Search
  • Follow NativePlanet
Share
» »வந்தாச்சு நண்பர்கள் தினம், இந்த வருடம் எங்க போகலாம் ?

வந்தாச்சு நண்பர்கள் தினம், இந்த வருடம் எங்க போகலாம் ?

ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் ஞாயிறு நண்பர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டிற்கான நண்பர்கள் தினம் வரும் ஆகஸ்ட் 5ம் தேதியன்று கொண்டாடப்படவுள்ளது. காலத்தின் ஓட்டத்தில் புதிய புதிய நண்பர்கள் கிடைத்தாலும், பழைய ஆருயிர் நண்பர்கள் எப்பவுமே ஸ்பெஷல் தான். அப்படிப்பட்டவர்களையும், அந்த வசந்தகாலங்களையும் நெஞ்சில் அசைபோட இந்த நண்பர்கள் தினத்தன்று இந்தமாதிரியான இடத்திற்கு எல்லாம் சுற்றுலா போய் பாருங்க.

ஏற்காடு

ஏற்காடு

தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மலைச் சுற்றுலாத் தலங்கள் ஏராளமாக இருந்தாலும் பட்ஜெட்டுக்கு ஏற்ற சுற்றுலாத் தலம் என்றால் அது ஏற்காடு தான். இதனால் தான் இப்பகுதி ஏழைகளின் ஊட்டி என்ற மற்றுமொரு பெயரைக் கொண்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கிளியூர் அருவி. ஏற்காட்டிலேயே பிரசிதிபெற்ற முக்கிய சுற்றுலாத் தலமான இங்கு கோடை காலத்திலும் கூட அருவி கொட்டும் அழகு நம்மை பரவசப்படுத்தும். தற்போது பருவ மழை பெய்து வரும் நிலையில் ஏற்காடு பயணம் பல பசுமை நினைவுகளை நம் மனதில் படரச் செய்யும்.

varun suresh

மூணார்

மூணார்

மூணார்

காணும் இடமெல்லாம் பசுமையும், tருடத்தின் எந்தக் காலத்திலும் சில்லென காலநிலையைக் கொண்டது மூணார். இங்கிருக்கும் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலம் மாட்டுபெட்டி அணை. மூணார் நகரில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இதனை சென்றடையும் வழிநெடுகிழும் பசுஞ்சோலைகளும், அடர் வனக் காடுகளும் ஒருவித அமைதியான திகில் அனுபவத்தை நம்மில் ஏற்படுத்தும். அதுவும் நண்பர்களுடன் லாங் ட்ரைவ்... கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க அது எப்படி இருக்கும்னு.

தேக்கடி

தேக்கடி


தமிழக- கேரள எல்லையில் அமைந்திருக்கும் மிக அற்புதமான பசுமை சூழல் நிறைந்த இடம்தான் இடுக்கி மாவட்டம். இடுக்கிக்கே அடையாளம் என்றால் அது தேக்கடி தான். இயற்கை அழகையும், கேரள பாரம்பரியத்தையும் ஒருங்கே கண்டுகளித்திட தேக்கடிக்கு வரலாம். தேக்கடியில் உள்ள பெரியார் தேசிய வனவிலங்கு சரணாலயம், முல்லைப் பெரியார் அணை உள்ளிட்டவை ஒரு நாள் சுற்றுலாவிற்கு ஏற்ற தளங்களாக, உங்களது நண்பர்களுடன் கொஞ்சிவிளையாட ஏற்றதாக இருக்கும்.

Drsurajfm

குல்மார்க்

குல்மார்க்

நாட்டிலேயே பணிச் சருக்கு விளையாட்டு என்றால் அது காஷ்மீரில் உள்ள குல்மார்க்கில்தான் மிகவும் பிரபலம். இங்குள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டை சென்றடைய சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ரோப் காரில் பயணம் செய்ய வேண்டும். அந்த அனுபவமே திக்திக்திக் என நம்மை புரட்டிப் போட்டு விடும். அதனைத் தொடர்ந்து விளையாடும் பணிச் சருக்கு கூட பல கேளிக்கையும், மகிழ்ச்சியையும், சாகசமாகவும் அமையும்.

Arup1981

சிக்மகளூர்

சிக்மகளூர்


உங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை உங்களிடமே எடுத்துக்காட்டும் இயற்கையின் ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் பகுதி தான் சிக்மகளூர். மலைக் குன்றுகள் ஆங்காங்கே அமைந்து, வான விளையாட்டை நடத்துவதற்கு துணைச் செல்லும். அவ்வப்போது மனம் குளிர்ந்து மேகங்கள் மழையைத் தூவும். அன்றாட வாழ்க்கையிலிருந்து வெளியே வந்து நம் நண்பர்களுடன் மனம்குளிர கொண்டாட்டத்தில் ஈடுபட சிக்மகளூர் சிறந்த இடம்.

Mallikarjuna Sarvala

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி


கோவா என்றால் யாருக்குத்தான் பிடிக்காமல் இருக்கும். ஆனால், அங்கே செல்லக் கூடிய வாய்புதான் வருடா வருடம் ஏதோ காரணத்தால் தட்டிக் கழிகின்றது. சரி விடுங்க பாஸ், அதுக்கு பதிலாகத்தான் நம்ம ஊர் பாண்டிச்சேரி இருக்கே. அழகான கடற்கரைகள், பிரெஞ்சு பாணி கட்டிடங்கள், கழிமுகங்கள், படகுச்சவாரிகள் என சுவாரஸ்யமான பல அம்சங்களைக் கொண்டுள்ளது பாண்டிச்சேரி. அதுமட்டுமே, இங்க ஸ்பெஷல், அதுக்கும் மேல பல இருக்கு. நண்பர்களுடன் இங்க போற அனுபவம் வேற எங்கையும் கிடைக்காதுன்னுதான் சொல்லனும்.

Darshika28

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X