Search
  • Follow NativePlanet
Share
» »கோடீஸ்வரனாகும் யோக ராசிக் காரர் நீங்கள்தான்! இதுதான் காரணம்

கோடீஸ்வரனாகும் யோக ராசிக் காரர் நீங்கள்தான்! இதுதான் காரணம்

By UDHAY

அன்னை பராசக்தியின் அருளை வேண்டி செய்யும் பூசையே நவராத்திரி பூசை ஆகும். துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் அம்மன் வழிபாடு உள்ளது. சர்வ சத்ரு உபாதைகளில் இருந்து நீங்கவும், தோஷம் நீங்கி தைரியத்தை கொடுக்கும் துர்காதேவியையும், குபேரன் அருள் வியாபாரம் பெருக, செல்வ செழிப்பில் திளைக்க மகாலட்சுமியையும், இயல், இசை, நாடகம், கல்வி ஆகியவற்றில் சிறக்க 64 கலைகளையும் கற்றுக்கொள்ள சரஸ்வதிதேவியையும் என முப்பெரும் தேவிகளையும் நவராத்திரி விழாவில் வழிபாடு நடத்துவது உண்டு. இதனால் தொழில், கல்வி, வியாபாரம் பெருகி, கோடீஸ்வரனாகும் யோகம் சிலருக்கு வாய்க்கும். அப்படிப்பட்ட ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும், எந்த கோவிலுக்கு செல்லவேண்டும் என்பன பற்றி இந்த பதிவில் தெளிவாக காண்போம்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்.

மிகப் பெரிய அளவில் காட்சி தரும் அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது.
இங்கு சென்று நவராத்திரி விழாவை சிறப்பித்து, தேவியை வேண்டி வருவதால் உங்கள் தொழில் வளம் பெருகி, வாழ்வில் முன்னேற்றம் ஏற்படலாம். முக்கியமாக மேஷம் ராசிக்காரர்களுக்கு பண வரவு அதிகமாகும்

sowrirajan s

எப்படி செல்வது (How to Reach)

எப்படி செல்வது (How to Reach)

திருச்சி மாநகரிலிருந்து 10 கிமீ தொலைவுக்குள்ளேயே இந்த தீவு நகரம் காணப்படுகிறது. இதன் மையமே ரங்கநாதர் கோவில்தான். எனவே எளிதாக திருச்சியிலிருந்து 15 முதல் 20 நிமிடங்களுக்குள் கோவிலை அடையலாம்.

இக்கோவில் தஞ்சாவூரிலிருந்து 60 கிமீ தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து 61 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

நடை திறக்கும் நேரம் (Timings)

காலை 6 மணி முதல் 7.15 வரையிலும், பின் காலை பூசைக்காக 9.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு சாற்றப்படும். பின் மதிய உணவுக்கு பிறகு பகல் 2.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவில் நடை அடைக்கப்பட்டு பின் 7 மணிக்கு திறக்கப்படும், ஒரு நாளில் இரவு 9 மணி வரை பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில்

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில்

உறையூரில் அமைந்துள்ள கமலவள்ளி நாச்சியார் கோவில் 108 வைணவத்தலங்களுள் ஒன்று. இது அழகிய மணவாளர் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நவராத்திரி நாட்களில் வந்து செல்வதால் நல்ல முன்னேற்றம் கல்வி மற்றும் தொழிலில் ஏற்படும். முக்கியமாக இந்த மாதம் ரிஷப ராசிக்காரர்களின் செலவுகள் கூடும். எனவே இங்கு வந்து செல்வது தொழில் முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும்.

Ssriram mt

 உறையூர் செல்ல வழிகாட்டி

உறையூர் செல்ல வழிகாட்டி

விருத்தாச்சலத்திலிருந்து திருச்சி செல்லும் வழியில் தேசிய நெடுஞ்சாலை எண் 141ல் பயணித்தால் 21 கிமீ தூரத்தில் அழகிய மணவாளர் கோவில் அமைந்துள்ளதை காணலாம்.

இதன் பயண நேரம் அதிகபட்சம் 38 நிமிடங்கள்.

நடை திறக்கும் நேரம்

காலை 7 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் 12.30 வரையிலும் பின் 2 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரைக்கும் திறந்திருக்கும்.

சமயபுரம் மாரியம்மன் கோவில்

சமயபுரம் மாரியம்மன் கோவில்

கண்ணபுரம், விக்ரமபுரம், மாகாளிபுரம் என்றும் அழைக்கப்படும் ஊர் சமயபுரம். இதற்கு கண்ணனூர் என்றும் பெயருண்டு. இங்கு வீற்றிருக்கும் மாரியம்மன் கோவிலால் இந்திய அளவில் புகழ் பெற்றது இந்த ஊர். இங்கு உலகில் சில நாடுகளிலிருந்தும், இந்தியாவின் வட பகுதிகளிலிருந்தும் கூட பக்தர்கள் வருகிறார்கள். அதற்கு காரணம் இங்கு நவராத்ரி நாட்களில் வந்தால் தொழில் மேம்படும், வாழ்க்கை வளம்பெரும் என்பதுதான். மிதுனம் - தொட்டதெல்லாம் வெற்றி

TRYPPN

 நடைதிறக்கும் நேரமும் செல்லும் வழியும்

நடைதிறக்கும் நேரமும் செல்லும் வழியும்

திருச்சியிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சமயபுரம். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தரும் பக்தர்கள் சமயபுரத்துக்கு சென்று வருகின்றனர். அதிலும் முக்கியமாக நவராத்திரி விழாவுக்கு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

நடை திறக்கும் நேரம்

காலை 5 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில்

காவிரி ஆற்றின் அருகே அமைந்துள்ள திருவானைக்காவல் எனும் ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில் இதுவாகும். இங்கு சிவன் ஜம்புகேஸ்வரராக அருள்புரிகிறார். கூடவே அகிலாண்டேஸ்வரி தாய் அருள்புரிகிறார். இந்த கோவிலிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படும். மேலும் இங்கு நடக்கும் விழாக்கள் மிகவும் சிறப்பானதாகும். தொழில் விருத்தியடைய, கல்வியில் முன்னேற்றம் பெற இந்த கோவிலுக்கு மக்கள் தங்கள் குடும்பத்தோடு வருகிறார்கள். இங்கு வந்து செல்வதால் அவர்களின் தொழிலில் லாபம் பார்க்கலாம் என்பது இவர்களது நம்பிக்கை ஆகும். கடகம் - தொழில் விருத்தி ஏற்படும்

wiki

நடை திறப்பு மற்றும் போக்கு வரத்து

நடை திறப்பு மற்றும் போக்கு வரத்து

திருச்சியிலிருந்து 8 கிமீ தொலைவில் காவிரி ஆற்றில் கரையில் அமைந்துள்ளது இந்த ஊரும், அங்கு அமைந்துள்ள கோவிலும். பத்து முதல் பதினைந்து நிமிடங்களில் திருச்சியிலிருந்து இந்த கோவிலை அடைய முடியும்.

காலை 6 மணி முதல் முற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.

பிறவி மருந்தீஸ்வரர் கோவில்

பிறவி மருந்தீஸ்வரர் கோவில்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது திருத்துறைப்பூண்டி எனும் ஊர். இங்கு புகழ்பெற்ற பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. அஸ்வினி நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோவிலுக்கு சென்று வருவதால் அவர்களின் கோடீஸ்வர யோகம் அதிகரிக்கிறது. வாழ்வில் தடைபட்ட சில காரியங்கள் நடந்தேறுகிறது. முக்கியமாக திருமணமும், குழந்தை பேறும் கிட்டுகிறது. சிம்மம் - கடன் சுமை கவனம் தேவை

Nsmohan

எப்படி செல்வது இந்த கோவிலுக்கு

எப்படி செல்வது இந்த கோவிலுக்கு


மன்னார்குடியிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது இந்த பிறவி மருந்தீஸ்வரர் கோவில். அல்லது திருவாரூரிலிருந்து 30 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

நடை திறப்பு

காலை 6 மணி முதல் முற்பகல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் கோவில்

கற்கடம் என்றால் நண்டு. நண்டு பூசித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர் ஆனார். தற்போது இக்கோவில் நண்டான்கோவில் என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஊர் திருந்துதேவன்குடி என்றும் அழைக்கப்படுகிறது. கன்னி - பெரிய அளவில் மாற்றம் இல்லை

Ssriram mt

எப்படி செல்வது

எப்படி செல்வது

கும்பகோணத்திலிருந்து 12 நிமிட பயண தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். மேலும் இதன் தொலைவு 8 கிமீ ஆகும். இதன் அருகே திருபுவனம், திருவிடைமருதூர் ஆகிய இடங்களும் அமைந்துள்ளன.

திருநின்றவூர் மரகதாம்பிகை கோவில்

திருநின்றவூர் மரகதாம்பிகை கோவில்

மகாசிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம், மகாசங்கராந்தி, வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை, சித்திரை ஆண்டுப் பிறப்பு, பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம் உள்ளிட்ட அனைத்து தினங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் திருநின்றவூர் மரகதாம்பிகை கோவிலின் பெயர் இருதயாலீஸ்வரர் கோவில் என்பதாகும். இதன் மூலவர் இருதயாலீஸ்வரர். இங்கு நவராத்திரியில் செல்வதால் நன்மை கிடைக்கும். தொழில் வளம் பெறும் என்பது நம்பிக்கை. துலாம் - எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது

Rahuljeswin

 அடைவது எப்படி

அடைவது எப்படி

இந்த கோவிலுக்கு சென்னையிலிருந்து மிக எளிதில் அடையலாம். சென்னையிலிருந்து 37 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். மேலும் இங்கு செல்ல தாம்பரம், கிண்டி உள்ளிட்ட இடங்களிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

நவராத்ரி ஆரம்பம்

நவராத்ரி ஆரம்பம்

புரட்டாசி மாதம் 24ம் நாள், அதாவது அக்டோபர் 10ம் நாள் நவராத்திரி ஆரம்பித்தது. இன்று பத்ரகாளி அவதாரநாள் ஆகும். பதினெட்டாம் தேதி ஆயுத பூசை விழா கொண்டாடப்படவிருக்கிறது.

ஆயுத பூசை செய்ய ஏற்ற நேரமாக காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரையிலும் உள்ளது. அடுத்த நாள் விஜயதசமி. கல்வியும், செல்வமும் கூடவே வீரமும் இருந்தால் உங்கள் தொழில் வளம் மேம்பட்டு பணக்காரராக மாறிவிடலாம். இதுதான் காரணம் கல்வி, செல்வம், வீரத்தை முன்னிலை படுத்தவே ஆளுக்கு மூன்று நாள்கள் வைத்து நவராத்திரியை கொண்டாடுகிறோம். விருச்சிகம் - லாபமும் செலவும் சரியாகிவிடும்

விரதம்

விரதம்

நவராத்திரி நோன்பு என்பது புரட்டாசி மாதம் சூரியன் கன்னி ராசியில் தோன்றும் காலத்தை குறித்து அதாவது அந்த காலத்தில் சக்தி தேவியை குறித்து ஏற்கப்படும் நோன்பு ஆகும். சாரதா நவராத்திரியும் பூசிக்க ஏற்ற காலம் ஆகும்.

தொன்நம்பிக்கை

தொன்நம்பிக்கை


உலகம் தோன்றும் போது இச்சை எனும் சக்தியும், அது எப்படி தோன்றியது என்பதை ஆராயும்போது ஞான சக்தியும், பின் இறைவன் கிரியா சக்தியினால் உலகத்தை படைத்தான் என்ற கருத்து நவராத்திரி விழாவின் அம்சமாக இருக்கின்றது. தனுசு - நினைத்ததை செய்து முடிப்பீர்கள்

துர்க்கைக்கான முதல் மூன்று நாள்

துர்க்கைக்கான முதல் மூன்று நாள்


நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிகாலம் ஆகும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வழிபட்டு பூசித்து வருகின்றனர். இதனால் நற்பெயர் உண்டாகி, தங்கள் வாழ்வுக்கு நல்ல எதிர்காலம் உருவாவதாக மக்கள் கருதுகின்றனர்.
மகரம் - இறை வழிபாடு பண வரவை மேம்படுத்தி தொழிலில் முன்னேற்றத்தை கொடுக்கும்

ஞானத்தின் சக்தி லட்சுமியின் அடுத்த மூன்றுநாள்கள்

ஞானத்தின் சக்தி லட்சுமியின் அடுத்த மூன்றுநாள்கள்

லட்சுமி தேவியின் ஞான சக்தி பற்றிய வழிபாடே அடுத்த மூன்று நாள்கள் ஆகும். பொருள் சேர்ப்பது ,. செல்வம் பெருக்குவது போன்ற வேண்டுதல்களுக்கு ஏற்ற காலம் இது... இந்த நாள்களில் மேல் குறிப்பிட்டுள்ள கோவில்களில் லட்சுமி தேவி இருக்கும் கோவில்களுக்கு பயணித்து ஆசி பெற்றால் நீங்கள் விரைவில் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு அமையும்.
கும்பம் - நல்ல முன்னேற்றத்துடன் பணம் கொழிக்கும்

கல்வியின் அதிபதி சரஸ்வதி

கல்வியின் அதிபதி சரஸ்வதி

இந்த காலத்தில் பக்தர்கள் தங்கள் கல்வி அறிவு ஞானம் அதனுடன் கூடிய வேலை சம்பந்தமான வேண்டுதல்களை வைத்தால் நிச்சயம் பலிக்கும் என்பது நம்பிக்கை. சரஸ்வதி தேவியின் ஆசியால் குழந்தையை முதன்முதல் பள்ளிக்கு இந்த சமயங்களில் சேர்ப்பார்கள். மத வேறுபாடுகளின்றி இதைக் கடைபிடிப்பவர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
மீனம் - தந்தையின்மூலம் ஆதாயம் கிடைக்கும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X