Search
  • Follow NativePlanet
Share
» »பல்வேறு இடங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!!

பல்வேறு இடங்களின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!!!

By

முழுமுதற் கடவுள் விநாயகரின் பிறந்த நாளாக கருதப்படும் 'விநாயகர் சதுர்த்தி திருவிழா' ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

முதன்முதலில் இவ்விழா மராட்டிய மன்னன் சத்திரபதி சிவாஜி ஆட்சிக் காலத்தில், மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. அதன் பின்னரே மற்ற பகுதிகளில் அதிகம் கொண்டாடப்பட துவங்கியது.

அதேவேளை தமிழகத்தில் குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்ட விநாயகர் சதுர்த்தி விழா வெகுகாலத்துக்கு பின்னரே பொது விழாவாக மாற்றமடைந்தது.

இவ்வாறாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படும் இத்திருவிழா, எவ்வகையில் அந்தந்த இடங்களில் கலாச்சாரங்களுக்கு ஏற்ப வித்தியாசமாக கொண்டாடப்படுகிறது என்று இக்ககட்டுரையில் காண்போம் வாருங்கள்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இந்தியாவிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் விநாயகர் கோயில்கள் அதிகம். அதேபோல விநாயகர் சதுர்த்தி விழா மகாராஷ்டிராவில் கொண்டாடப்படுவது போல வெகு விமரிசையாக வேறெங்கும் கொண்டாடப்படுவதில்லை. அதிலும் மும்பையின் கிர்காம் சௌபாத்தி பகுதியில் மிக பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படும் காட்சி அற்புதமானது.

கிர்காம் சௌபாத்தி

கிர்காம் சௌபாத்தி

மும்பையின் கிர்காம் சௌபாத்தி பகுதியில் கடலில் கரைப்பதற்காக எடுத்துச்செல்லப்படும் அம்பெய்தும் தோற்றத்திலுள்ள விநாயகர் சிலை.

மும்பை வீதியொன்றில்...

மும்பை வீதியொன்றில்...

மும்பை வீதியொன்றில் கடல் வெள்ளத்தில் கரைவதற்கு முன் மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக செல்லும் விநாயகர்!

அகோலா

அகோலா

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியிலுள்ள அகோலா நகரில் மிகப்பெரிய விநாயகர் சிலையை இழுத்துச்செல்லும் பெண்கள்.

மும்பை சிலை கரைப்பு

மும்பை சிலை கரைப்பு

மும்பையின் அரபிக்கடலில் விநாயகர் சிலையை கடலில் கரைக்க அலையோடு போராடும் பக்தர்கள்.

கடலோர காவல் படை

கடலோர காவல் படை

மும்பையின் கிர்காம் சௌபாத்தி பகுதியில் சிலை கரைப்பு சமயத்தில் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் கடலோர காவல் படை ஹெலிகாப்டர்.

படம் : Chris

தமிழ்நாடு

தமிழ்நாடு

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் களிமண்ணால் செய்யப்படும் பிள்ளையாரை பூக்கள் மற்றும் அருகம்புற்களால் அலங்கரித்து வீடுகளில் வணங்குகிறார்கள். அதோடு கொழுக்கட்டை, சுண்டல் போன்றவற்றை செய்து விநாயகருக்கு படைக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஞாயிற்றுகிழமையில் வங்காள விரிகுடாவில் கரைக்கப்படுகிறது. அப்போது நடத்தப்படும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

சென்னை

சென்னை

வங்காள விரிகுடாவில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் விநாயகர் சிலைகள்.

விநாயகர் முகமூடி

விநாயகர் முகமூடி

சென்னை பள்ளியொன்றில் விநாயகர் சதுர்த்தியை பிள்ளையார் முகமூடி அணிந்து கொண்டாடும் மாணவர்கள்.

சேலம்

சேலம்

சேலத்தில் மிகப்பெரிய விநாயகர் சிலை ஒன்றுக்கு பணமாலை அணிவிக்கப்பட்டிருக்கும் காட்சி.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோயம்புத்தூரில் தயாராகும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள்.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் உள்ள பிரபலமான விநாயகர் கோயில் ஒன்றில் விநாயகருக்கு படைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய அளவிலான லட்டுகள்!

பூரி

பூரி

ஒடிஸாவின் பூரி நகரின் பூரி கடற்கரையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி உருவாக்கப்பட்டுள்ள அழகிய மணற்சிற்பம்.

பெங்களூர்

பெங்களூர்

பெங்களூரில் விநாயகர் சதுர்த்தி திருவிழா 'கௌரி கணேஷ ஹப்ப' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த விழாவின்போது மணமான பெண்கள் தங்கள் மண வாழ்வு சிறக்க வேண்டுமென விநாயகரின் தாயார் பார்வதிக்கு 'கௌரி பூஜை' செய்து வணங்குகின்றனர். மேலும் பெங்களூரின் புகழ்பெற்ற விநாயகர் கோயிலான தொட்ட கணபதி கோயிலில் விநாயகர் சதுர்த்தி அன்று பக்தர்கள் கூட்டம் அலை மோதும். அதுமட்டுமல்லாமல் அலசூர் ஏரி, சாங்க்கி ஏரி உள்ளிட்ட ஏரிகளில் விநாயகர் சிலை கரைப்பு வைபவமும் நடந்தேறும்.

அலசூர் ஏரி

அலசூர் ஏரி

பெங்களூரின் அலசூர் ஏரியில் கரைப்பதற்காக எடுத்துச்செல்லப்படும் விநாயகர் சிலை.

ஆந்திரப்பிரதேசம்

ஆந்திரப்பிரதேசம்

ஆந்திரப்பிரதேசத்தில் இந்து மக்களின் வீடுகளெங்கும் களி மண்ணால் செய்யப்படும் 'மட்டி விநாயகடு' மற்றும் மஞ்சளைக் கொண்டு செய்யப்படும் 'சித்தி விநாயகடு' ஆகிய இரண்டு வடிவங்களில் விநாயகரை மக்கள் வணங்குகின்றனர். அதோடு மிகப்பெரிய உருவங்களில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன.

படம் : Dr. Rajasekhar

ஹைதராபாத்

ஹைதராபாத்

சார்மினார் பகுதியில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் விநாயகர் சிலை.

குழலூதும் விநாயகர்

குழலூதும் விநாயகர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி ஹைதராபாத் நகரின் ஒரு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை.

படம் : Vijay Bandari

ஜாம்நகர்

ஜாம்நகர்

குஜராத்தின் ஜாம்நகரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நிலக்கடலை கொண்டு செய்யப்பட்டுள்ள 51 அடி உயரமுள்ள விநாயகர் சிலை.

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர்

பேண்ட் வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படும் விநாயகர் சிலை.

கோவா

கோவா

கோவாவின் கணேஷா சித்ரஷாலா எனுமிடத்தில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விநாயகர் சிலைகளை உருவாக்கும் சிற்பி.

படம் : Nijgoykar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X