Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இப்படியெல்லாமா நகரங்கள் இருந்தது ?

இந்தியாவில் இப்படியெல்லாமா நகரங்கள் இருந்தது ?

இந்தியாவின் தொன்மைக் காலத்தில் பல்வேறு செல்வங்களுடன், செழிப்புடனும் காணப்பட்ட நகரங்கள் இப்போது எப்படியுள்ளது என தெரியுமா ?.

இந்தியாவின் தொன்மைக் காலத்தில் பல்வேறு செல்வங்களுடன், செழிப்புடனும் காணப்பட்ட நகரங்கள் இப்போது எப்படியுள்ளது என தெரியுமா ?. போர்கள், இயற்கைப் பேரழிவுகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்டு பல ஆண்டுகளுக்கு முன்னர் கைவிடப்பட்ட நகரங்கள் இந்தியாவில் ஆங்காங்கே காணப்படுகிறது. இன்று அதை நாம் காணும் போது ஏதோ கற்குவியல் என கடந்து செல்லும் வகையில் காணப்படும் அவைகள் மனிதர்களைப் போலவே, மரணமடைந்துள்ளது. அவ்வாறு அழிந்த நகரங்கள் இன்றளவும் மர்மம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. இவ்வாறு அழிந்த சில நகரங்கள் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் புதையல் தேடுபவர்களின் ஆர்வத்தையும், கற்பனைகளையும் தூண்டிவிடும் வகையில் உள்ளது. பலர் இதுகுறித்து அறிந்துகொள்ள அழிந்த நகரங்களுக்குப் பயணிக்கின்றனர். இறுதியில், சிலர் அழிந்து பல ஆண்டுகள் கழித்து கண்டுபிடிக்கப்படுகின்றனர். இவ்வாறு இந்தியாவில் உள்ள அழிந்த சில நகரங்களுக்கு ஓர் டைம் ட்ரேவல் பண்ணலாம் வாங்க.

வைஷாலி, பீகார்

வைஷாலி, பீகார்


வைஷாலி ஒரு பண்டைய வளமான மாநகரமாக இருந்தது. உலகின் முதல் குடியரசு நகரமாகக் கருதப்படும் இது 6-வது நூற்றாண்டில் லிச்சாவிஸ் சக்திவாய்ந்த குடியரசின் தலைநகரமாக இருந்தது. மேலும், வைஷாலி 24-வது ஜெயின் தீர்த்தங்கரா, மகாவீரர் பிறந்த இடமாகும். இந்த இடம் பௌத்த மதத்துடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. புத்தர் பல முறை வைசாலிக்கு பயணம் செய்தார். அங்குள்ள, சரணாலயங்களில் தனது இறுதிநாட்களைக் கழித்தார். பாரம்பரிய முறைப்படி கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நகரம் 3 சுவர்களுடன் வாயில்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களால் சூழப்பட்டுள்ளது. புத்தர் காலத்தில், வைஷாலி மிகப்பெரும் மக்கள்தொகை கொண்ட நகரமாக இருந்தது. 7,707 முக்கியப் பகுதிகளும், தாமரைக் குளங்களும் ஆங்காங்கே அதிகளவில் காணப்படுகின்றன.

Jaiprakashsingh

விஜயநகர், கர்நாடகம்

விஜயநகர், கர்நாடகம்


விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஹம்பி என்றழைக்கப்படும் பழங்கால விஜயநகர், விகர்பேஷ் கோவிலின் மத மையமாக 1336 முதல் 1565 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று இடிபாடுகளுடன் இந்த நகரம் காணப்பட்டாலும் காலத்தால் அழிக்கமுடியாத மிக அழகிய நகரமாகவே காட்சியளிக்கிறது. கிபி. 1500 ஆம் ஆண்டில் விஜயநகரில் 500,000 மக்களே இருந்தனர். இது பிக்கிங்- பெய்ஜிங்க்குப் பின்னர் உலகிலேயே இரண்டாவது பெரிய நகரமாக மாறியது. அது பின்னர் முஸ்லிம் படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு பின் கைவிடப்பட்டது. சுமார் 25 கி.மீ. பரப்பளவில் ஹம்பியின் இடிபாடுகள் இப்போது யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகப் பட்டியல் இடம்பெற்றுள்ளது.

Dineshkannambadi

லோதால், குஜராத்

லோதால், குஜராத்


பண்டைய சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்தின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்று லோதால். 1954-ஆம் ஆண்டு லோதால் கண்டுபிடிக்கப்பட்டது, 1955 முதல் 1960-ஆம் ஆண்டின் இடையில் இந்திய தொல்லியல் துறையால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. லோத்தல் நீர்த்தேக்கங்கள் உலகின் பழமையான இடங்களில் ஒன்றாக உள்ளன. அவை சபர்மதி ஆற்றின் வழித்தடப் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஆபரணங்கள், மணிகள் ஆகியவற்றின் வர்த்தகம் நடைபெற்றதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. லோதால், அதன் நகர திட்டமிடல், கட்டிடக்கலை, அறிவியல் மற்றும் பொறியியல், உலோகம் மற்றும் வடிவமைப்பு ஆகியவற்றிற்கும் புகழ்பெற்றது. கிணறுகள், சுவர்கள், குளியல் அரை, வடிகால்கள் மற்றும் நடைபாதையுடன் கூடிய மாடிகள் போன்ற கட்டமைப்புகள் இன்னும் இங்கே காணப்பட முடிகிறது.

Orissa8

ஸ்ரவஸ்தி, உத்தரப் பிரதேசம்

ஸ்ரவஸ்தி, உத்தரப் பிரதேசம்


இராமாயணத்திலும், மகாபாரதத்திலும், ஸ்ரவஸ்தி கோசல சாம்ராஜ்யத்தில் வளமான நகரமாக திகழ்கிறது. இந்த நகரத்தின் நிறுவனரான வேத கால மன்னர் ஷவஸ்தாவின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டுள்ளது. புத்தர் மற்றும் மஹாவீரர் இணைந்ததன் காரணமாக இந்நகரம் புகழ் பெற்றது. கௌதம புத்தரின் வாழ்ந்த இந்தியாவின் ஆறு பெரிய நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பண்டைய நகரம் ஜெயின் மதத்தின் ஸ்தாபகர் தீர்த்தநகரின் பிறப்பிடமாகப் புகழ் பெற்றுள்ளது. மேலும், ஸ்ரவஸ்தி நகருக்கு அசோகா பயணம் மேற்கொண்ட போது ஜதேவனா கிழக்கு வாசலில் இரண்டு தூண்களை அமைத்து, அருகில் ஒரு நினைவு ஸ்தூபியையும் கட்டியுள்ளார்.

Varun Shiv Kapur

ரேப்டன்ட்ஸ், சிக்கிம்

ரேப்டன்ட்ஸ், சிக்கிம்


1670 முதல் 1814 வரை சிக்கிமின் முன்னாள் ராஜியத்தின் இரண்டாவது தலைநகராக ரபெண்டெஸ் இருந்தது. 1642 ஆம் ஆண்டில் இந்த பகுதி புனிதம் நிறைந்த தலம் என அறிவிக்கப்பட்ட பின்னர் யூக்சோம் நகரிலிருந்து பிரிக்கப்பட்டு சாடோக் நம்கியால் 1670 ஆம் ஆண்டு முதன்முதலாக இந்த நகரம் நிறுவப்பட்டது. நேபாள இராணுவத்தால் இந்த நகரின் பல கட்டமைப்புகள் சிதைவடைந்தன. சமுபத்தில் இங்கு மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் அரண்மனையின் உள்ளே படுக்கையறை, மண்டபம், சமையலறை, சட்டசபை மண்டபம், பொது அரங்கம் மற்றும் காவலர்களின் அறைகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, இடிபாடுகள் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ஏஎஸ்ஐ) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Anand Bhushan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X