Search
  • Follow NativePlanet
Share
» »பைசாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

பைசாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

பைசாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத்', கங்கை நதியின் துணை நதியான காக்ரா' வின் கரையில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். நடுத்தர அளவிலான, நன்கு வளர்ச்சியடைந்த இந்த நகரம் வங்காளத்தின் நவாப்பான, அலி வர்டி கான்' என்பவரால் 1730ம் ஆண்டு நிறுவப்பட்டது. சில ஆண்டுகள் கழித்து, இது சுஜா-உத்-தெளலா' என்பவரால் அவாத்' பிரந்தியத்திற்கு தலைநகராக அறிவிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் கீழ் தழைத்தோங்கிய, பைசாபாத் இன்றும் அதன் வண்ணமயமான கடந்த காலத்தை பெருமையுடன் தன் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகிறது. நவாப்புகளின் ஆட்சிக் காலத்தில் இங்கு கட்டப்பட்ட பிரகாசமிக்க மற்றும் கலைநயத்துடன் கூடிய கட்டிடங்கள் இன்றும் அவர்களின் பெருமையை பறை சாற்றிகொண்டிருக்கின்றன.

பைசாபாத் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது

Amsinwala

பைசாபாத் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

பைசாபாத்தில் ஏராளமான சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. அவற்றுள் பைசாபாத் அருங்காட்சியகம் மற்றும் கல்கத்தா கோட்டை போன்றவை மிக முக்கியமானவை. மொகலாயர்களின் காலத்தை சேர்ந்த பஹு பேகம் கா மக்பாரா மற்றும் மோடி மஹால் போன்ற முகலாய நினைவுச்சின்னங்கள் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்கிறது. இங்குள்ள ரிஷபதேவ் ராஜ்காட் உதயன் பார்வையாளர்களுக்கு சிறந்த பொழுது போக்கு வசதிகளை வழங்குகிறது. இங்குள்ள குப்டார் காட், இந்துக்களுக்கு மிகவும் புனிதமான இடமாகும். ராமர் இங்கிருந்தே ஜல சமாதி அடைந்து விஷ்ணுவின் அம்சத்துடன் ஒன்றரக் கலந்தார் என நம்பப்படுகிறது.

பைசாபாத்தை எவ்வாறு அடைவது?

பைசாபாத் நகரம் ரயில் மற்றும் சாலை மூலம் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. இந்நகருக்கு மிக அருகில் லக்னோ விமான நிலையம் உள்ளது.

பைசாபாத்தை பார்க்க நவம்பர் முதல் மார்ச் வரையிலான ஐந்து மாதங்களே மிகவும் சிறந்தது.

    Read more about: faizabad
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X