Search
  • Follow NativePlanet
Share
» »மேகலாயா காடுகளுக்குள் ஒரு மெர்சல் டூர் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 5

மேகலாயா காடுகளுக்குள் ஒரு மெர்சல் டூர் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 5

மேகலாயா காடுகளுக்குள் ஒரு மெர்சல் டூர் செல்வோமா? #காட்டுயிர்வாழ்க்கை 5

By Udhaya

1972-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பூமியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்களை கொண்டுள்ள இம்மாநிலத்தில் பழங்கள் மற்றும் பாக்கு போன்றவை அதிகம் பயிராகின்றன. ஷில்லாங் நகரம் இதன் தலைநகரமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் ஷில்லாங் 23 வது இடத்தை வகிக்கிறது. மேகாலயா மாநிலம் அதன் வடக்கில் அஸ்ஸாம் மாநிலத்தையும் தெற்கில் பங்களாதேஷ் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4

இந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வனப்பிரதேசமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள காடுகள் பல்லுயிர்ப்பெருக்க இயற்கைச்சூழல் அமைப்பை கொண்டுள்ளன. பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் மற்றும் தாவரங்கள் இந்த காடுகளில் இடம்பெற்றுள்ளன. செழுமையான இந்த வனப்பிரதேசத்தின் தாவர மற்றும் உயிர் செழிப்பு பார்வையாளர்களை பிரமிக்க செய்கின்றன. இந்த மாநில காடுகளுக்குள் பயணம் செய்வது உங்களுக்கு நிச்சயமாக பிடிக்கும். ஏனென்றால் அந்த அளவுக்கு அற்புதமான அம்சங்கள் நிறைந்த காடு இது.

கிழக்குலகின் ஸ்காட்லாந்து

கிழக்குலகின் ஸ்காட்லாந்து

கிழக்குலகின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங்க் வடகிழக்கு மாகாணங்களின் புகழ்பெற்ற சுற்றுலாதளமாகும். பச்சைப்பசேலென்ற புல்வெளிகள், மலை உச்சிகளைத் தழுவும் மேகங்கள், மகரந்தம் வீசும் மலர்கள், இனிமையாகப் பழகும் மக்கள் என அழகாய் தோன்றும் ஷிலாங்கின் பரபரப்பான நகரவாழ்க்கையும் சேர்த்து நமக்கு மறக்கமுடியாத சுற்றுலா உணர்வை அளிக்கிறது. ஷில்லாங் ஏராளமான நீர்வீழ்ச்சிகளையும் அழகான மலை உச்சிகளையும் தன்னகத்தே கொண்டு மிகுந்த எழிலுடன் விளங்குகிறது. எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி, ஸ்வீட் நீர்வீழ்ச்சி, ஷில்லாங் மலைச்சிகரம், லேடி ஹைதரி பூங்கா, வார்ஸ் ஏரி, போலீஸ் பஜார் ஆகியவை முக்கியமான சுற்றுலாத் தளங்களாகும். டான் பாஸ்கோ மையம் என்ற அருங்காட்சிகமும் முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது.

PC: Masrur Ashraf

 எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி

எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி

மிகவும் புகழ்பெற்ற தளமாக விளங்கும் இந்த நீர்வீழ்ச்சி நகரத்தில் இருந்து 8கிமீ தொலைவில் உள்ளது இந்த பகுதிக்கு செல்பவர்கள் வழியெங்கும் உள்ள அழகிய சாலைகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தபடியே செல்லலாம். கா கஷித் லாய் பதெங் கோஷிவ் என்று உள்ளூர் மக்களால் மூன்றடுக்கு நீர்வீழ்ச்சி என்ற அர்த்தத்தில் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இங்குள்ள பாறை யானை வடிவில் இருப்பதால் இதை எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி என வெள்ளையர்கள் பெயரிட்டார்கள். 1897ல் ஏற்பட்ட கடும் பூகம்பத்தால் இப்பாறையின் ஒரு பகுதி அழிந்துவிட்டது. பல வகையான செடிகளும், விலங்குகளும் இங்கு உள்ளன. உள்ளூர் பெண்களால் நடத்தப்படும் கடைகளில் பிரத்யேக கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன. உள்ளூர் உடைகளை அணிந்து புகைப்பட எடுத்துக்கொள்ள பயணிகள் விரும்புகிறார்கள். .
.
PC: Anil Kumar B Bhatt

ஸ்வீட் ஃபால்ஸ்

ஸ்வீட் ஃபால்ஸ்

மிகவும் ஆழமாக, அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான ஸ்வீட் ஃபால்ஸ் ஷில்லாங்கில் அமைந்துள்ளது. வைட்டன் என உள்ளூர் மக்களால் வழங்கப்படும் இந்நீர்வீச்சி 96மீட்டர் உயரத்தில் இருந்து கருப்பு பாறைகளின் மேல் வேகமாக விழுகிறது. மழைக்காலங்களில் அதிக அளவில் நீர் வருவதால் முழுவேகத்தில் விழம்காட்சி பிரம்மிக்க வைப்பதாய் இருக்கும். ஸ்வீட் ஃபால்ஸ் என்றழைக்கப்பட்டால் அதன் பிரம்மாண்ட உருவத்தைத் தவிர இனிப்பாக எதுவும் கிடையடஹு. உள்ளூர் மக்கள் டாக்சி மூலம் இந்த இடத்தை அடைகிறார்கள். சமீபத்தில் மேகாலயா சுற்றுலாத்துறையை இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள இடத்தை மேலும் அழகூட்டியிருக்கிறார்கள்

Sindhuja0505

ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம்

ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகம்

டான் பாஸ்கோ மையம் பல வகையான கலாச்சாரங்களை எடுத்துரைக்கும் வண்ணம் ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகமாக திகழ்கிறது. பயணிகள் பலவகையான கலைப்பொருட்கள், கைவினைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் அரிய புகைப்படங்கள் ஆகியவற்றை இங்கு காணலாம். சலேசியன் சங்கத்தால் நடத்தப்படும் இந்த அருங்காட்சியகம் புனித இருதய தேவாலய வளாகத்தின் உள்ளேயே இருக்கிறது. உள்ளூர் மக்களால் டான் பாஸ்கோ மியுசியம் என அழைக்கபப்டும் இதில் 17காட்சியகங்கள் உள்ளன. ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஏற்றவாறு இந்த காட்சியகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயுதங்கள், உடைகள், ஆபரணங்கள், கூடைகள், மொழிகள் என ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாக பயணிகள் தெரிந்துகொள்ளலாம்.

dbcic

 சௌத் கரோ ஹில்ஸ்

சௌத் கரோ ஹில்ஸ்

இந்தியாவில் மனிதர்களால் அதிகம் தரிசிக்கப்படாமல் ஒளிந்திருக்கும் இயற்கை எழிற்பிரதேசங்களில் இந்த சௌத் கரோ ஹில்ஸ் பகுதியும் ஒன்று. மேகாலயா மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள இந்த மாவட்டம் இந்தியாவின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றாகும். இந்த மாவட்டத்திற்கு வடக்கே ஈஸ்ட் கரோ ஹில்ஸ், கிழக்கே வெஸ்ட் காசி ஹில்ஸ், மேற்கே வெஸ்ட் கரோ ஹில்ஸ் போன்ற மாவட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. மேலும், இதன் தென்பகுதியை ஒட்டி பங்களாதேஷ் நாட்டின் சில பகுதிகள் அமைந்திருக்கின்றன. அதிகம் அறியப்படாத மாவட்டம் என்பதால் சௌத் கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் தேடிப்பார்க்க வேண்டிய பல அழகுக்காட்சிகளும், இயற்கை அம்சங்களும் ஏராளம் நிரம்பியுள்ளன.

Uajith

சிஜு

சிஜு

சிஜு எனும் பிரசித்தமான இந்த குகை அமைப்பு சிம்சங் ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிற்து. இது தொபாக்கோல் அல்லது வௌவால் குகை என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படுகிறது. ஸ்டாலக்சைட் மற்றும் ஸ்டாலக்மைட் எனப்படும் சுண்ணாம்பு பாறை படிமங்களால் இந்த குகை உருவாகியிருக்கிறது. இந்தியாவிலேயே மிக நீளமான குகையான இதன் உள்ளே ஆற்று நீரோட்டங்களின் பாதைகள் காணப்படுகின்றன. பிரமிக்க வைக்கும் இயற்கை அதிசயமான இது இந்திய சுற்றுலா பிரியர்கள் அவசியம் காண வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. முதல் முறை தரிசிக்கும் எவரையும் இந்த குகையின் பிரம்மாண்ட தோற்றம் திகைக்கவைத்து விடுகிறது. இந்த குகைக்கு அருகிலேயே சிம்சங் ஆற்றின் மறுகரையில் சிஜு பறவைகள் சரணாலயம் அமைந்திருக்கிறது. இங்கு பலவிதமான அரிய பறவை இனங்கள் மற்றும் விலங்கினங்கள் வசிக்கின்றன. குளிர்கால மாதங்களில் இங்கு புலம் பெயர்ந்து வரும் சைபீரிய வாத்துகளை பார்க்கலாம்.

Unknown

 சிரபுஞ்சி

சிரபுஞ்சி

ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய சிரபுஞ்சி, மனம் மயக்கும் ஆற்றல் படைத்ததாகும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

Rishav999

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி


மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, மேகாலயாவின் கண்கவர் நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். மௌஸ்மாய் கிராமத்துக்கு மிக அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது. நோஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சி என்று உள்ளூரில் அறியப்படும் மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, சுமார் 315 மீட்டர் உயரத்துடன், இந்தியாவின் நான்காவது உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக இருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இது, ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகளாகப் பிரிந்து, கடுமையான சுண்ணாம்புக் கல்லாலான செங்குத்தான பாறைகளின் வழியே பொங்கிப் பிரவகித்து ஓடும் அமைப்பைக் கொண்டு "ஏழு சகோதரிகளின் நீர்வீழ்ச்சி" என்றும் வழங்கப்படுகிறது.

Ppyoonus

நோகலிகை நீர்வீழ்ச்சி

நோகலிகை நீர்வீழ்ச்சி

சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். மிகச் சரியாக இந்த நீர்வீழ்ச்சியின் கீழ்ப்புறத்தில், நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பாரித்த நீர் நிறைந்த அழகிய முங்கு குளம் ஒன்று உருவாகியுள்ளது. நோகலிகை நீர்வீழ்ச்சிக்கு, முன்பெல்லாம், இதிலிருந்து சற்று தொலைவில் உள்ள நோக்குமுனையிலிருந்து மட்டுமே பார்க்க்க்கூடியதாக இருந்தது நோகலிகை நீர்வீழ்ச்சி. ஆனால், சமீபத்தில் கட்டப்பட்ட படிகள் அதன் அடிப்புறத்திற்கு உங்களை அழைத்துச் சென்று இந்த நீர்வீழ்ச்சியை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. கழுத்து வலி, ஆஸ்துமா போன்ற நோய்களினால் அவதிப்படுவோர் இறங்கி வர வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகின்றனர்; ஏனெனில், பல நூறு படிகளில் இறங்கி வருவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.


Sayowais

டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி

டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி


டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த நீர்வீழ்ச்சியாகும். உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியையும், சீர்கேடு, பேராசை மற்றும் தீமை ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய த்லென் என்ற பாம்பைக் கொல்ல நடந்த சண்டையை சித்தரிக்கும் இயற்கையான பாறை செதுக்கல்களையும் காண்பதற்காகவே இங்கு வருகின்றனர். டெயின்-த்லென், சிரபுஞ்சி செல்லும் வழியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு செல்வதற்கு ஏற்ற வழி, ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலாப் பேருந்து அல்லது கார் மூலம் செல்வதே ஆகும்.

ஜெயின்டியா மலைகள்

ஜெயின்டியா மலைகள்

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை. ஜெயின்டியா மலைகள் என்பது மேற்கு ஜெயின்டியா மலைகள் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் ஆகிய இரு மாவட்டங்களையும் குறிக்கும். மேற்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக ஜோவாய் மற்றும் கிழக்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் தலைநகரமாக க்லீஹ்ரியாட் ஆகியவை உள்ளன

AditiVerma2193

தாவ்கி

தாவ்கி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில், ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் தான் தாவ்கி. இந்த இடத்தின் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. தாவ்கியில் உள்ள ஊம்ங்கோ ஆற்றின் ஊம்ஸியம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வருடாந்திர படகு போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஊம்ங்கோ ஆறு ஜெயின்டியா மலைகள் மற்றும் காசி மலைகளின் இயற்கையான எல்லையாக உள்ளது. இந்த இரு நகரங்களையும் இணைக்கும் வகையில், 1932-ம் ஆண்டில் பிரிட்டிஷார் ஒரு பெரிய தொங்கு பாலத்தை அமைத்துள்ளனர். ஷில்லாங்கின் பாரா பஜார் பகுதியிலிருந்து காலை நேர பேருந்துகள் மற்றும் பிற போக்குவரத்து வசதிகள் தாவ்கி எல்லைப் பகுதி வரையிலும் கிடைக்கின்றன.

மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4மணிப்பூர் காடுகளுக்குள் ஓர் மகிழ்பயணம் போலாமா? #காட்டுயிர்வாழ்க்கை 4

Vikramjit Kakati

Read more about: travel tour forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X