» »ஒரு கோடி பேரை அதகளப்படுத்திய பீகார் வெள்ளம் - சுற்றுலாத் தளங்களின் கதி!?

ஒரு கோடி பேரை அதகளப்படுத்திய பீகார் வெள்ளம் - சுற்றுலாத் தளங்களின் கதி!?

Posted By: Udhaya

பீகார் மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 48 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள மகாநந்தா, கங்காய் நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கிறது.

மழை காரணமாக பல கிராமங்களுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அங்குள்ள 15 மாவட்டங்களில் இருக்கும் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கிய மக்களை படகுகளில் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ரயில் தண்டவாளங்கள் அடித்து செல்லப்பபட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செல்லப்பட்டுள்ளன. வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பெண்கள் பீகார் வெள்ளப்பெருக்கில் சாலைகளும், பாலங்களும் அடித்து செல்லப்பட்ட நிலையில், பல மக்கள் உடைந்த பாலத்தின் மேல் ஆபத்தான நிலையில் கடந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வெள்ளத்தால் சிலர் அடித்துச்செல்லப்படும் வீடியோ வெளியாகி மக்களை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது. தாய் தனது மகளுடன் கடந்த செல்லும் போது பாலம் உடைந்து தாயும், மகளும் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. மேலும் இங்குள்ள சுற்றுலாத் தளங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. பீகாரின் முக்கிய சுற்றுலாத்தளங்களைப் பற்றி பார்க்கலாம்.

மேற்கு சம்பரன்

மேற்கு சம்பரன்

பீகாரின் முக்கிய சுற்றுலாத் தளமான இது இந்த வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பீகாரின் நிர்வாக மாவட்டமான மேற்கு சம்பரன் சுற்றுலாவிற்கு ஏற்ற பல தளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. பச்சைப் பசேலென்ற காடுகள், சமவெளிகள், பலவகையான வனவிலங்குகள், பறவைகள் என பார்ப்பதற்கு இங்கு பல விசயங்கள் உள்ளன.

westchamparan.bih.nic.in

 அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தலங்கள்

வால்மிகி தேசியப் பூங்கா, திரிவேணி கரை, பவனாங்கரி, பிக்நதோஹரி, சுமேஷ்வர் கோட்டை, பிருந்தாவனம், நந்தகார்ஹ், அசோகா ஸ்தூபிகள் என பலவகையான சுற்றுலா தளங்கள் இங்கு உள்ளன. இவைகளும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

bstdc.bih.nic.in

மதுபானி

மதுபானி

மதுபானி என்ற வார்த்தையை நீங்கள் உச்சரிக்கும் பொழுது உங்கள் மனதானது கலாச்சாரத்தின் அடிப்படையில் உலகின் அழகான மதுபானி கலை படங்களை நினைத்துக் கொள்ளும். மதுபானி மாவட்டமானது டார்ப்ஹங்கா பிரிவின் ஒரு பகுதியாக உள்ளது.

 மதுபானி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

மதுபானி மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுற்றுலா இடங்கள்

மதுபானி சுற்றுலாவில் ஜைநகர், ஸௌரத், கபிலெஸ்வர்ஸ்த்ஹன், பவானிபூர், ஜ்ஹனிஜ்ஹர்புர், மற்றும் புஹுல்லஹர் போன்றவை மிக முக்கிய இடம் வகிக்கின்றன. இவைகளில் பெரும்பான்மையான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு வந்த சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்கும் பொறுப்பில் மாநில அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. மேலும் உள்ளூர் மக்களும் அரசுடன் சேர்ந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

 கிழக்கு சம்பரான்

கிழக்கு சம்பரான்


இந்தியாவிலேயே மிகவும் தனித்துவமிக்க சுற்றுலாத் தலமாக விளங்குகிறது இந்த இடம். இவ்விடம் பச்சைப்பசேலென்ற புல்வெளிகளால் சூழப்பட்டுள்ளது. கண்டக், புர்ஹி கண்டக், பாக்மதி போன்ற நதிகள் இவ்வழியாக ஓடுகின்றன. நேபாளத்துடன் எல்லையைப் பகிரும் இந்த நகரில் இருந்து பீஹாரின் மற்ற நகரங்களுக்கு போக்குவரத்து வசதிகள் மிகுதியாக உண்டு. நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த மாவட்டத்தையே கதிகலங்க வைத்துவிட்டது.

eastchamparan.bih.nic.in

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

சேசரியா ஸ்டூபா, ரக்சுவல் மற்றும் சோமேஷ்வர மந்திர் ஆகிய தளங்களும் இங்கு உள்ளன. இவையெல்லாம் இம்மாவட்டத்தை முக்கியமான சுற்றுலா தளமாக ஆக்கியுள்ளன.

Ashwini Kesharwani

 ஹஜிபுர்

ஹஜிபுர்


ஹஜிபுர் உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகளை தன்னுள் ஈர்க்கிறது. இங்குள்ள மிகப் பிரம்மாண்டமான கோவில்கள், சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்கின்றது. இங்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள அழகை ரசித்து இரண்டொரு நாள்கள் தங்கி செல்வது வழக்கம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பீகாரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்த வெளியூர் சுற்றுலா பயணிகளும் அரசு உதவியுடன் பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். சில நாள்களில் நிலைமை கட்டுக்குள் வரும் என்று நம்பப்படுகிறது.

Abhishek Singh

 சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

ராம்செளஹர மந்திர், கோன் ஹாரா காட், நேபாளி மந்திர், மகாத்மா காந்தி சேது, ஹிலாபஜாரில் இருக்கும் மகா பிரபுஜி பைதக்ஜி, ஸோனெபுர் சந்தை மற்றும், வைஷாலி மஹாஉத்சவம் போன்றவை மிகப் பிரபலமானவை.

Abhishek Singh

Read more about: travel, bihar