Search
  • Follow NativePlanet
Share
» »உலக அதிசயங்களை விடுங்க! இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி தெரியுமா?

உலக அதிசயங்களை விடுங்க! இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி தெரியுமா?

இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்

உலக அதிசயங்கள் என்று அழைக்கப்படும் ஏழு இடங்களைப் பற்றிக் கேட்டால் நமக்கு தெரியும். ஆனால் இந்தியாவின் அந்த ஏழு அதிசயங்களைப் பற்றி தெரியுமா என்றால் நமக்கு யோசிக்ககூட நேரம் இருக்காது. தெரியாது என்றுவிடுவோம் அல்லவா.

வாருங்கள் அவை எவையென்று பார்க்கலாம்.

ஸ்ரவணபெலகோலா

ஸ்ரவணபெலகோலா


கோமஸேஸ்வரர் என்னும் பாகுபலி சிலை இந்த பிரிவில் முதல் அதிசயமாக உள்ளது.

இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் உலகின் பல இடங்களிலிருந்தும் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

புனித வாழ்வை மேற்கொண்ட சமணர்களின் சிலைகள் இந்தியாவெங்கும் புகழ் பெற்றிருந்தாலும், இந்த இடத்திலுள்ள கோமட்டிஸ்வரர் சிலை மிகவும் சிறப்பானதாகும்.

முக்கியமான சிலை

முக்கியமான சிலை

சமணர்களின் நினைவுச் சின்னங்களில் மிகவும் முக்கியமானதாக இது கருதப்படுகிறது.
ஷரவணபௌகொலா தென்னிந்தியாவில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித யாத்திரை பயண இலக்குகளில் ஒன்றாகும்.

PC:Ananth H V

கயோத்சர்கர்

கயோத்சர்கர்


ஷரவணபௌகொலா அந்த நகரத்தின் மத்தியில் உள்ள ஒரு குளத்தினால் இந்த பெயர் பெற்றது 'பேளா' என்பதன் அர்த்தம் 'வெள்ளை' மற்றும் 'கோலா' என்பதன் அர்த்தம் 'குளம்' என்பதாகும். கன்னட உள்ளூர் வட்டார பேச்சு வழக்கில் 'பௌகொலா' என்று திரிந்தது.

PC:Arpa Ghosh

ஹர்மந்திர் சாஹேப்

ஹர்மந்திர் சாஹேப்

சீக்கிய மதத்தின் புனித இடமாக கருதப்படும் ஹர்மந்திர் சாஹேப் உலகின் பிரபலமான மத வழிபாட்டுத்தலங்களுள் ஒன்றாகும்.


PC:Ian Sewell

 புணரமைப்பு

புணரமைப்பு


இந்த கோயில் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அஹமத் ஷாஹ் என்ற இஸ்லாமிய மன்னனின் படையெடுப்பினால் அழிக்கப்பட்டு சில காலம் கழித்து புணரமைக்கப்பட்டிருக்கிறது.

PC:Guilhem Vellut

 தாஜ்மஹால்

தாஜ்மஹால்

உலகிலுள்ள ஏழு அதிசய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த தாஜ்மஹால் முகாலயப்பேரரசர் ஷாஜஹான் அவர்களால் அவரது அழகிய மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்டுள்ள இது கல்லறை மாளிகையாகும். இந்திய, பர்ஷிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலை அம்சங்கள் கலந்து இந்த பிரம்மாண்ட நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

PC:Antrix3

பூங்கா

பூங்கா


இந்த மாளிகை அமைப்பை சுற்றிலும் 300 சதுர மீட்டர் பரப்பில் சார்பாக் எனும் பூங்கா அமைந்துள்ளது. மேடை போன்ற நடைபாதைகளால் 16 சதுர புல்வெளி பூத்தரைகளாக இந்த பூங்கா பிரிக்கப்பட்டிருக்கிறது.


PC:Vaibhavdixit

 ஹம்பி

ஹம்பி

ஹம்பி எனும் பெயரை கேட்டவுடனே நினைவுக்கு வருவது அதன் பிரசித்தி பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், அதை சுற்றிலும் விரிந்து கிடக்கும் நகரின் கட்டிடக்கலை அம்சங்களும் தான்.

PC: Trollpande

கவிதை

கவிதை

விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகராக விளங்கி, ஹொய்சள கட்டிடக்கலை பாணியின் அழகை பறைசாற்றிக் கொண்டிருக்கும் இந்த ஹம்பி அல்லது விஜயநகர் என்று அழைக்கப்படும் சுற்றுலா ஸ்தலத்தை கற்களில் எழுதப்பட்டுள்ள கவிதை எனலாம்.

PC: Ajayreddykalavalli

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பெங்களூரிலிருந்து 350 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள ஹம்பியை சில மணி நேர பயணத்தில் அடைந்திடலாம். யுனெஸ்கோ அமைப்பினால் சர்வதேச பண்பாட்டு மையமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த தலம் வருடம் தோறும் லட்சக்கணக்கான பயணிகளை ஈர்க்கின்றது.

 ‘கொனார்க்’

‘கொனார்க்’

ஒடிஷா மாநிலத்தின் தலைநகரான புபனேஷ்வரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ‘கொனார்க்' நகரம் அதிஅற்புதமான புராதன கோயிற்கலைச்சின்னங்களுடன் ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக உலகப்புகழ் பெற்றுள்ளது.

PC: Wikipedia

 ‘கொனார்க்’ சூரிய கோயில்

‘கொனார்க்’ சூரிய கோயில்

கொனார்க் நகரத்தின் பிரதான அடையாளமான சூரியக்கோயிலை முதன் முதலாக தரிசிக்கும் அனுபவத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம். அப்படி ஒரு நுணுக்கமான புராதன கட்டிடக்கலை அம்சங்களுடன், கடந்து போன ஒரு ஆதி நாகரிகத்தின் வாசனை சிறிதும் மறையாமல் இந்த கோயில் வீற்றிருக்கிறது.

PC: Wikipedia

கஜுராஹோ

கஜுராஹோ

மத்தியப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் மண்டலத்தில் வீற்றிருக்கும் கஜுராஹோ வரலாற்றுத்தலம் விந்திய மலைத்தொடர்களை பின்னணியில் கொண்ட ஒரு புராதன கிராமியப்பகுதியாகும்.

PC: Blessedapples

கஜூராஹோ கோயில்கள்

கஜூராஹோ கோயில்கள்

மத்திய இந்தியாவை ஆண்ட சந்தேள ராஜ வம்சத்தினரால் 950 - 1050 ஆம் ஆண்டுகளில் கட்டப்பட்டிருக்கின்றன. கஜூராஹோ ஸ்தலத்தில் மொத்தம் 85 கோயில்கள் உள்ளன.


PC: Blessedapples

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X