Search
  • Follow NativePlanet
Share
» » கொடைக்கானலில் இருக்கும் தூண்பாறை பற்றி தெரியுமா?

கொடைக்கானலில் இருக்கும் தூண்பாறை பற்றி தெரியுமா?

தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்த

By Udhaya

தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது. இந்த தூண்கள் 400 மீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். இந்த தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது. எனவே இதுவும் மிக ஆபத்தான இடமாக கருதப்படுகிறது. தூண்பாறை தமிழ்நாடு வன இலாக்கா துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் இந்த தூண்பாறையின் சிறப்புக்கு முக்கிய காரணமாக திகழ்வது இங்கேதான் கமல்ஹாசனின் குணா திரைப்படம் படம்பிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்தப் பாறை 'குணா பாறை' என்று பிரபலமாக அறியப்படுகிறது.

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி


பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள் இங்கே தண்ணீர் பருக வந்து செல்லுமாம். மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம் இது. இந்த அருவியை வந்தடைய கூறிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இயற்கை விரும்பிகள் செல்ல ஏற்ற இடம் இதுவாகும். பருவக்காலத்தின் போது எழில்மிகுந்து காணப்படும் இந்த அருவிக்கு அந்நேரம் செல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Prathima Holla

பேரிஜம் ஏரி

பேரிஜம் ஏரி

பேரிஜம் ஏரி கொடைக்கானலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஏரி காட்டிற்குள் உள்ளதால் உள்ளே செல்ல உரிய அனுமதி பெற வேண்டும். காலை 9 மணி முதல் மதியம் 3.30 மணி வரையே உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்படும். இதனுள்ளே காட்டெருமைகள், பாம்புகள் மற்றும் சிறுத்தைகள் ஏரியில் தண்ணீர் பருக அவ்வபோது வந்து செல்லும். நமக்கு யோகம் இருந்தால் இவைகளை காண நேரிடலாம். பலதரப்பட்ட காளான்கள் இங்கே காணக்கூடும். நெருப்பு கோபுரம், அமைதி பள்ளத்தாக்கு மற்றும் மருத்துவ காடு ஆகிய தலங்கள் இந்த ஏரியின் அருகில் இருப்பது இவ்விடத்திற்கு கூடுதல் ஈர்ப்பாக அமைந்துள்ளது. காட்டினில் பயணம் செய்ய இது மிகவும் ஏற்ற இடம்.

Ravi S. Ghosh

1

1

நீரில் நீந்தும் பறவை

Challiyil Eswaramangalath Vipin

2

2

காட்டில் வாழும் பறவை

D momaya

3

3

வண்ணம் நிறைந்த பட்டாம்பூச்சி

J.M.Garg

கோக்கர்ஸ் வாக்

கோக்கர்ஸ் வாக்


1872-ஆம் ஆண்டு இந்த இடத்தை கண்டுப்பிடித்த லெப்டினென்டு கோக்கரின் பெயராலேயே இவ்விடம் அழைக்கப்படுகிறது. கொடைக்கானல் ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரம் தொலைவில் கொடைக்கானலின் தெற்குச் சரிவில் அமைந்துள்ளது. இயற்கை விரும்பிகள் கண்டிப்பாக காண வேண்டிய இடம் இது. இந்த இடம் மிக நீளமான வளைந்த பாதைகளோடு ஆங்காங்கே அழகிய மரங்கள் மற்றும் பூக்களுடன் காட்சி அளிக்கும். இங்கே உள்ள ஒரு தொலைநோக்கியின் மூலம் பள்ளத்தாக்கின் அழகையும் மலைக்கு இறக்கத்தில் அமைந்துள்ள நகரங்களையும் கண்டு களிக்கலாம். கோக்கர்ஸ் வாக் நுழைய நுழைவுச் சீட்டு பெற வேண்டும். இங்கே நடை கொள்ள மதியம் 2.30 மணிக்குள் செல்ல வேண்டும். இல்லையென்றால் பனி கீழே இறங்க ஆரம்பித்து விடும். இயற்கையை ரசித்து கொண்டே நடைக்கொள்ள இது மிகவும் ரம்மியமான இடம்.

Shamseej

1

1

மேகம் சூழ் மலைகள்

Lalith Suhas

2

2

நடைபாதை

Jaseem Hamza

3

3

அழகிய மலைகள்

Jbuchholz

தற்கொலை முனை

தற்கொலை முனை

தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. இதுவும் மிக ஆபத்தான இடம். இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம்.

வைகை அணையை இங்கு இருந்தே கண்டு களிக்கலாம். இங்கு சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.

போகிற வழியில் இரண்டு பக்கமும் கடைகள் சூழ்ந்திருக்கும். காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரையே இவ்விடத்தை பார்க்க உகுந்த நேரம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X