Search
  • Follow NativePlanet
Share
» »நமக்கு பழனி மலை போல் கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் எங்க இருக்கு தெரியுமா?

நமக்கு பழனி மலை போல் கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் எங்க இருக்கு தெரியுமா?

நமக்கு பழனி மலை போல் கர்நாடகாவில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் எங்க இருக்கு தெரியுமா?

By Bala Karthik

கர்நாடகாவின் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில் காணப்படும் ஆலயம் தான் குக்கே சுப்பிரமணியா எனப்பட தென்னிந்தியாவின் பெயர் பெற்ற ஆலயம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த ஆலயமானது சிவபெருமானின் மகனான சுப்பிரமணியருக்கு அர்ப்பணிக்கப்பட்டு காணப்பட, கடவுள் படைக்கு தளபதியாக சிவபெருமானை கருதப்படுகிறது.

குமரப்பர்வதம் அடிவாரத்தில் காணப்படும் இந்த ஆலயம், பயண ஆர்வலர்களுக்கான பிடித்தமான இலக்காக அமைய, கர்நாடகாவின் மிகவும் கடினமான பயணங்களுள் இதுவும் ஒன்று என தெரியவருகிறது. இங்கே வருபவர்கள் ஆலயத்தை சுற்றி பாய்ந்துக்கொண்டிருக்கும் குமரதாரா நதியின் உள்ளே தங்களுடைய மனதையும் தொலைக்கின்றனர்.

 எப்படி அடைவது?

எப்படி அடைவது?


ஆகாய மார்க்கமாக அடைவது எப்படி?

அருகில் காணப்படும் விமான நிலையமாக மங்களூரு விமான நிலையமானது காணப்பட, இங்கிருந்து 115 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. இவ்விடம் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைத்து காணப்பட, அயல் நாட்டிற்கும் சேவைகளானது காணப்படுகிறது.


இரயில் மார்க்கமாக அடைவது எப்படி?

சுப்பிரமணிய சாலை இரயில் நிலையமானது மங்களூரு, பெங்களூரு, மற்ற பிற முக்கிய நகரங்களுடன் நாட்டின் பல நகரங்களுடனும் இணைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையமானது 12 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது எப்படி?

குக்கே சுப்பிரமணியாவை நாம் அடைய சிறந்த வழிகளுள் ஒன்றாக சாலை வழியானதும் அமைகிறது. இந்த நகரமானது சாலையுடன் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்க, மாநிலத்தின் பல முக்கிய நகரங்களுக்கும் குக்கேவிற்கான வழக்கமான பேருந்துகள் இயக்கப்படுகிறது.

ஆரம்ப புள்ளி: பெங்களூரு

இலக்கு: குக்கே சுப்பிரமணியா

PC:karthick siva

காண சிறந்த நேரங்கள்:

காண சிறந்த நேரங்கள்:

காண சிறந்த நேரங்கள்: அக்டோபர் முதல் மார்ச் வரையில்


பயண தூரம்:

பெங்களூருவிலிருந்து குக்கேவிற்கான தூரமாக ஒட்டுமொத்தமாக 279 கிலோமீட்டர் காணப்படுகிறது. மொத்தமாக குக்கேவை அடைய மூன்று வழிகள் காணப்பட, அதனை பற்றி நாம் பார்க்கலாம்.

வழி 1: பெங்களூரு - நெலமங்கலா - குனிகல் - யாடியூர் - ஹாசன் - சக்லேஷ்பூர் - பனடாட்கா வழியாக குக்கே சுப்பிரமணியா - பெங்களூரு சாலை.

வழி 2: பெங்களூரு - ராமநகரா - சன்னாப்பட்னா - மாண்டியா - சன்னராயப்பட்னா - ஹாசன் - சக்லேஷ்பூர் - தேசிய நெடுஞ்சாலை 275 & பனடாட்கா வழியாக குக்கே சுப்பிரமணியா - பெங்களூரு சாலை.

வழி 3: பெங்களூரு - ராமநகரா - சன்னாப்பட்னா - மாண்டியா - ஹுன்சூர் - குஷால் நகர் - மடிக்கேரி - தேசிய நெடுஞ்சாலை 275 வழியாக குக்கே சுப்பிரமணியா.

 மூன்று வழிகள்:

மூன்று வழிகள்:

முதலாம் வழியாக நீங்கள் செல்ல நினைத்தால், தோராயமாக 5 மணி நேரம் மூலமாக பனடாட்கா - பெங்களூரு சாலை வழியாக குக்கேவே அடையலாம். இவ்வழியானது பெயர் பெற்ற நகரங்களான ஹாசன், சக்லேஷ்பூர் என பல இடங்கள் வழியாக செல்லக்கூடும்.

இந்த சாலையானது நல்ல முறையில் பராமரிக்கப்பட்டுவர, சரியான வேகத்தில் இந்த சாலையில் செல்வதன்மூலம் 280 கிலோமீட்டர் கடந்து இலக்கையும் நம்மால் எட்டமுடிகிறது.

நீங்கள் இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்தால், பெங்களூருவிலிருந்து குக்கேவிற்கு, தோராயமாக இந்த 332 கிலோமீட்டரை நாம் கடக்க 7 மணி நேரங்கள் ஆக, தேசிய நெடுஞ்சாலை 275 & பனடாட்கா - பெங்களூரு சாலையின் வழியாகவும் நம் பயணமானது அமையக்கூடும். மூன்றாம் வழியாக நாம் செல்ல, இந்த 327 கிலோமீட்டரை நாம் கடக்க, 7.5 மணி நேரங்கள் தேவைப்பட, குக்கேவை நாம் அடைவதற்கான வழியாக தேசிய நெடுஞ்சாலை 275ம் காணப்படுகிறது.

வாரவிடுமுறைப் பயணமாக இது அமையக்கூடும். அதனால், சனிக்கிழமை காலை நாம் புறப்பட, ஒன்றரை நாட்களை இனிமையாக செலவுசெய்திட, பெங்களூருவிற்கு நாம் திரும்ப ஞாயிற்றுக்கிழமை காலை அல்லது மதியப்பொழுதானது அமைய, நகரத்தை மாலை அல்லது இரவு வேளையில் நாம் அடைகிறோம்.

நெலமங்கலா மற்றும் ஹாசனின் சிறு நிறுத்தங்கள்:

நெலமங்கலா மற்றும் ஹாசனின் சிறு நிறுத்தங்கள்:

பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, அதிகாலையில் புறப்படும் நீங்கள் நெரிசலை தவிர்த்து இனிமையான பயணத்தையும் தொடர்ந்திடலாம். நெடுஞ்சாலையை அடையும் நீங்கள், எண்ணற்ற வழிகளில் உங்களுடைய காலை உணவை முடித்துக்கொள்ளலாம்.

நெலமங்கலாவில் விரைவான நிறுத்தம் காணப்பட, சூடான தோசையை வாயில் பிய்த்துப்போட்டுக்கொண்டு மதிய உணவை நோக்கிய நிறுத்தமாக ஹாசனை தேடி புறப்படக்கூடும்.

நெலமங்கலாவிலிருந்து சாலை வழியாக நீங்கள் செல்ல, கிராமப்புற கர்நாடகாவின் பக்கங்களை அடைவதோடு பெங்களூரு மெட்ரோ வாழ்க்கையிலிருந்து விடுபட்ட ஒரு உணர்வையும் மனதில் கொள்ளக்கூடும்.

PC: karthick siva

ஹாசன்:

ஹாசன்:


ஹொய்சலா பேரரசின் சிம்மாசனமாக ஹாசன் காணப்பட, ஹசனம்பா தேவியின் பெயரானது இவ்விடத்திற்கு வைக்கப்பட்டிருக்க, இந்த நகரத்தின் காவல் தேவி இவள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நகரமானது பிரசித்திப்பெற்ற தளமான பெளூர், ஹலேபிடு, ஷ்ரவணாபெலகோலா என மற்ற பிற தொல்லியல் முக்கிய தளங்களையும் கொண்டிருக்கிறது.

ஹாசனில் உங்களுடைய மதிய உணவை முடித்துக்கொள்ளும் நீங்கள், குக்கேவை நோக்கி புறப்பட, இந்த 100 கிலோமீட்டரை கடப்பதன் மூலமாக ஓர் அல்லது இரண்டு மணி நேரங்களில் இலக்கையும் எட்டுகிறீர்.

PC: Shiva Shenoy

 இலக்கு: குக்கே சுப்பிரமணியா:

இலக்கு: குக்கே சுப்பிரமணியா:

குமரதாரா நதிக்கரையில் காணப்படும் குக்கே சுப்பிரமணியா, இயற்கை அழகும், மத புனிதமும் கொண்டதாக காணப்படுகிறது.

இவ்விடமானது ஈடு இணையற்ற எண்ணற்ற இயற்கை சிறப்பம்சங்களுடன் காணப்பட, குமர பர்வதமானது உயர்ந்து ஆலயத்தின் பின்புலத்தில் காணப்பட, இயற்கை அழகால் இவ்விடமானது மேலும் மெருக்கூட்டப்படுகிறது.

PC: karthick siva

 குக்கே சுப்பிரமணிய ஆலயம்:

குக்கே சுப்பிரமணிய ஆலயம்:


கர்நாடகாவின் ஏழு முக்தி தளங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது குக்கே சுப்பிரமணிய சுவாமி ஆலயம். புராணங்களின்படி, அரக்கரான தரகா மற்றும் சூரபத்மசூரனை அழிக்க, குமரப்பர்வதத்திற்கு சுப்பிரமணிய சுவாமி தன் அண்ணன் கணேஷனுடனும் மற்றவர்களுடன் இணைந்து வந்ததாக சொல்லப்பட, வந்த இடத்தில் இந்திராவால் வரவேற்கப்பட, இவள் தான் அவருடைய மகளை சுப்பிரமணியர் கைகளில் கொடுத்து மணமுடிக்க ஆசைக்கொண்டவள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

PC: Raja Ravi Varma

 குமரதாரா:

குமரதாரா:


அவர்களது திருமணத்தில், கடவுளால் பல புனித நதிகளில் நீரெடுத்து அபிஷேகமானது சுப்பிரமணியருக்கு செய்யப்பட, அந்த நீரானது கீழே விழுந்து, குமரதாரா நதியாக உருவாகியதாகவும் வரலாறு சொல்கிறது.

இந்த ஆலயமானது, நாக தெய்வமான வாசுகியை வணங்க பெயர்பெற்று காணப்பட, இந்த ஆலயத்தின் பூஜைகளானது சர்ப தோஷங்களையும், நாகங்களினால் உண்டான சாபங்களையும் நீக்க வல்லது எனவும் சொல்லப்படுகிறது.

PC: Dinesh Valke

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X