Search
  • Follow NativePlanet
Share
» »'தல' ரசிகர்களே! அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா?

'தல' ரசிகர்களே! அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா?

நம்மில் பலர் நடிகர் அஜித் குமாரின் தீவிர ரசிகர்களாக இருப்போம். அவரின் எளிமை அல்லது நடிப்பு இவற்றில் எது நம்மை ஆட்கொண்டிருந்தாலும், அவரை பற்றி நாம் தெரிந்து வைத்திருப்போம்.

By Staff

அடுத்த கட்டுரை: விஜய் படத்தில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள்

அவரின் திரைப்படங்கள் மட்டுமல்ல சொந்த வாழ்க்கை நிகழ்வுகளையும் நாம் தெரிந்து வைத்திருப்போம். இப்போதுள்ள நடிகர்களில் அதிக ரசிக பட்டாளம் கொண்டிருக்கும் தல பிறந்த ஊரைப் பற்றி எந்த அளவுக்கு நமக்கு தெரியும்.

காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!காலக்கெடு... இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்துவிடும்!

அஜித் தன்னுடைய ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டாலும் தமிழகம் முழுக்க இருக்கும் அவரது ரசிகர்கள் அஜித்தின் அடுத்த படமான ஏகே57 ஐ கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்த சமயத்தில் அஜித் பற்றி எந்த அளவுக்கு நீங்கள் தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பதை சோதித்துக்கொள்ளுங்கள்.

'தல'யின் குட்டி வரலாறு:

'தல'யின் குட்டி வரலாறு:

அஜித்குமார் சுப்பிரமணி என்னும் அஜித் 1971ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி ஆந்திரபிரதேச மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் என்ற நகரத்தில் பிறந்தார். சென்னையில் இருக்கும் அசன் நினைவு மேல்நிலைப் பள்ளியில் படித்த அஜித் மேல்நிலை கல்வியை முழுமையாக முடிக்காமலேயே பள்ளியை விட்டு நின்றிருக்கிறார்.

'தல'யின் குட்டி வரலாறு:

'தல'யின் குட்டி வரலாறு:

பள்ளிப்படிப்பை நிறுத்திய பிறகு இருசக்கர வண்டி மெக்கானிக்காக வேலை பார்த்த காலத்தில் பைக் ரேசிங்கில் அஜித்துக்கு ஆர்வம் ஏற்ப்பட்டிருக்கிறது. ரேசிங்கில் ஈடுபடுவதற்கான பணத்தேவைகளை சமாளிக்க கார்மெண்ட்ஸ் கம்பெனியில் வேலை பார்க்க துவங்கிய அஜித் அப்படியே சிறிய விளம்பர படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

பின்னர் 1992ஆம் ஆண்டு தன்னுடைய 21வயதில் தெலுங்கில் 'பிரேம புஸ்தகம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

'தல'யின் குட்டி வரலாறு:

'தல'யின் குட்டி வரலாறு:

அமராவதி படத்தில் மூலம் தமிழில் அறிமுகமான அஜித் 'ஆசை', 'காதல் கோட்டை' போன்ற படங்கள் மூலம் தமிழ் திரை உலகின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார்.

சரி வாருங்கள், தல அஜித்தின் பிறந்த ஊரான செகந்திராபாதை கொஞ்சம் சுற்றிப்பார்க்கலாம்.

செகந்திராபாத்:

செகந்திராபாத்:

'தல' அஜித் ஆந்திரா மாநிலத்தில் உள்ளசெகந்திராபாத் தான் பிறந்தார். இந்த நகரமும் இதனை ஒட்டியபடியே அமைந்திருக்கும் ஹைதராபாத்தும் இரட்டை நகரங்கள் என்றழைக்கப்படுகின்றன.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் மிகவும் செல்வச்செழிப்பு மிக்க சமஸ்தானமாக திகழ்ந்த ஹைத்ரபாதிற்கு அருகில் 1806ஆம் ஆண்டு பிரிட்டிஷ் குடியிருப்பாக உருவாக்கப்பட்டதே இந்த செகந்திராபாத் ஆகும்.

Superfast1111

செகந்திராபாத்:

செகந்திராபாத்:

ஹைதராபாத்தையும் செகந்திராபாத்தையும் பிரிப்பது புகழ்பெற்ற ஹுசைன் சாகர் ஏரியாகும். 1562 ஆம் ஆண்டு ஹஸ்ரத் ஹுசைன் சாகர் வாலி என்பவரால் கட்டப்பட்ட இந்த ஏரியின் நடுவே 18 உயரமுடைய ஒரே கல்லினால் செய்யப்பட்ட புத்தர் சிலை ஒன்று உள்ளது.

thotfulspot

செகந்திராபாத்:

செகந்திராபாத்:

ஹைதராபாத் அல்லது செகந்திராபாத் வரும் அனைவரும் கண்டிப்பாக சுற்றிப்பார்க்க வேண்டிய இடமான இந்த ஏரி மாலை நேரத்தில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருப்பது பார்க்க அவ்வளவு அழகான காட்சியாக இருக்கும்.

Alosh Bennett

கோல்கொண்டா கோட்டை:

கோல்கொண்டா கோட்டை:

ஹுசைன் சாகர் ஏரிக்கு அடுத்தபடியாக செகந்திராபாத்தில் இருக்கும் பிரபலமான சுற்றுலாத்தலம் கோல்கொண்டா கோட்டையாகும். 15ஆம் நூற்றாண்டில் குதுப் ஷஹி வம்சத்தினரால் இது கட்டப்பட்டிருக்கிறது.

Chris Connelly

கோல்கொண்டா கோட்டை:

கோல்கொண்டா கோட்டை:

இந்த கோல்கொண்டா கோட்டையில் தான் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக விலையுயர்ந்த வைரமான 'கோஹினூர்' வைரம் பாதுக்காப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

அக்காலத்தில் இந்த கோட்டைக்கு அருகில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் தான் உலகின் மிக அரிய கற்கள் வெட்டி எடுக்கப்பட்டிருக்கின்றன.

Chris Connelly

கோல்கொண்டா கோட்டை:

கோல்கொண்டா கோட்டை:

நான்கு வெவ்வேறு கோட்டைகளை உள்ளடக்கிய இந்த கோல்கொண்டா கோட்டையினுள் கோயில்கள், மசூதிகள், ராஜ மாளிகைகள், கோட்டை கொத்தளங்கள், அகழிகள் போன்றவை இருக்கின்றன.

கிட்டத்தட்ட 11கி.மீ சுற்றளவில் அமைந்திருக்கும் இந்த கோட்டையை முழுமையாக சுற்றிப்பார்ப்பது இயலாத காரியம் என்றே சொல்லலாம்.

Chris Connelly

கோல்கொண்டா கோட்டை:

கோல்கொண்டா கோட்டை:

கோல்கொண்டா கோட்டையினுள் அமைந்திருக்கும் இப்ராஹீம் மசூதி.

Ankur P

பிர்லா மந்திர்:

பிர்லா மந்திர்:

செகந்திராபாத்தில் இருக்கும் புகழ்பெற்ற ஆன்மீக ஸ்தலம் பிர்லா மந்திர் கோயிலாகும். 'நுபாத் பஹத்' என்ற சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இந்த கோயிலை கட்டி முடிக்க 10 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

ராமகிருஷ்ணர் மடத்தை சேர்ந்த சுவாமி ரங்கநாதானந்தா என்பவர் முன்னின்று இக்கோயிலை கட்டியிருக்கிறார்.

ambrett

பிர்லா மந்திர்:

பிர்லா மந்திர்:

கிட்டத்தட்ட இரண்டாயிரம் டன் வெண்பளிங்கு கற்களால் கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலின் மூலவராக 11அடி உயர வெங்கடாசலபதி பெருமாள் வீற்றிருக்கிறார்.

தியானம் செய்வதற்கு எதுவாக இக்கோயில் இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் ஒலி எழுப்பக்கூடிய மணிகள் எதுவும் இக்கோயிலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

AHLN

பிர்லா மந்திர்:

பிர்லா மந்திர்:

பத்மாவதி, ஆண்டாள், சிவன், பார்வதி, விநாயகர், ஹனுமான், பிரம்மா, சரஸ்வதி போன்ற கடவுளர்கள் சந்நிதியும் இக்கோயிலில் உண்டு.

இந்த கோயில் கட்டுவதற்கான நிதியுதவியை இந்தியாவின் புகழ்பெற்ற பிர்லா குடும்பத்தினர் அளித்திருக்கின்றனர்.

kenny s.

விவேகம்

விவேகம்

விவேகம் படம் விரைவில் திரைக்கு வர ரசிகர்களுடன் சேர்ந்து நாமும் எதிர்பார்த்து காத்திருப்போம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X