Search
  • Follow NativePlanet
Share
» »துவாரகாவில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?

துவாரகாவில் இத்தனை விசயங்கள் இருக்கு தெரியுமா?

By Udhaya

துவாரகா எனும் பெயரிலுள்ள 'த்வார்' என்பது வாசலை குறிக்கிறது. துவாரக என்பதற்கு பிரம்மனை அடையும் வாசல் என்பது பொருளாகும். வைணவ நம்பிக்கையை பின்பற்றுபவர்கள் மத்தியில் இந்த துவாரகா நகரம் முக்கியமான புனித நகரமாக வணங்கப்படுகிறது. இங்குள்ள ஜகத்மந்திர் எனும் கோயிலில் த்வாரகாதீஷ் எனும் கிருஷ்ணரின் அவதாரம் வீற்றிருக்கிறது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான நாகேஷ்வர ஜோதிர்லிங்கம் இந்த துவாரகா நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது. பேட் துவாரகா இந்த இடத்தில்தால் கிருஷ்ணர் தனது இனத்தார்க்கான ராஜ்ஜியத்தை நிர்மாணித்ததாக சொல்லப்படுகிறது. ஒரு தீவுப்பகுதியான இது கட்ச் வளைகுடாப்பகுதியில் அமைந்துள்ளது. ஓக்கா துறைமுகம் அமைக்கப்படுவதற்கு முன்பு இப்பிரதேசத்தின் முக்கிய துறைமுகமாக இந்த பேட் துவாரகா விளங்கியிருக்கிறது. ஓக்கா படகுத்துறையை அடைந்து அங்கிருந்து ஃபெர்ரி பயணிகள் படகு மூலமாக இந்த தீவுக்கு செல்லவேண்டியுள்ளது. தொல் ஆய்வு முடிவுகளின் மூலம் இந்த தீவுப்பகுதியில் கிடைக்கும் சான்றுகள் கி.மு 3 ம் நூற்றாண்டுக்குரியதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஸ்தலத்தில் மஹாவிஷ்ணு ஷங்காசுரா எனும் அசுரனை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தீவுப்பகுதிக்கு பேட் ஷங்கோதரா என்ற பெயரும் உண்டு. பேட் துவாரகா திவுப்பகுதியில் டால்பின்கள் மற்றும் கடல் உயிரினங்களை பார்த்து மகிழும் வகையில் கடல் சுற்றுலா செல்ல வசதிகள் உள்ளன. பிக்னிக் பொழுதுபோக்குகளில் ஈடுபடவும், கூடாரத்தங்கல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடவும் இந்த தீவுப்பகுதி உகந்தது. புவியியல் இருப்பிடம் துவாரகா நகரம் குஜராத் மாநிலத்தில் ஜாம்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. குஜராத் தீபகற்பத்தின் மேற்குக்கோடி முனையில் இந்த துவாரகா நகரம் வீற்றிருக்கிறது. சுற்றுலா அம்சங்கள் துவாரகா மற்றும் பேட் துவாரகா நகரத்திலும் அவற்றை சுற்றியுள்ள இடங்களிலும் ஏராளமான கோயில்கள் அமைந்திருக்கின்றன. துவாரகதீஷ் கோயில், நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில், மீராபாய் கோயில், ஷீ கிருஷ்ணா கோயில், ஹனுமான் கோயில் மற்றும் பேட் துவாரகாவில் உள்ள கச்சோரியு போன்றவை இவற்றில் முக்கியமானவையாகும். இப்படி ஏராளமான ஆன்மிக திருத்தலங்களை கொண்டிருப்பதால் குஜராத் மாநிலத்தில் யாத்ரிகர்கள் அதிகம் விஜயம் செய்யும் நகரமாக இந்த துவாரகா நகரம் பிரசித்தி பெற்றுள்ளது.

நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில்

நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில்

நாகேஷ்வரா ஜோதிர்லிங்கா கோயில் துவாரகாவிலிருந்து பேட் துவாரகாவிற்கு செல்லும் வழியில் உள்ளது. உலகத்திலுள்ள 12 ஜோதிர்லிங்களில் ஒன்று இந்த கோயிலில் காணப்படுகிறது. புனித யாத்திரை ஸ்தலமாக மட்டுமல்லாமல் பிரசித்தமான சுற்றுலாத்தலமாகவும் இது ரசிக்கப்படுகிறது. இந்த கோயிலில் தரையடித்தளத்தில் கருவறை அமைந்துள்ளது. கோயில் வளாகத்தில் ஒரு பெரிய சிவபெருமான் சிலையும் அழகிய நந்தவனமும் காணப்படுகின்றன. ஷிவராத்திரி திருநாளின்போது இந்த கோயிலுக்கு விஜயம் செய்வது விசேஷம்.

Gujarattourism

துவாரகதீஷ் கோயில்

துவாரகதீஷ் கோயில்

துவாரகா நகரத்தின் பிரதான கோயிலான இந்த துவாரகதீஷ் கோயில் ஜகத் மந்திர் (உலக கோயில்) என்றும் சிறப்புப்பெயரை பெற்றுள்ளது. 2500 வருடங்களுக்கு முன்னர் இந்த கோயிலின் ஆதி அமைப்பு ஷீ கிருஷ்ணரின் கொள்ளுப்பேரனான வஜ்ரநபி என்பவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிருஷ்ணரின் சொந்த ராஜ்ஜியமான துவாரகாபுரி மஹாபாரதப்போர் முடிவுக்குப்பின்னர் நீரில் மூழ்கியதாகவும் அதற்கடுத்த காலகட்டத்தில் இந்த கோயில் எழுப்பப்பட்டதாகவும் ஐதீக நம்பிக்கைகள் நிலவிவருகின்றன. தற்போது ஜகத் மந்திர் கோயில் வளாகத்தில் காணப்படும் கலாபூர்வமான கட்டமைப்புகள் 16ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. 43 மீ உயரமுடைய இந்த கோயில் கோபுரமும் அதில் சந்திர சூரிய சின்னங்கள் பொறிக்கப்பட்ட கொடியும் 10 கி.மீ தூரத்திலிருந்தே நன்றாக தெரிகின்றன. மிருதுவான சுண்ணாம்புக்கல் பாறைகளால் இந்த கோயில் உருவாக்கப்பட்டிருக்கிறது. சொர்க்க வாசல் எனும் நுழைவாயில் மற்றும் மோட்ச வாசல் எனும் வெளியேறும் வழி ஆகிய பிரத்யேக வாசல் அமைப்புகளை இது கொண்டிருக்கிறது. காலை 7மணி முதல் மாலை 9 .30 வரை இந்த கோயில் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது. மதியம் 12.30 முதல் 5 மணி வரை தற்காலிகமாக மூடப்படுகிறது.

Scalebelow

கும்லி

கும்லி

பர்தா மலைகளின் அடிவாரத்தில் இந்த கும்லி எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இது 7ம் நூற்றாண்டில் ஜெத்வா சால் குமார் என்பவரால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நகரம் ஜெத்வா வம்சத்தாரின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது. இங்கு குஜராத் மாநிலத்தின் சில அழகிய கோயிகள் அமைந்துள்ளன. இவற்றில் சோலங்கி வம்சத்தாரின் நவ்லோகா கோயில் பிரசித்தமாக விளங்குகிறது. இது குஜராத் மாநிலத்திலேயே பழமையான சூரியக்கோயிலாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. விகாய் வாவ் எனும் படிக்கிணறு அமைப்பும் இங்கு உள்ளது. தற்போது இந்த வரலாற்று கிராமத்தை புதுப்பித்து பாதுகாக்கும் முயற்சிகள் குஜராத் மாநில அரசின் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

 ருக்மிணிதேவி கோயில்

ருக்மிணிதேவி கோயில்

துவாரகா கோயில் நகரத்தில் துவாரகதீஷ் கோயில் வளாகத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் இந்த ருக்மிணிதேவி கோயில் அமைந்துள்ளது. கஜதாரா எனப்படும் யானை உருவங்கள் மற்றும் நரதாரா எனப்படும் மனித உருவங்கள் போன்ற சிற்பப்பொறிப்புகள் இந்த ருக்மிணிதேவி கோயிலின் வெளிப்பகுதியின் காணப்படுகின்றன. கிருஷ்ணரின் கோயிலிலிருந்து இந்த ருக்மிணிதேவி கோயில் விலகி காணப்படுவதன் பின்னணியில் ஒரு புராணிகக்கதையும் சொல்லப்படுகிறது. கிருஷ்ணரும் ருக்மணியும் ஒரு முறை துர்வாச முனிவரை தங்கள் இருப்பிடத்திற்கு வரவேற்க சென்றிருக்கின்றனர். அவர் தன்னை தேரில் இழுத்துச்சென்றால் வருவதாக கூறவே அவ்வண்ணமே கிருஷ்ணர் ருக்மணி தம்பதியர் அவரை அழைத்துவந்திருக்கின்றனர். வரும் வழியில் ருக்மணிக்கும் தாகம் எடுக்கவே கிருஷ்ணர் பூமியை தோண்டி கங்கை நீரை வரவழைத்து ருக்மணிக்கு கொடுத்துள்ளார். இந்த நீரில் சிறிது தனக்கு தராமல் முழுவதையும் ருக்மணியே குடித்துவிட்டதால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் கணவரிடமிருந்து பிரிந்திருக்கும்படி ருக்மணியை சபித்து விட்டதாக அந்த கதை கூறுகிறது. இப்படி கிருஷ்ணர் மற்றும் ருக்மணி கோயில்கள் விலகி தனித்தனியே இருப்பதற்கு இதுவே காரணம் என்பது ஐதீகம்.

Read more about: travel gujarat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X