Search
  • Follow NativePlanet
Share
» »தும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது

தும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது

தும்கா பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது

ஜார்கண்ட் மாநிலத்தின் பழமையான மாவட்டமான இந்த 'தும்கா' சந்தால் பர்காணா மண்டலத்தின் தலைநகரமும் ஆகவும் அமைந்துள்ளது. பழங்குடி மக்களின் பூமி எனும் பெருமையான அடையாளத்தை இந்த மாவட்டம் பெற்றிருக்கிறது. தும்கா மாவட்டம் முழுக்கவும் ரம்மியமான அழகுக்காட்சிகள் நிரம்பியதாகவே காட்சியளிக்கிற்து. பிரம்மாண்டமான மலைகள், ஓவியம் போன்ற இயற்கை எழிற்காட்சிகள், அமைதியான ஆறுகள் மற்றும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரவிக்கிடக்கும் பள்ளத்தாக்கு பசுமைகள் என்று இங்கு இயற்கையின் அற்புதங்களை இந்த பூமி வாய்க்கப்பெற்றிருக்கிறது.

துணைத்தலைநகரம்

துணைத்தலைநகரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தின் 24 மாவட்டங்களில் ஒன்றாக தற்போது விளங்கும் இந்த தும்கா மாவட்டம் ஆரம்பகால இந்தியாவில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக அறியப்பட்டிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ‘டமின்-இ-கொ' எனும் நிர்வாக மாவட்டமாகவும் இது அழைக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த தும்கா நகரம் ஜார்கண்ட் மாநிலத்தின் துணைத்தலைநகரம் என்று அழைக்கப்படும் அளவிற்கு ஒரு முக்கிய கேந்திரமாக வளர்ச்சியடைந்துள்ளது.

Ashish itct

தும்கா மாவட்டம்

தும்கா மாவட்டம்

மண் அரிப்பு மற்றும் இதர பாதகமான புவியியல் அம்சங்கள் காரணமாக இங்கு விவசாய உற்பத்தி குறைவாகவே உள்ளது. தும்கா நகரம் மற்றும் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா அம்சங்கள் மலைகள், காடுகள் மற்றும் ஆறுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய அற்புதமான சுற்றுலாக்காட்சிகளும் சிறப்பம்சங்களும் இந்த தும்கா மாவட்டத்தில் நிரம்பியுள்ளன. வடக்கிலிருந்து தெற்காக நீண்டிருக்கும் மலைத்தொடர்களை கொண்ட உயரமான பகுதியில் இந்த மாவட்டம் அமைந்திருக்கிறது.

Indu

அற்புதமான எழில் அம்சங்கள்

அற்புதமான எழில் அம்சங்கள்

நோனிஹாட் எனும் இடத்துக்கு அருகில் உள்ள லக்வா மலை அற்புதமான எழில் அம்சங்களுடன் ஒரு அமைதிப்பிரதேசமாக வீற்றிருக்கிறது. மலையேற்றப்பயணத்துக்கு உகந்த இந்த மலையின் உச்சிப்பகுதியிலிருந்து காணக்கிடைக்கும் எழிற்காட்சிகள் பிரமிக்க வைக்கும் அழகுடன் பரந்து கிடக்கின்றன. மேலும், தும்கா நகரத்துக்கு தென்கிழக்கே ராம்கர் மலைகளும் அமைந்துள்ளன.

Rimilbadal

பிரபலமான சுற்றுலாத் தளங்கள்

பிரபலமான சுற்றுலாத் தளங்கள்

பிரசித்தமான யாத்ரீக ஸ்தலமாகவும் பிரசித்தி பெற்றுள்ள தும்கா நகரத்தில் பாபா பாசுகிநாத் தாம், மலூட்டி, பாபா சுமேஷ்வர் நாத் மற்றும் சுடோ நாத் கோயில்கள், மசான்ஜோர் தாம், கும்ராபாத், குர்வா அல்லது ஷிரிஷ்டி பார்க் போன்ற முக்கியமான ஆன்மீகத்தலங்கள் அமைந்திருக்கின்றன. மயூரக்ஷி என்றழைக்கப்படும் முக்கியமான ஆறு ஒன்றும் தும்கா நகரத்தின் வழியே ஓடுகிறது. தும்கா நகரத்திற்கு விஜயம் செய்ய ஏற்ற காலம் ஈரப்பதம் அதிகமாக காணப்படும் பருவநிலை இயல்பை தும்கா நகரம் பெற்றுள்ளது. கோடைக்காலம் அதிக வெப்பத்துடனும், குளிர்காலம் மிதமான இனிமையான சூழலுடனும் காணப்படும்.

Ashish itc

 பாகுர் நகரத்திற்கு எப்படி செல்லலாம்?

பாகுர் நகரத்திற்கு எப்படி செல்லலாம்?

தும்கா நகரம் சாலை வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. ஜஸிதிஹ் எனும் இடத்திலுள்ள ரயில் நிலையம் மூலமாக இந்த தும்கா நகரத்துக்கு விஜயம் செய்யலாம். இந்த நகரத்திற்கான பிரத்யேக இருப்புப்பாதைக்கான திட்டங்களும் தற்போது பரிசீலனையில் உள்ளன.

Ashish itct

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X