Search
  • Follow NativePlanet
Share
» »ஃபாகு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

ஃபாகு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

ஃபாகு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஃபாகு எனப்படும் இந்த பிரசித்தமான மலை சுற்றுலாத்தலம் கடல் மட்டத்திலிருந்து 2509 மீ உயரத்தில் குஃப்ரி எனும் இடத்திற்கு அருகில் உள்ளது. ஷிம்லாவிலிருந்து 23 கி.மீ தூரத்திலும் குஃப்ரியிலிருந்து 6 கி.மீ தூரத்திலும் இந்த 'ஃபாகு' சுற்றுலாத்தலம் அமைந்திருக்கிறது.

ஃபாகு சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

Manojkhurana

பிரமிக்கவைக்கும் மலைக்காட்சிகள், பழத்தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் போன்றவை இந்த ஃபாகு சுற்றுலாத்தலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. இங்குள்ள மலையுச்சியில் அமைந்திருக்கும் சுற்றுலா விடுதியிலிருந்து கிரி பள்ளத்தாக்கின் ரம்மியமான காட்சிகளை நன்றாக பார்த்து ரசிக்கலாம். இயற்கை எழில் அம்சங்கள் மட்டுமன்றி பந்தியா தேவ்தா எனும் தெய்வத்துக்காக அமைக்கப்பட்டிருக்கும் பல அழகிய கோயில்களும் இந்த ஃபாகு சுற்றுலாத்தலத்தை ஒட்டி அமைந்திருக்கின்றன.

ஹிமாச்சல் பிரதேச நாட்டுப்புற கலைஞர்களின் திறமையை எடுத்துக்காட்டும் வகையில் இந்த கோயில்களில் அழகிய மரச்செதுக்கு அலங்கார வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. மலையேற்றப்பிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் கூடாரவாசிகள் போன்றோர் மத்தியில் இந்த ஃபாகு சுற்றுலாத்தலம் மிகப்பிரசித்தமாக உள்ளது. இரவு நேரத்தில் இங்குள்ள குடியிருப்புகளிலிருந்து வெளிப்படும் வெளிச்சம் இமயமலைகளில் பட்டு ஜொலிக்கும் காட்சியை தரிசிக்கும் அனுபவத்திற்காக இங்கு பயணிகள் ஒரு இரவு தங்கலாம்.

சுற்றுலாப்பயணிகள் ஃபாகு சுற்றுலாத்தலத்திற்கு பிப்ரவரி மாதத்தில் விஜயம் செய்வதை விரும்புகின்றனர். அச்சமயம் இப்பகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Read more about: himachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X