Search
  • Follow NativePlanet
Share
» »கோவா போனா பக்கத்துல இந்த உயர்ந்த நீர் வீழ்ச்சிக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்க!!

கோவா போனா பக்கத்துல இந்த உயர்ந்த நீர் வீழ்ச்சிக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்க!!

கோவா போனா பக்கத்துல இந்த உயர்ந்த நீர் வீழ்ச்சிக்கும் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுங்க!!

By Bala Karthik

இன்று வேகமாக நகர்ந்துக்கொண்டிருக்கும் மனித வாழ்வில் அனைவருக்கும் ஒரு இடைவெளியானது கண்டிப்பாக தேவைப்படக்கூடும். தற்போதும் அதன்பின்னரும் சாகச காட்சிகளை நோக்கி நாம் நகர்கிறோம். இதனால் நம் மனமானது தூய்மையாகவும், புத்துணர்வுடனும் காணப்பட, இதனால் நம் வாழ்க்கைக்கு புதுமையானதும் கிடைத்திடக்கூடும். இந்த இடைவெளியை நாம் பெற, பெங்களூருவிலிருந்து 9 மணி நேரம் தேவைப்பட, அதற்கு ஏற்ற இடமாக துத்சாகர் அமைகிறது.

கர்நாடகா மற்றும் கோவா எல்லைகளில் மேற்கு தொடர்ச்சியினை தவழ்ந்து காணப்படும் துத்சாகர், இந்தியாவின் உயரிய நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக அமைய, மண்டோவி நதியும் பாய்ந்தோடுகிறது. பெங்களூருவிலிருந்து 560 கிலோமீட்டர் தொலைவிலும், கோவாவிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. இந்த நான்கடுக்கு நீர்வீழ்ச்சியானது 1017அடி உயரத்தில் விழ! துத்சாகர் என்பதனை இலக்கிய ரீதியாக "பாற் கடல்" என அழைக்க, நீர்வீழ்ச்சியின் காட்சிப்பிழையற்றும் காணப்படுகிறது.

இந்த கம்பீரமான வீழ்ச்சியானது பகவான் மஹாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்காவில் காணப்படுகிறது. அதனால், இவ்விடமானது அதீதமான அடர்ந்த காடுகளையும் இயற்கை வளத்தையும் கொண்டு சூழ்ந்துள்ளது. அத்துடன் துத்சாகர் பயண ஆர்வலர்களுக்கு சிறந்த சாகச இடமாகவும் அமையக்கூடும்.

துத்சாகரை நாம் காண சிறந்த நேரங்கள்:

துத்சாகரை நாம் காண சிறந்த நேரங்கள்:


பருவமழைக்காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் மழையூட்டப்பட்டு செறிவுடன் துத்சாகரை வைத்திருக்கிறது. ஆனால், நீர்வீழ்ச்சியை காண ஆசைக்கொண்டால் மட்டுமே இந்த நேரத்தில் வரவேண்டும். பயண ஆர்வலர்கள் இவ்விடத்தை காண ஆசைக்கொண்டால், பருவ மழைக்காலத்திற்கு பின்னரான அக்டோபர் முதல் பிப்ரவரி வரையில் வந்து செல்லலாம்.

PC: Kumaresh Rajarajan

பெங்களூருவிலிருந்து துத்சாகருக்கு செல்லும் வழி:

பெங்களூருவிலிருந்து துத்சாகருக்கு செல்லும் வழி:

ராஜாஜி நகரின் தும்கூர் பிரதான சாலை - தேசிய நெடுஞ்சாலை 48 - தர்வாத்தின் மாநில நெடுஞ்சாலை 34 - வெளியே தேசிய நெடுஞ்சாலை 48 - கார்லியின் தேசிய நெடுஞ்சாலை 748 - இணைந்து காணப்படும் தேசிய நெடுஞ்சாலை 748 - தர்பன்தோரா - சான்கோர்டம் - மொல்லெம் - கொல்லெம் சாலை - துத்சாகர் நீர்வீழ்ச்சி (547 கிலோமீட்டர் - 9 மணி நேரம்)

இங்கே காணும் மற்ற இடங்களாக சில இடங்கள் காண, துத்சாகரை நோக்கிய சாலைப்பயணமும் நாம் செல்கிறோம்.

தும்கூரில் ஒரு பயணம்:

தும்கூரில் ஒரு பயணம்:

தும்கூரின் இரு பிரசித்திப்பெற்ற மலையாக மதுகிரியும், தேவராயனதுர்காவும் காணப்பட, பயணத்திற்கான விரைவான இடமாகவும் இவ்விடம் அமையக்கூடும். பெங்களூருவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் தும்கூரு காணப்படுகிறது. பெயர்பெற்ற மலையான தேவராயனதுர்காவில் இயற்கை வசந்தமானது காணப்பட, அதனை "நமதா சில்லுமே" என அழைக்கிறோம். இந்த மலையின் உச்சியை நாம் அடைய, சிறந்த முறை பாதையானது செதுக்கப்பட்டிருக்க படியாகவும் அமையக்கூடும். இந்த குறிப்பிடப்பட்ட பாதையில் ஏழு கதவுகள் காணப்பட, மத்தியில் புதரும் காணப்படுவதோடு சிகரம் நோக்கியும் நம்மை அழைத்து செல்கிறது.

மதுகிரி அல்லது "தேன் மலை" என இதனை அழைக்க, இக்கோட்டையின் கதவின் வழியாக நாம் நுழைய அதுதான் மலைஅடிவாரத்தின் மீதம் என்பதும் தெரியவருகிறது. இந்த பயணமானது எளிதாக இருப்பதில்லை என்பதால், இந்த செங்குத்தான வழியானது நம்மை மேல் நோக்கி அழைத்து செல்கிறது. இந்த பயணத்துக்கான ஒட்டுமொத்த கால அவகாசமாக 3 மணி நேரம் ஆக, அதுவும் பயண வல்லுனர்களின் அனுபவத்தை பொறுத்தே அமைந்திடவும் கூடும்.

PC: Sangrambiswas

 சித்ரதுர்கா:

சித்ரதுர்கா:

சோழ வம்சத்து பாரம்பரியம் என பெயர்பெற்று காணப்படும் சித்ரதுர்கா, கர்நாடகாவின் பிடித்தமான சுற்றுலா தளமும் கூட. இங்கே நாம் காண வேண்டிய இரு பகுதிகளாக சித்ரதுர்கா கோட்டையும், சந்திரவள்ளி குகையும் காணப்படுகிறது.

பல வம்சத்தால் இவ்விடமானது கட்டப்பட்டு காணப்பட காலமாக பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலமென்பதும் தெரியவர, மாபெரும் கட்டமைப்பான சித்ரதுர்கா கோட்டை அரணையும், கிடங்குகளையும், மசூதிகளையும், ஆலயத்தையும் கொண்டிருக்கிறது. இதன் மேல்கோட்டையானது பதினெட்டு ஆலயங்களை கொண்டிருக்க, கீழ் கோட்டையில் ஒரு பெரிய ஆலயமும் காணப்படுகிறது.

சந்திரவள்ளி குகைகளானது சிவலிங்காவை வீடாக கொண்டிருக்க, கடல் மட்டத்திலிருந்து 80 அடி உயரத்தில் காணப்படுகிறது. சந்திரவள்ளியை கிர்பனகல்லு, சித்ரதுர்கா, சோளக்குடா மலை சூழ்ந்திருக்கிறது. இந்த குகையின் அருகாமையில் ஏரி காணப்பட, இந்த இடத்தின் பூதாகர காட்சியால் மனதை நெகிழ செய்கிறது.

PC:Nagarjun

தாவனகரே:

தாவனகரே:

சித்ரதுர்காவிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் தாவனகரேயை முன்பு ‘இந்தியாவின் மான்செஸ்டர்' என அழைக்கப்பட்டது. இங்கே எண்ணற்ற பருத்தி ஆலைகள் காணப்பட அவை நகரத்திலிருந்தும் வந்தவை என தெரிகிறது. இவ்விடம் எண்ணற்ற ஆலயங்களை கொண்டிருக்க, 75அடி கடிகார கோபுரத்தையும் கொண்டிருப்பதோடு நகரத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது.

தாவனகரேயானது மிகவும் சுவையூட்டும் உணவுகளுக்கு பிரசித்திப்பெற்று விளங்குகிறது. தாவனகரே பென்னே தோசையானது நம் நாவை சுழற்ற செய்ய, பலரும் முயற்சி செய்யும் ஒரு வித உணவாகவும் இது பெங்களூருவில் அமையக்கூடும். அத்துடன் இனிப்பான உணவாக ‘குலாடிகி உன்டே' காணப்பட, அதுவும் தவனக்கேரியில் புகழ்பெற்று விளங்குகிறது.

PC: Srutiagarwal123

ரானேபென்னூர் கலைமான் சரணாலயம்:

ரானேபென்னூர் கலைமான் சரணாலயம்:


இந்தியாவில் காணப்படும் ஒரு சில சரணாலயங்களுள் ஒன்றாக ரானேபென்னூர் கலைமான் சரணாலயம் காணப்பட, குறிப்பாக கலைமான்கள் அல்லது "கிருஷ்ண முருகா"வுக்கு பாதுகாப்பான இடமாக காணப்படுகிறது. தவனக்கேரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் இது காணப்படுகிறது.

கலைமானை தவிர்த்து, விலங்குகளான நரி, எறும்புண்ணி, கீரிப் பிள்ளை என பலவற்றையும் நம்மால் பார்க்க முடிகிறது. இவ்விடமானது அழிந்துக்கொண்டிருக்கும் இனமான சிறந்த இந்திய பறவை வகை இனத்துக்கு வீடாகவும் விளங்குகிறது.

PC: Tejas054

ஹவேரியில் காணப்படும் ஆலயம்:

ஹவேரியில் காணப்படும் ஆலயம்:

அதீத கலாச்சாரத்துடன் கர்நாடகாவில் காணப்படும் ஆலய நகரமான ஹவேரி, ரானேப்பென்னூரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. சோழ வம்சத்தின் கைவினை திறனானது ஆலயத்தின் கட்டிடக்கலையிலும் காணப்படுகிறது.

ஏராளமான ஆலயங்கள் இங்கே காணப்பட, கிமு.12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அற்புதமான ஆலய அமைப்பாக தரகேஷ்வர ஆலயமானது காணப்படுகிறது. இருப்பினும், கடம்பர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்க, தேவையான மாற்றங்களை சாலுக்கியர்களும் அதன்பின்னர் செய்தனர். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க, ஹவேரியின் ஹனகல் நகரத்திலும் இது காணப்படுகிறது.

மற்ற இரு அழகிய ஆலயமாக சித்தேஷ்வர ஆலயமும், கலகேஷ்வர ஆலயமும் காணப்பட, நாம் காண வேண்டிய ஆலயங்களாகவும் அமையக்கூடும்.

PC: Dineshkannambadi

பனகப்புரா மயில்கள் சரணாலயம்:

பனகப்புரா மயில்கள் சரணாலயம்:


ஹவேரியிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது பனகப்புரா மயில்கள் சரணாலயம். இங்கே எண்ணற்ற அளவிலான ஆண் மயில்களும், பெண் மயில்களும் இப்பகுதியில் காணப்பட, இந்திய அரசாங்கத்தால் 2006ஆம் ஆண்டு மயில்கள் சரணாலயமாகவும் இது முடிவு செய்யப்பட்டது. இப்பகுதியில் மனித நடமாட்டம் குறைவாகவே இருக்க, மயில்கள் இனப்பெருக்கத்திற்கு அது உதவவும் செய்கிறது.

இங்கே ஆயிரக்கணக்கான மயில்கள் காணப்பட! அதனால், இவ்விடத்தை காண வரும் எத்தகைய சுற்றுலா பயணிகளுக்கும் மயில் மந்தைகளையும் காண முடிகிறது.

PC: Kellie Hastings

சிக்கௌனின் உத்சவ பாறை தோட்டம்:

சிக்கௌனின் உத்சவ பாறை தோட்டம்:

சிக்கௌன் தாலுக்காவில் காணப்படும் கோட்டக்கொடியில் காணப்படும் உத்சவ பாறைத்தோட்டம் ஒரு சிற்ப தோட்டமாக அமைய, இங்கே நகர்ப்புற கலாச்சார மற்றும் பாரம்பரிய கலைகளையும் கொண்டிருக்க, அவை கர்நாடகாவின் பாரம்பரியம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தோட்டத்தில் 2,000 சிற்பங்களுக்கு மேல் காணப்பட, அவை அன்றாட பணியாட்களின் புலமையையும் சித்தரித்து காணப்படுகிறது.

இந்த மாபெரும் தோட்டத்தின் மூளையாக T.B. சொளபக்கனாவர் இருக்க, இந்த வித வடிவமைப்பை மேம்படுத்தி பல விருதுகளையும் அவர் வென்றுள்ளார். இந்த சிற்பங்களின் கலைப்பணியானது அனைத்து தரப்பு வயதினருக்கு ஏற்றதாகவும் அமையக்கூடும்.

PC: ShwetaW

ஹுப்பல்லி மற்றும் தர்வாட்:

ஹுப்பல்லி மற்றும் தர்வாட்:

இதனை முன்னர் ‘ஹுபிலி' என அழைக்க, இந்த ஹுப்பல்லி என்பதற்கு ‘மலர்க்கொடி' என இலக்கிய ரீதியாக பொருள் தருகிறது. ஹுப்பல்லி மற்றும் தர்வாட் கர்நாடகாவின் இரட்டை நகரமாக அழைக்க, அதனை குறிப்பதாகவும் அமையவும் கூடும். தர்வாடின் ஒரு அங்கமாக ஹுப்பல்லி இருக்க, அதன் பின்னர் இந்த நகரத்தை சொந்தமாக்கிக்கொள்ளவும் பட்டது.

இங்கே காணப்படும் சில சுவாரஸ்யமான இடமாக உங்கல் ஏரி, சந்திரமௌலீஸ்வரா ஆலயம், இந்திரா காந்தி கண்ணாடி வீடு தோட்டம் என பலவும் காணப்படுகிறது.

புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக உங்கல் ஏரி காணப்பட, பசுமையான தோட்டமும் இதனை சூழ்ந்திருக்கிறது. இந்த ஏரியில் படகுப்பயணமும் காணப்படுகிறது. விவேகானந்தரின் சிலையானது இந்த ஏரியின் நடுவில் நிறுவப்பட்டும் காணப்படுகிறது.

PC: GuruAngadi

டண்டேலியின் சாகச செயல்கள் பற்றி:

டண்டேலியின் சாகச செயல்கள் பற்றி:


டவர்கட்டி கிராமத்திலிருந்து 50 கிலோமீட்டர் வெளியே டண்டேலி காணப்படுகிறது. இந்த நகரமானது புகழ்மிக்க சுற்றுலா இடமாக அமைய, இவ்விடத்தின் இயற்கை நிலப்பரப்பும் அதற்கு காரணமாய் அமையக்கூடும். இவ்விடமானது அடர்ந்த காடுகளை கொண்டிருக்க நகரம் முழுவதும் காணப்படுவதோடு, காளி நதியும் எண்ணற்ற நீர் விளையாட்டுகளை கொண்டிருக்கிறது.

இங்கே பல உள்ளூர் சேவைகள் சாகசங்களை கூடாரமிட்டு நமக்கு தர அத்துடன் இணைந்து இயற்கை நடையும், பறவை பார்க்கும் ஆர்வமெனவும் காணப்பட, அவை அந்த சுற்றுலா திட்டத்தை பொறுத்தும் அமையக்கூடும். காளி நதியில் வெள்ளை நிற நீர் படகு சவாரி காணப்பட அது பிடித்தமான விளையாட்டாகவும் அமையக்கூடும் என்றாலும், ஆனால், நீர் நிலையானது அதீதமாக காணப்படும் போது மட்டுமே அதுவும் காணப்படக்கூடும். அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் நாம் நீர் நிலையை அதீதமாக எதிர்ப்பார்க்கவும் முடியக்கூடும்.

கயாகிங்க் மற்றும் படகு வலித்தலானது இங்கே காணப்படும் மற்ற இரு செயலாக அமைய, வருடம் தோரும் அனைத்து நாட்களும் இதனை நாம் உற்சாகத்துடன் செயலாற்றவும் முடியக்கூடும்.

PC: sarangib

பகவான் மஹாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்கா:

பகவான் மஹாவீர் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசிய பூங்கா:


துத்சாகர் நீர்வீழ்ச்சியானது பகவான் மஹாவீர் சரணாலயம் உள்ளே காணப்படுகிறது. அதனால், துத்சாகரை நாம் அடைய, இந்த சரணாலயத்தின் பார்வையை மாற்றிக்கொள்ளவும் வாய்ப்பானது கிடைக்க கூடும். இவ்விடமானது பல வித விலங்கினமான குரைக்கும் மான், பறக்கும் அணில், மெல்லிய தேவாங்குவிற்கு வீடாகவும் விளங்குகிறது.

இந்த சரணாலயமானது பல பறவையினத்துக்கு வீடாக விளங்க, அவை ரூபி தொண்டைக்கொண்ட மஞ்சள் நிற ஒருவிதக்குருவி, மூன்று காலுள்ள கிங்பிஷர், மரகத புறா, தங்க நிற ஒரு வகை பறவை என பலவற்றையும் கொண்டிருக்க! அதனால் ஒட்டுமொத்த பகுதியும், இயற்கையின் முன்னே நம் மனதை கட்டி இழுத்து தூக்கி தூரவும் செல்கிறது.

PC: Shefali Kumar

துத்சாகரின் பயணம் மற்றும் கூடாரமிடல்:

துத்சாகரின் பயணம் மற்றும் கூடாரமிடல்:


துத்சாகர் பயணமானது அரண்மனை பாறை கிராமத்திலிருந்து வழக்கமாக தொடர, 14 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. இந்த ஒட்டுமொத்த பயணத்துக்கான தூரமாக 6 முதல் 7 மணி நேரம் வரை தேவைப்பட, அதனால், அதிகாலையில் பயணத்தை நாம் தொடங்குவது நல்லதாகும். இந்த நீர்வீழ்ச்சி சிகரத்தை நாம் அடைய, இரவு நேர கூடாரத்தையும் நாம் தயார் செய்திடலாம். நீர்வீழ்ச்சியின் அருகாமையில் நெருப்பு மூட்டி கூடாரமிட, அதுக்கு நமது வாழ்க்கையில் புதியதோர் உணர்வையும் மனதில் தரக்கூடும்.

நீங்கள் இவ்விடத்தை பலவித உள்ளூர் திட்டங்களோடு செயல்படுத்த, துத்சாகரிலும் கூடாரத்தை அமைத்திடலாம். இந்த திட்டப்பட்டியலில் (Package) அனைத்தும் அடங்க அவற்றுள் தூங்கும் பை, கூடாரம் என பலவும் அடங்கும்.

நீங்கள் பயணத்திற்கு நடப்பதை விரும்பாவிட்டால், ஜீப் சவாரிகளையும் பயன்படுத்திடலாம். இந்த சவாரியானது வழக்கமாக கொல்லமில் தொடங்குகிறது. இந்த பயணத்திற்கான நேரமாக ஒரு மணி நேர கால அவகாசம் அமைய, அதன் வழியாக பகவான் மஹாவீர் சரணாலயமும் அமைய, வனாந்தரத்தை நாம் பார்க்க, இலக்கை எட்டும் முன்னே அதனை நாம் பார்க்கிறோம்.

PC: editor CrazyYatra

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X