» »பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் சில அற்புதமான இந்திய திருவிழாக்கள்

பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்படும் சில அற்புதமான இந்திய திருவிழாக்கள்

Written By: Staff

இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒவ்வொரு மாதமும் எங்காவது ஒரு மூலையில் ஏதேனும் சில திருவிழாக்கள் நித்தமும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். அந்த திருவிழாக்கள் ஒவ்வொன்றும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அம்மாதிரியான திருவிழாக்களில் பங்கு கொள்வது கொண்டாட்டம் நிறைந்ததாகவும், புதுமையான அனுபவங்களை தருவதாகவும் இருக்கும்.

வாருங்கள், இந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் கொண்டாடப்படும் சில வித்தியாசமான திருவிழாக்களுக்கு சென்று கொண்டாடி மகிழலாம்.

Makemytrip தளத்திற்கான எல்லா இலவச கூப்பன்களையும் இங்கே பெற்றிடுங்கள் 

கிலா ராய்பூர் கிராம ஒலிம்பிக்ஸ் :

கிலா ராய்பூர் கிராம ஒலிம்பிக்ஸ் :

நம்ம ஊர்களில் பொங்கல் சமயங்களில் கபடி, கயிறு இழுக்கும் போட்டிகள் நடப்பதை போல பஞ்சாப் மாநிலத்தில் கிலா ராய்பூர் என்ற கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் கிராம ஒலிம்பிக்ஸ் என்ற பெயரில் கிராமங்களுக்கே உரித்தான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. கேட்கவே வித்தியாசமாக இருக்கிறதல்லவா.

Photo:T Frey

ஜெய்சால்மர் பாலைவன திருவிழா :

ஜெய்சால்மர் பாலைவன திருவிழா :

ராஜ வாழ்க்கை எப்படி இருக்கும் என நீங்கள் தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் கண்ணை மூடிக்கொண்டு செல்ல வேண்டிய இடம் ராஜஸ்தான் தான். தன் ராஜ பாரம்பரியத்தை இன்றும் தன்னுள் அப்படியே தக்கவைத்திருக்கும் இம்மாநிலத்தில் இருக்கும் மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத்தல நகரம் ஜெய்சால்மர்.

Photo:Ben Beiske

ஜெய்சால்மர் பாலைவன திருவிழா :

ஜெய்சால்மர் பாலைவன திருவிழா :

ராஜஸ்தானத்தின் மணி மகுடம் என்று அழைக்கப்படும் இந்நகரத்தில் பிப்ரவரி மாத முதல் வாரத்தில் பாலைவன திருவிழா கொண்டாடப்படுகிறது. ஒட்டகங்களை அலங்கரிக்கும் போட்டி, ஒட்டக ஓட்டப்பந்தையம், போலோ விளையட்டு போட்டி, நீளமான மீசை வளர்ப்பவர்களுக்கான போட்டி, கைப்பாவை நாடகங்கள், மல்யுத்த போட்டிகள் என இங்கு ஆச்சர்யங்கள் கொட்டிக்கிடக்கின்றன.

Photo:Ben Beiske

கோவா கார்னிவல் :

கோவா கார்னிவல் :

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்து ஓய்ந்த சில நாட்களிலேயே அடுத்த அமர்க்களத்துக்கு தயாராகிறது கோவா. பிப்ரவரி 14 - 17 வரை கொண்டாடப்படும் இந்த கார்னிவல் 18ஆம் நூற்றாண்டில் கோவாவை ஆட்சி செய்த போர்த்துகீசியர்களால் துவங்கப்பட்டதாகும். வருடம் செல்ல செல்ல ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என பிரேசிலில் நடக்கும் புகழ்பெற்ற சாம்பா திருவிழாவை போல களைகட்டுகிறது கோவா கார்னிவல்.

Photo:Vinay Raikar

கோவா கார்னிவல் :

கோவா கார்னிவல் :

கோவா மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள்பற்றிய முழுமையான தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள். கோவாவில் இருக்கும் ஹோட்டல்களில் கட்டண தள்ளுபடி பெற எங்கள் தளத்தின் வாயிலாக அறைகளை இங்கே முன்பதிவு செய்யுங்கள்.

Photo:Vinay Raikar

 மஹா சிவராத்திரி :

மஹா சிவராத்திரி :

ஆதி கடவுளான சிவன் சூன்யத்தில் இருந்து அண்டத்தை படைக்கும் பொருட்டு தாண்டவம் ஆடிய பொழுதே சிவ ராத்திரி என்று உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மக்களால் கொண்டாடப்படுகிறது. பிறப்பு, இறப்பு என்பதில் இருந்து விடுதலை பெற்று மோட்சம் வேண்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி இரவின் போது கங்கையில் ஸ்நானம் செய்கின்றனர்.

தாஜ் மகா உத்சவ் :

தாஜ் மகா உத்சவ் :

தாஜ் மஹாலின் கிழக்கு வாயிலுக்கு அருகில் இந்த திருவிழா நடக்கிறது. இதில் பங்கேற்க இந்திய குடிமக்களுக்கு 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தாஜ்மஹால் உங்களுக்கு பிடிக்குமெனில் கண்டிப்பாக இந்த தாஜ் மாஹா உத்சவ் பண்டிகையிலும் கலந்து கொள்ளுங்கள்.