால் நீங்கள் மிகவும் கவனத்துடன் இருப்பது மிக அவசியம்.

பார்க்க வேண்டிய விஷயங்கள்

பார்க்க வேண்டிய விஷயங்கள்

பன்றிமலை முழுவதுமே ஒரு அழகிய சுற்றுலாத் தலம் போல தான் இருக்கிறது. நீங்கள் எங்கு நின்றாலும் அழகிய காடுகள், காபி தோட்டங்கள், குடில்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் என சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. ஆனாலும் இங்கே நீங்கள் புல்லா வெளி நீர்வீழ்ச்சி, ஆத்தூர் டேம் நீர்வீழ்ச்சி, பவானி சாகர் அணை ஆகியவற்றை கட்டாயம் பார்வையிட வேண்டும்.

பரபரப்பான நகர வாழ்வில் இருந்து சிறு ஓய்வெடுக்க, நண்பருடன் ஒரு ஜாலியான ரைடு போக, உங்கள் மனதுக்கு நெருக்கமானவருடன் ஒரு லாங் பைக் ரைடு போக நீங்கள் இந்த இடத்திற்கு வருகை தரலாம். நிச்சயம் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள். அந்த ட்ரிப் மனதுக்கு நிறைவாக இருக்கும் பயணிகளே!

Read more about: pandrimalai dindigul tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X