Search
  • Follow NativePlanet
Share
» »ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் இந்திய திருவிழாக்கள்

ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் இந்திய திருவிழாக்கள்

வேறெந்த மாதத்தை காட்டிலும் ஆண்டின் முதல் மாதமான ஜனவரியில் இந்தியாவெங்கும் ஏராளமான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஏனெனில் இந்த மாதத்தில் தான் நாட்டின் பெரும்பாலான இடங்களில் அறுவடை நடைபெறும். இதமான வசந்தகால சூழல் நிலவும். கோயில்களில் மிகச்சிறப்பாக திருவிழாக்கள் கொண்டாடப்படும், இசை, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும், உழவுக்கு தோள்கொடுத்த காளைகளுடன் ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயம் ஆகியன நடந்தேறும்.

வாழ்நாளில் இப்படிப்பட்ட விழாக்களில் எல்லாம் ஒருமுறையேனும் நிச்சயம் பங்கு கொள்ள வேண்டும். சரி, வாருங்கள் ஜனவரி மாதத்தில் கொண்டாடப்படும் இந்திய திருவிழாக்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

பொங்கலோ பொங்கல்:

பொங்கலோ பொங்கல்:

உலகின் மூத்த பெருங்குடியின் பெருமைமிகு வாழ்வியலின் கொண்டாட்டம் தான் தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் திருவிழாவாகும்.

'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்
' என்ற வள்ளுவன் சொல்லுக்கேற்ப யானை பூட்டி நெற்ப்புடைத்து விவசாயம் செய்த பெருமை கொண்டவர் தமிழர்.

Photo:J'ram DJ

பொங்கலோ பொங்கல்:

பொங்கலோ பொங்கல்:

பொங்கலின் முதல் நாள் உலக உயிர்களுக்கெல்லாம் ஜீவாதாரமாக இருக்கும் சூரியனை வழிபடும் விதமாக அதிகாலையில் புதுப்பானையில் புதிய அரிசி கொண்டு பொங்கல் வைத்து சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.

Photo:sowrirajan s

பொங்கலோ பொங்கல்:

பொங்கலோ பொங்கல்:

இரண்டாம் நாள் மாடுப்பொங்கல். பால் எங்கிருந்து கிடைக்கிறது என்கிற கேள்விக்கு மார்கெட்டில் இருந்து என்று குழந்தைகள் பதில் எழுதும் பரிதாப சூழல் நிலவும் நகரங்களில் மாடுப்பொங்கல் கொண்டாடுவது காணக்கிடைக்காத ஒன்றாக மாறிவிட்டது. முடிந்தால் உங்கள் செல்ல குட்டியுடன் மாடுப்பொங்கல் கொண்டாடாடும் கிராமத்து குடும்பம் ஒன்றினுடன் சேர்ந்து கன்றுகளுக்கு பொங்கல் ஊட்டிவிட்டு மட்டுப்பொங்கல் கொண்டாடிடுங்கள்.

Photo:Alex Graves

பொங்கலோ பொங்கல்:

பொங்கலோ பொங்கல்:

மூன்றாம் நாள் உறவினர்கள் எல்லோருடனும் சேர்ந்து கோயிலுக்கு, பூங்காக்களுக்கோ சென்று இனிப்புகளை பரிமாறி காணும் பொங்கலை கொண்டாடலாம். சென்னையில் மெரினா கடற்க்கரை, மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் போன்ற இடங்கள் காணும் பொங்கலன்று களைகட்டும்.

Photo:Aleksandr Zykov

பொங்கலோ பொங்கல்:

பொங்கலோ பொங்கல்:

வெளியூர்களிலோ வெளிநாடுகளிலோ வசிப்பவர் என்றால் எப்படியேனும் விடுமுறை எடுத்துக்கொண்டு பொங்கல் பண்டிகையை சொந்த ஊருக்கு வந்து உறவுகளுடன் கொண்டாடி மகிழுங்கள். தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்.

Photo:Natesh Ramasamy

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

நம்ம ஊர் பொங்கலுக்கு இணையாக குஜராத்தில் அறுவடை காலத்தின் துவக்கத்தை குறிக்கும் வகையில் பட்டம் விடும் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஹோலி பண்டிகைக்கு இணையாக வண்ணமயமாக இப்பண்டிகை குஜராத்தி மக்களால் கொண்டாடப்படுகிறது.

Photo:masud ananda

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

இரண்டு நாட்கள் நடக்கும் இத்திருவிழாவின் போது குஜராத்தில் இருக்கும் ஒவ்வொரு நகரத்திலும் பட்டம் விடும் போட்டி நடத்தப்படுகிறது. பட்டங்களின் தலைநகரம் என்றழைக்கப்படும் அகமதாபாத், ராஜ்கோட், சூரத், வதோத்ரா போன்ற நகரங்களில் விண்ணை வண்ணங்களால் நிரப்பும்படியாக இத்திருவிழா கொண்டாடப்படுகிறது.

Photo:Michael Coghlan

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

இப்பண்டிகையும் பொங்கல் கொண்டாடப்படும் அதே ஜனவரி 14ஆம் தேதியே கொண்டாடப்படுகிறது. பொங்கல் சமயத்தில் எங்கேனும் புதுமையான இடத்திற்கு சுற்றுலா செல்லலாம் என்று விரும்பினால் நிச்சயம் குஜராத்திற்கு சென்று இந்த சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள். 42 நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளும் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.

Photo:Meena Kadri

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

மேலும் அகமதாபாத் நகருக்கு அருகில் சன்ச்கர் கேந்திரா என்னும் இடத்தில் பட்டங்களுக்கான அருங்காட்சியகம் ஒன்றும் இயங்கி வருகிறது. அங்கு சென்று நாம் இதுவரை பார்த்திராத வடிவங்களில் உள்ள பட்டங்களை கண்டு மகிழலாம்.

Photo:Eva Rinaldi

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

சர்வதேச பட்டம் விடும் திருவிழா - குஜராத்:

குஜராத் நகரை எப்படி அடைவது? என்பது பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

குஜராத்தில் இருக்கும் தாங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

இந்தியாவில் நடக்கும் மிக முக்கியமான இலக்கியம் சார்ந்த நிகழ்வென்றால் அது ஜெய்பூர் இலக்கிய திருவிழா தான். 2006ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து நடந்துவரும் இந்த விழா 'ஆசியாவில் நடக்கும் மிகப்பெரிய இலக்கிய விழா' என்ற பெருமையையும் பெற்றுள்ளது. இந்தியாவின் தலை சிறந்த எழுத்தாளர்கள் மற்றும் உலக சிந்தனையாளர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்கின்றனர்.

Photo:U.S. Embassy New Delhi

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

இந்த விழாவின் முக்கிய நிகழ்விடமாக ராஜஸ்தானின் ராஜ பரம்பரையினர் வசித்துவரும் டிக்கி அரண்மனை விடுதி விளங்குகிறது. இந்த விடுதியை பற்றிய மேலதிக விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Georgia Popplewell

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

இந்த 2015ஆம் வருடம் ஜனவரி 22-25ஆம் தேதிவரை ஜெய்பூர் இலக்கிய திருவிழா நடக்கவிருக்கிறது. இதில் சேத்தன் பகத், அமித் திரிபாதி, வி.எஸ்.நைபால் போன்ற இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பங்குகொள்ளவிருக்கின்றனர்.

Photo:U.S. Embassy New Delhi

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

இந்த விழாவில் கலந்துகொள்ள முற்றிலும் அனுமதி இலவசமாகும். வாசிப்பில் ஆர்வமும், நீங்கள் விரும்பி வாசித்த புத்தகத்தின் ஆசிரியருடன் உரையாடும் வாய்ப்பும் உங்களுக்கு வேண்டுமானால் நிச்சயம் இந்த வருடம் ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ளுங்கள்.

Photo:U.S. Embassy New Delhi

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

ஜெய்பூர் இலக்கிய திருவிழா:

ஜெய்பூர் நகரை எப்படி அடைவது என்பது பற்றிய விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். ஜெய்ப்பூரில் இருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

இந்திய குடியரசு தினம், புதுதில்லி:

இந்திய குடியரசு தினம், புதுதில்லி:

இந்திய நாட்டின் மிக முக்கியமான அரசு விழா ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படும் குடியரசு தின விழா தான். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் செயல்பாட்டுக்கு வந்த நாளே இந்திய குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

Photo:Yogesh Mhatre

இந்திய குடியரசு தினம், புதுதில்லி:

இந்திய குடியரசு தினம், புதுதில்லி:

புது தில்லியில் குடியரசு தலைவர் மாளிகையின் முன் இவ்விழாவை முன்னிட்டு முப்படை இராணுவத்தினரின் அணிவகுப்புகள், ஏவுகணைகள், ராணுவ டாங்க்குகள், ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நடனங்கள், சாகச நிகழ்ச்சிகள் போன்றவை நடைபெறும்.

இவ்விழாவிற்கு உலக நாடுகள் பலவற்றில் இருந்தும் மிக முக்கிய தலைவர்கள் பங்கு கொள்கின்றனர். இந்திய நாட்டின் பெருமை மிகு விழாவான இதில் வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் நிச்சயம் கலந்து கொள்ளுங்கள்.

Photo:parth thakkar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X