Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் 5 புகழ்பெற்ற ஷாப்பிங் மால்கள்!

சென்னையின் 5 புகழ்பெற்ற ஷாப்பிங் மால்கள்!

By

சென்னை மாநகரம் மதராஸ் மாகாணமாக அறியப்பட்டு வந்த காலத்தில், அதாவது 1864-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஸ்பென்சர் பிளாசா வளாகமே சென்னையின் முதல் ஷாப்பிங் மாலாகும்.

அதன் பிறகு 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு எண்ணற்ற ஷாப்பிங் மால்கள் சென்னை மாநகரத்தில் புதிது புதிதாக முளைக்க துவங்கின.

அந்த வகையில் இன்று ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, எக்ஸ்பிரஸ் அவென்யூ என்று 15-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் மால்கள் சென்னையில் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் 5 ஷாப்பிங் மால்கள் குறித்து இப்போது காண்போம்.

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி

24,00,000 சதுர அடி பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக அறியப்படுகிறது ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ஷாப்பிங் மால் வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி அருகே அமைந்திருக்கிறது. இங்கு 30 அறைகளை கொண்ட போட்டிக் ஹோட்டல் ஒன்றும், ஒரு ஏம்பி தியேட்டரும், 300 விற்பனைகூடங்களும் அமைந்திருக்கின்றன.

படம் : Naikshweta747

எக்ஸ்பிரஸ் அவென்யூ

எக்ஸ்பிரஸ் அவென்யூ

முன்னர் இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட விசாலமான இடத்தில் கட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் அவென்யூ 2010-ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்டது. 15,00,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஷாப்பிங் மாலில் பல்வேறு சர்வதேச பிராண்டுகளின் விற்பனையகங்கள், ஃபன் சிட்டி எனப்படும் குழந்தைகள் விளையாட்டரங்கம், எண்ணற்ற உணவகங்கள், 8 திரைகளை கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கம் போன்றவை அமையப்பெற்றுள்ளன. மேலும் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய கேமிங் ஆர்க்கேட் எனப்படும் பொழுதுபோக்கு மையம் இந்த வளாகத்தில் உள்ளது.

படம் : balajijagaesh

ஏம்பா ஸ்கைவாக்

ஏம்பா ஸ்கைவாக்

சென்னையின் பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள ஏம்பா ஸ்கைவாக் ஷாப்பிங் மால் 2009-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 6,50,000 சதுர அடியில் அமைந்திருக்கும் இந்த ஷாப்பிங் மாலில் 7 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றும், 3 தளங்கள் நிரம்ப விற்பனை கூடங்களும் அமைந்துள்ளன.

படம் : Ashwin Kumar

ஸ்பென்சர் பிளாசா

ஸ்பென்சர் பிளாசா

சென்னையிலேயே மிகப்பழமையான ஷாப்பிங் மாலான ஸ்பென்சர் பிளாசா நகரத்தின் முக்கிய சாலையான மௌண்ட் ரோடு என்ற பெயரில் முன்னர் அழைக்கப்பட்ட அண்ணா சாலையில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்திலேயே கம்பீரமான கட்டிடக்கலை அம்சங்களுடன் 1864-ஆம் ஆண்டில் சார்லஸ் டூராண்ட் மற்றும் ஜே.டபிள்யூ. ஸ்பென்சர் ஆகியோரால் இந்த இடத்தில் அந்நாளைய பழைய ஸ்பென்சர் பிளாசா உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போதுள்ள ஸ்பென்சர் பிளாசா மால் வேறு உரிமையாளர்களால் 1985-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு பல வளாகங்கள் அடுத்தடுத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

படம் : Ashwin Kumar

சென்னை சிட்டி சென்டர்

சென்னை சிட்டி சென்டர்

சென்னையின் மைலாப்பூர் பகுதியில் ராதாகிருஷ்ணன் சாலை அல்லது கத்தீட்ரல் சாலையில் சிட்டி செண்டர் ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. சிட்டி சென்டர் மால் வளாகத்தில் எண்ணற்ற விற்பனை கூடங்கள், உணவகங்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான பொழுதுபோக்கு மையங்கள் என பல அமைந்திருந்தாலும் ஐநாக்ஸ் தியேட்டரை தேடியே மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. 1,17,600 சதுர அடியில் அமைந்திருக்கும் இந்த ஷாப்பிங் மால் 2006-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

படம் : Rammstein737

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X