Search
  • Follow NativePlanet
Share
» »டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்

டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் கொண்டாடப்படும் திருவிழாக்கள்

டிசம்பர், இந்தியாவில் நல்ல தட்பவெட்பம் நிலவும் மாதங்களுள் ஒன்று. குளிர் காலத்தின் வாசலாக இருக்கும் இம்மாதத்தில் தான் நம்நாட்டில் பல முக்கியமான திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பல கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் இனிய சங்கமமாக திகழும் நம் நாட்டில் கொண்டாடப்படும் இது போன்ற விழாக்களில் பங்குகொள்வது மிக மிக வித்தியாசமான அனுபவமாக நமக்கு அமையும்.

குளுகுளுவென்று காற்றடிக்கும் இந்த டிசம்பர் மாதத்தில் எங்காவது பயணம் செல்லலாம் என திட்டம் வைத்திருக்கிறீர்களா? வெறுமனே பயணமாக மட்டும் இல்லாமல் அங்கு நடக்கும் திருவிழாக்களிலும் பங்கெடுத்து கொண்டாடி மகிழலாம் வாருங்கள், டிசம்பர் மாதத்தில் இந்தியாவில் கொண்டாடப்படும் பண்டிகைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

வார விடுமுறை சிறப்பு சலுகை: ஹோட்டல் கட்டணங்களில் 50%தள்ளுபடி பெற இங்கே கிளிக்குங்கள்

சன்பர்ன்(Sun Burn) திருவிழா, கோவா:

சன்பர்ன்(Sun Burn) திருவிழா, கோவா:

கோவாவை பற்றி சொன்னதுமே பிகினி பீச்சுகளும், பார்ட்டிகளும் தான் நம் நினைவுக்கு வரும். கொண்டாட்டங்களின் சொர்க்கமான கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் 27-29ஆம் தேதி வரை நடக்கும் சன்பர்ன் திருவிழா கோவாவில் கொண்டாட்டங்களின் உச்சமாக பார்க்கப்படுகிறது. டீஜே இசை முழங்க, உற்சாக பானங்கள் அருந்தியபடி விடிய விடிய பார்டி செய்யலாம்.

Photo:Ale

சன்பர்ன்(Sun Burn) திருவிழா, கோவா:

சன்பர்ன்(Sun Burn) திருவிழா, கோவா:

வகடோர் பீச்சில் மட்டுமே நடக்கும் இந்த பார்டி திருவிழாவிற்கு முன்னரே முன்பதிவு செய்து டிக்கெட்டு வாங்க மறந்து விடாதீர்கள். மேலும் வெறுமனே குடி கொண்டாட்டம் மட்டும் இல்லாமல் இந்த நாட்களில் கடற்கரையில் வாலி பால் மற்றும் கால்பந்து விளையாடலாம், இங்கே இருக்கும் மார்கெட்டில் பலவகையான பொருட்களை வாங்கலாம், பாறை மேல் ஏறுவது (Rock Climbing) போன்ற சாகசங்களிலும் ஈடுபடலாம்.

Photo:Ale

சன்பர்ன்(Sun Burn) திருவிழா, கோவா:

சன்பர்ன்(Sun Burn) திருவிழா, கோவா:

இந்த டிசம்பருக்கு கோவா போக நினைத்தால் இந்த திருவிழாவில் பங்கு கொள்வதற்கு ஏற்றார்போல திட்டமிட்டு செல்லுங்கள்.

Photo:Ale

டெல்லி உணவுத்திருவிழா :

டெல்லி உணவுத்திருவிழா :

பழைய டெல்லியில் இருக்கும் சாந்தினி சௌக் என்னும் வர்த்தக வளாகத்தில் இந்தியாவிலேயே மிகவும் சுவையான வீதி உணவுகளை நாம் ருசிக்க முடியும். சுடசுட கபாப்கள், நாவூற வைக்கும் ஜிலேபிகள், ஆலூ ரொட்டிகள் என இங்கு டெல்லி உணவுகளின் உண்மையான சுவையை இங்கே ருசிக்க முடியும்.

Photo:Aleks

Photo:

டெல்லி உணவுத்திருவிழா :

டெல்லி உணவுத்திருவிழா :

இதன் தொடர்ச்சியாக சில வருடங்களாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் உல் விளையாட்டு அரங்கில் டிசம்பர் மாதம் 19-21 தேதி வரை வீதி உணவுத்திருவிழா விமரிசையாக நடை பெறுகிறது.

Photo:Salonee Pareek

Photo:

டெல்லி உணவுத்திருவிழா :

டெல்லி உணவுத்திருவிழா :

தேசிய வீதி உணவு தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பினால் நடத்தப்படும் இந்த விழாவில் இந்தியா முழுக்க கிடைக்கும் சுவையான வீதி உணவுகளை ஒரே இடத்தில் நாம் சுவைக்கலாம். நீங்கள் உணவுப்பிரியர் என்றால் கட்டாயம் இந்த வீதி உணவுத் திருவிழாவில் கலந்து கொண்டு வயிறு நிறைய சுவைத்து மகிழுங்கள்.

Photo:Connie Ma

கொச்சி புத்தாண்டு திருவிழா:

கொச்சி புத்தாண்டு திருவிழா:

போர்த்துகீசியர்களின் முக்கிய காலனியகமாக விளங்கிய கொச்சி நகரில் ஐரோப்பாவில் உள்ளது போன்றே புத்தாண்டு நேரத்தில் கொச்சியின் வீதிகளில் வண்ணமயமாக கொண்டாட்டங்கள் கலைகட்டுகின்றன. மக்கள் தங்கள் உடல் முழுவதும் வண்ண சாயங்களை பூசிக்கொண்டு மாறுவேடமிட்டு பாடல்கள் பாடி, நடனமாடி புத்தாண்டை வரவேற்கின்றனர். டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் நடக்கும் இத்திருவிழாவில் பங்கெடுத்து உற்சாகமாக 2015இன் துவக்கத்தை கொண்டாடுங்கள்.

Photo:Arian Zwegers

மவுண்ட் அபு குளிர்கால திருவிழா:

மவுண்ட் அபு குளிர்கால திருவிழா:

மவுண்ட் அபு, ராஜஸ்தான் என்னும் பாலைவன மாநிலத்தில் அமைந்திருக்கும் பசுஞ்சோலை. ராஜஸ்தானில் இருக்கும் ஒரே மலைவாசஸ்தலமான இங்கு டிசம்பர் 29 முதல் 31ஆம் தேதி வரை குளிர்கால திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Photo:-Reji

மவுண்ட் அபு குளிர்கால திருவிழா:

மவுண்ட் அபு குளிர்கால திருவிழா:

மவுண்ட் அபுவில் இருக்கும் ஏரியில் படகு போட்டிகள், வண்ண விளக்குகளை கொண்டு நடத்தப்படும் ஒளி விழா, வானவேடிக்கைகள், ராஜஸ்தானின் நாட்டுப்புற இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழா என களைகட்டுகிறது இந்த மவுண்ட் அபு.

இந்தியாவின் சுற்றுலாத் தலைநகராக விளங்கும் ராஜஸ்தானுக்கு ஓரருமையான சுற்றுலா சென்று விட்டு ஜெய்ப்பூரில் இருந்து 500கி.மீ தொலைவில் இருக்கும் மவுண்ட் அபுவிற்க்கும் சென்று வாருங்கள். குளிர்னியால்வும் இந்த மாதம் தான் ராஜஸ்தான் செல்ல சிறந்த நேரமாகும்.

Photo:Koshy Koshy

மாமல்லபுரம் இந்திய நடன திருவிழா:

மாமல்லபுரம் இந்திய நடன திருவிழா:

இந்தியாவில் இருக்கும் பல வகையான நடனங்களை ஒரே இடத்தில் பார்த்து ரசிக்க ஆசையா?. அப்படி என்றால் நீங்கள் செல்ல வேண்டியது சென்னைக்கு அடுத்த மாமல்லபுரத்தில் டிசம்பர் 27 முதல் ஜனவரி 26 ஆம் தேதி வரை நடக்கும் இந்திய நடன திருவிழாவிற்கு தான்.

Photo:Arian Zwegers

மாமல்லபுரம் இந்திய நடன திருவிழா:

மாமல்லபுரம் இந்திய நடன திருவிழா:

பரதநாட்டியம், குச்சிபுடி, கதக்களி, பொய்க்கால் குதிரை, காவடியாட்டம் என பல்வேறு மாநிலங்களின் நடனங்கள் மற்றும் நாட்டுபுற கலைகளை ஒரே மேடையில் காணும் அறிய வாய்ப்பாக இந்த நடன திருவிழா அமையும். மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுனன் தபசு பாறையின் முன் இது நடக்கிறது.

Photo: Arian Zwegers

சர்வதேச மணல் சிற்ப திருவிழா:

சர்வதேச மணல் சிற்ப திருவிழா:

ஓடிஸா மாநிலத்தில் வருடா வருடம் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடக்கும் இந்த சர்வதேச மணல் சிற்ப திருவிழா கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் கலைஞர்கள் தங்கள் கைவண்ணத்தில் வியக்கவைக்கும் மணல் சிற்பங்களை உருவாக்குவதை கண்டு மகிழலாம்.

Photo:RHaworth

கோனார்க் விழா:

கோனார்க் விழா:

இந்த திருவிழா நடக்கும் இடத்திற்கு அருகிலேயே கோனார்க் திருவிழாவும் நடக்கிறது. ஓடிஸா மாநில சுற்றுலாத்துறையினால் நடத்தப்படும் இந்த விழாவில் ஓடிஸாவின் பாரம்பரிய கலைகள் அரங்கேற்றப்படுகின்றன. பழமையான கோயில்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கொண்டிருக்கும் ஓடிஸா மாநிலத்திற்கு வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று வாருங்கள்.

Photo:Vasanth LightPainter

ரான் உத்சவ்:

ரான் உத்சவ்:

குஜராத் மாநிலத்தில் உள்ள உப்பு பாலைவனமான கட்ச்சில் டிசம்பர் மாநிலத்தில் அதன் அருகில் வாழும் மக்களால் பெரும் விழாவொன்று கொண்டாடப்படுகிறது. குஜராத்தி பழங்குடிகளின் இசை, நடன நிகழ்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கு என்றே நடத்தப்படும் சாகச விளையாட்டுகள், இரவில் தீமூட்டி அதனை சுற்றி அமர்ந்து கதை கேட்க்கும் நிகழ்ச்சி என சுவாரஸ்யம் நிரந்த இந்த விழா முழு நிலவு நாளன்று கொண்டாடப்படுகிறது.

Photo:Narendra Modi

கிறிஸ்துமஸ்:

கிறிஸ்துமஸ்:

உலக மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய திருவிழா என்றால் அது கிறிஸ்துமஸ் தான். ஏசுபிரானின் பிறந்தநாளான டிசம்பர் 25ஆம் தேதி இந்தியாவிலும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Photo:Seranya Photography

கிறிஸ்துமஸ்:

கிறிஸ்துமஸ்:

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கோவா, கோழிகோடு, வேளாங்கன்னி போன்ற இடங்களில் கிறிஸ்துமஸ் மற்ற இடங்களை காட்டிலும் இன்னும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

சர்சுகளில் நடு இரவு வரை பிரார்த்தனை செய்து பின் இனிப்புகள் பரிமாறி, ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து சொல்லி மனம் நிறைய மகிழ்ச்சியுடன் இவ்விழா கொண்டாடப்படுகிறது.

Photo:McKay Savage

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X