Search
  • Follow NativePlanet
Share
» »விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்

விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்

தமிழ் நாட்காட்டி ராசிச் சக்கரத்தை காலக்கணிப்பில் பயன்படுத்தும் ஒரு சூரிய நாட்காட்டி என்பதால், பன்னிரு இராசிகளில் முதல் இராசியான மேஷத்தில் சூரியன் நுழையும் சித்திரையே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கருதப்படுகிறது. புத்தாண்டு பிறக்கும் போது ரிஷப லக்னம் மேஷத்தில் சூரியன், சுக்கிரன், கடகத்தில் ராகு, துலாமில் குரு, தனுசு ராசியில் செவ்வாய் சனி, மகரத்தில் கேது, மீனம் ராசியில் சந்திரன், புதன் என இடம்மாறுகிறது. அவ்வாறு ராசி நட்சத்திரங்கள் இடம்மாறும் பொழுது எந்த ராசிக்காரர்கள் எந்தக் கோவிலுக்கு போய் வழிபட வேண்டும் என தெரியுமா ?

மேஷம் முதல் மீனம்

மேஷம் முதல் மீனம்


மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிக்காரர்களுக்கும் அவரவர்களுக்கு என தனி கோவில்கள் உள்ளன. இவற்றில் மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்கள் கீழே வரும் திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வர இந்த வருடத்திலேயே நீங்கள் உட்சத்தை அடையலாம். சரி வாருங்கள், அவை எந்தக் கோவில், எங்கே உள்ளது என பார்க்கலாம்.

மேஷ ராசி

மேஷ ராசி


மேஷ ராசி உடையோர் மதுரை மாவட்டம், சோலைமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில்குச் சென்று தமிழ்புத்தாண்டு அன்று வழிபட்டு வர குருபகவான் மூலம் அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகள் உங்களது வீட்டில் நடைபெறும். வியாபாரத்திலும், பிற உத்தியோகத்திலும் கூடுதல் இலாபத்தை பெற்று செல்வச் செழிப்புடன் மகிழ்ச்சியடைவீர்.

என்ன சிறப்பு ?

என்ன சிறப்பு ?

முருகனின் அறுபடை வீடுகளில் இக்கோவில் ஆறாவது வீடாகும். இங்கு கோவில் சன்னதியில் மூலவரான முருகன் தனது தம்பதியினருடன் காட்சியளிக்கிறார். திருமனத் தடை, குழந்தை பேறு உள்ளிட்டவற்றிற்கும் இங்கு பக்தர்கள் வழிபட்டுச்செல்கின்றனர்.

முழுமையாக தெரிந்து கொள்ள இதை படிக்கவும்

இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !இந்த மூன்று ராசிக்காரர்களையும் செல்வ செழிப்பாக்கும் கோயில்கள் !

துலாம்

துலாம்


துலாம் ராசியுடையோருக்கு சனிபகவான் மூன்றாம் இடத்தில் இருப்பதால் போட்டியாளர்களிடம் வெற்றிபெருவீர்கள். இருப்பினும், ராகு, கேதுவுன் பார்வை அதிகமாக உள்ளதால் ஆளுமை திறன் குறைந்து பகை வளரும சூழல் ஏற்படும். இதில் இருந்து விடுபட கோயம்புத்தூர் மாவட்டம், உக்கடத்தில் உள்ள ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.

கோவில் சிறப்பு ?

கோவில் சிறப்பு ?


சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் தெற்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் இரண்டு சொர்க்கவாயில்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற அமைப்பை வேறெந்த பெருமாள் கோவில்களிலும் காண முடியாது. மேலும், உத்ராயணம், தட்சிணாயணம் என்ற இரட்டை நுழைவு வாயில்களும் அமைந்துள்ளது

திருவிழா

திருவிழா

ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாள் கோவிலில் சித்திரை முதல் பங்குனி வரை அனைத்து தமிழ் மாதங்களிலும் சிறப்பு பூஜைகளும், திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. இதில், அப்பகுதி மக்கள் திரளாகக் கலந்துகொண்டு பல்வேறு நிகழ்சிகளுடன் விழாவை நடத்துகின்றனர்.

முழுமையாக தெரிந்து கொள்ள இதை படிக்கவும்

துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா?துலாம் டூ தனுசு ராசிக்காரங்களே புத்தாண்டு உங்களுக்கு என்ன தரப்போகுது தெரியுமா?

மகர ராசி

மகர ராசி

மகர ராசி உடையோரே உங்களது ராசியில் குருபகவான் லாப வீட்டில் அமர்வதால் எதிர்பாராத வகையில் தொழிலில் லாபம் பார்ப்பீர்கள். இறுப்பினும், ஏப்ரல் 14 முதல் 2019 பிப்ரவரி வரை ராசிக்குள் கேது நுழைவதால் தேவையற்ற வம்புகள், வீன் சலசலப்பு வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து தப்பிக்க, தேடி வரும் பொற்செல்வத்தை தக்கவைக்க மதுரையில் உள்ள வீரராகப் பெருமாளை வழிபட்டு வருவது யோகத்திற்கு வழிவகுக்கும்

கோவில் சிறப்பு

கோவில் சிறப்பு

மதுரை மாவட்டத்தில் சித்ராபவுர்ணமியன்று வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரைக் காண கோடி வரத்திற்கு ஈடாகும். மேலும், இக்கோவிலில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற நிலையில் வீரராகவராகவும், ஓய்வெடுக்கும் ரூபத்தில் ராங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார்.

மகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்கமகரம் டூ அடுத்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறீங்க

Read more about: chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X