Search
  • Follow NativePlanet
Share
» »நீங்க இப்பவே ஊர்சுற்ற கிளம்ப வேண்டும் என்று உணர்த்தும் 8 அறிகுறிகள்

நீங்க இப்பவே ஊர்சுற்ற கிளம்ப வேண்டும் என்று உணர்த்தும் 8 அறிகுறிகள்

கல்லூரி நாட்களில் நாம் எல்லோருக்கும் வாழ்கையை பற்றிய கனவுகள் நிறைய இருந்திருக்கும். அதிலும் குறிப்பாக வேலை கிடைத்து கொஞ்சம் பணம் சேர்த்து நமக்கே நமக்கென்று இருக்கும் அந்த உயிர் நண்பர்களுடன் பாஸ்போர்ட் தீர்ந்துபோகும் அளவுக்கு ஏராளமான நாடுகளுக்கு பயணம் செல்லவேண்டும் என்ற கனவு எல்லோருக்குமே இருந்திருக்கும். அப்படிப்பட்ட ஒரு பயணத்தை மேற்கொள்ள இதுவே சரியான தருணம். நீங்க இப்பவே ஊர்சுற்ற கிளம்ப வேண்டும் என்று உணர்த்தும் 8 அறிகுறிகள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

காதலர் தினத்தை முன்னிட்டு விமான கட்டணங்களில் ரூ.8000 வரை தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

 பேஸ்புக்கை பார்த்து பெருமூச்சு விடுகிறீர்களா ?

பேஸ்புக்கை பார்த்து பெருமூச்சு விடுகிறீர்களா ?

"இங்கனகுள்ளேயே சுத்திகிட்டு இருந்த நம்ம பையனா இது" என்று உடன் படித்த ஒருவன் அமெரிக்க சுதத்திர தேவி சிலை முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேஸ்புக்கில் பார்த்து பெருமூச்சு விடுகிறீர்களா ?. 'நம்மளும் எப்ப இங்கெல்லாம் போகப்போகிறோம்" என்று தோன்றினால் இப்பவே மஞ்சப்பையை தூக்கிட்டு கிளம்புங்க பாஸ்.

பிரட், பட்டர் & டிராபிக் ஜாம் :

பிரட், பட்டர் & டிராபிக் ஜாம் :

சென்னையிலோ, பெங்களுருவிலோ வசிக்கிறீர்களா ? சொந்த ஊரில் இருந்து யாரவது வந்து பார்த்து விட்டு "இந்த டிராபிக்ல எல்லாம் எப்படி வண்டி ஓட்டறீங்க?" என்று கேட்க்கும் போது " இல்லையே, எப்பவும் போல தான இருக்கு" என்று பதில் சொன்னால் அடுத்த விடுமுறைக்கு மனிதர்களே வசிக்காத இடத்திற்கு வண்டியை விடுங்கள். எல்லையற்ற இவ்வுலகில் சுதந்திரமாக சிறகடித்து பறந்திடுங்கள்.

அலாரம் வாட்சை உடைக்கணும் போல இருக்குதா ?

அலாரம் வாட்சை உடைக்கணும் போல இருக்குதா ?

எப்பவுமே தோற்காத காதல் ஒன்று நம் வாழ்கையில் இருக்கும் என்றால் அது நமக்கும் நம் தூங்கும் மெத்தைக்கும் இடையிலான காதலாகத்தான் இருக்கும். டீம் லீட் கிட்ட திட்டு வாங்கி, சிஸ்டத்தில் தலையை முட்டி வேலை செய்து வீடு திரும்பி குறட்டை விட்டு தூங்கும் போது அதிகாலையில் அலராம் அடிக்கையில் அதனை அப்படியே சுத்தியால் உடைக்கணும் போல இருக்குதா?

photo:Moyan Brenn

அலாரம் வாட்சை உடைக்கணும் போல இருக்குதா ?

அலாரம் வாட்சை உடைக்கணும் போல இருக்குதா ?

கொஞ்ச நாள் லீவு போட்டுவிட்டு கோவாவுக்கோ, ராஜஸ்தானில் இருக்கும் உதைபுருக்கோ செல்லுங்கள். கோவா கடற்கரையில் பார்டி கொண்டாடுங்கள், உதைபுரின் பழமையான அரண்மனைகளில் சில இரவுகளை ராஜாவை போல வாழ்ந்திடுங்கள்.

உங்க சிஸ்டம் வால் பேப்பர் என்ன ?

உங்க சிஸ்டம் வால் பேப்பர் என்ன ?

நம்மால் போகத்தான் முடியவில்லை, பார்க்கவாவது செய்யலாமே என்று உங்க கனவு இடத்தை கணினியின் வால் பேப்பராக வைத்துக்கொண்டு ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கிரீர்களா ?

உங்க சிஸ்டம் வால் பேப்பர் என்ன ?

உங்க சிஸ்டம் வால் பேப்பர் என்ன ?

அப்படி பார்த்துக்கொண்டே இருப்பதால் எதுவும் மாறி விடாது. என்ன பிரச்சனை வந்தாலும் சமாளித்துக்கொள்ளலாம் என்ற தைரியத்துடன் உங்கள் பயணத்தை துவங்குங்கள். வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாதவர்கள் இந்தியாவிலேயே வெளிநாடுகளுக்கு இணையான இடங்கள் இருக்கின்றன. அவற்றைப்பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

photo:Ian Iott

கடைசியா எப்ப சார் டிக்கெட் புக் பண்ணினீங்க :

கடைசியா எப்ப சார் டிக்கெட் புக் பண்ணினீங்க :

தீபாவளி, பொங்கல் மற்றும் ஆயுத பூஜையை தவிர்த்து எப்பவாவது இதுவரைக்கும் போகாத இடத்துக்கு டிக்கெட் வாங்கியிருக்கீங்களா. அப்படி இதுவரைக்கும் செஞ்சதே இல்லையென்றால் நீங்கள் இதுவரை முழுமையாக வாழவே இல்லை என்று தான் அர்த்தம். பயணங்கள் மூலமாக மட்டுமே இந்த உலகத்தின் பேரழகை ரசிக்க முடியும்.

photo:Moyan Brenn

டூயட் பாட ஆசையா :

டூயட் பாட ஆசையா :

கண் மூடி கண் திறப்பதற்குள் நம்ம ஹீரோக்கள் டூயட் பாட நாம் கேள்விப்பட்டிருக்காத இடத்திற்கு சென்று விடுவார்கள். அதை பார்த்து ஏக்கப்படும் நீங்கள் ஹனிமூனுக்காக ஊட்டியோ, கொடைக்கானலோ போய் வந்த பிறகு மனைவியுடன் எங்குமே சென்றதில்லையா?. என்ன சார் நீங்க...கிடைத்த ஒரு வாழ்க்கையை முடிந்த அளவு கொண்டாடுங்கள். பணம் பண்ணுவது சில நாட்கள் நிற்பதால் ஒன்றும் ஆகி விடாது.

பார்த்த முகங்களையே பார்த்து சலித்து விட்டதா ? :

பார்த்த முகங்களையே பார்த்து சலித்து விட்டதா ? :

'ஒரே போன்ற விஷயங்களை திரும்ப திரும்ப செய்து விட்டு அதனை வாழ்க்கை என்று சொல்லாதீர்கள்' என்று அர்த்தப்படும் ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. உங்கள் வாழ்க்கையும் எப்போதும் ஒரே போன்று இருப்பது போல உள்ளதா?. தினமும் பார்த்த முகங்களையே பார்த்து சலித்து விட்டதா. யோசிக்காமல் பேக்கை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள். இயற்கை காட்சிகள் நிறைந்த இடத்திற்கு சென்று அதன் அழகில் மெய் மறந்திடுங்கள்.

photo:Moyan Brenn

வாய்விட்டு சிரிப்பதே மறந்து விட்டதா ? :

வாய்விட்டு சிரிப்பதே மறந்து விட்டதா ? :

நாள் முழுக்க யோசிக்க கூட நேரம் இல்லாமல் வேலை, விட்டுக்கு வந்ததும் மனைவி, குழந்தைகளின் நச்சரிப்பு, இருக்கும் ஒரே பொழுது போக்கு டீ.வியில் காமெடி சேனல் பார்ப்பது. கொஞ்சம் அமைதியாக யோசித்து பார்க்கும் போது மனம் விட்டு சிரித்தே பல நாட்கள் ஆகிவிட்டது போல தோன்றுகிறதா. அப்படி மட்டும் இருந்தால் நாம் நமக்காக வாழவே இல்லை என்று அர்த்தம். உங்களுக்கே உங்களுக்கென்று சில நாட்களை ஒதுக்கி உற்ற நண்பர்களுடன் எங்காவது பயணியுங்கள். முக்கியமாக அதை கொண்டாடுங்கள்.

Read more about: off beat travel udaipur goa
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X