Search
  • Follow NativePlanet
Share
» »கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம்

By Super Admin

தஞ்சாவூரில் தந்தை கட்டிய கோயில் ஆண்மையின் கம்பீரம் என்றால், கங்கை கொண்ட சோழபுரத்தில் மகன் கட்டியதோ பெண்மையின் பேரழகு.

அதாவது பெரிய கோயில் விமானத்தில் காணப்படாத நெளிவுகள், கங்கை கொண்ட சோழபுரம் கோயிலில் காணப்படுவது பெண்ணின் நளினத்தை நினைவூட்டுவதாக இருக்கிறது.

இதன் காரணமாகவே பெரிய கோயிலைப் போன்றே கட்டப்பட்டிருந்தாலும், சோழபுரம் கோயிலைப் பார்க்கின்றபோது ஒரு பெண்ணைப் பார்ப்பதுபோன்ற புது உணர்வு உண்டாகிறது.

சரி, கொஞ்சம் இந்த ஆண், பெண் விளையாட்டை ஒதுக்கிவைத்துவிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தின் பக்கங்களை கொஞ்சம் புரட்டுவோம்!!!

படித்துப் பாருங்கள் : தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் - தெரிந்ததும், தெரியாததும்!

பெருவுடையார் கோயில்

பெருவுடையார் கோயில்

தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் என்ற சிற்றூரில் பெருவுடையார் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கும் தஞ்சை பெரிய கோயிலைப் போன்றே பெருவுடையார் கோயில் என்றே பெயர் இருப்பினும், இதன் அமைவிடமான கங்கைகொண்ட சோழபுரத்தின் பெயரிலேயே பிரபலமாக அழைக்கப்படுகிறது.

படம் : Rsp3282

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கைகொண்ட சோழபுரம்

1022-ல் இராசேந்திர சோழன் இந்தியாவின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் வென்றதோடு கங்கையையும் வெற்றிகொண்டான். அந்த வெற்றியின் காரணமாக 'கங்கை கொண்ட சோழன்' என்ற பட்டப்பெயரும் அவனுக்கு வழங்கப்பட்டது. அதோடு அந்த மாபெரும் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் கங்கைகொண்ட சோழபுரம் என்ற இந்த ஊரும் நிர்மாணிக்கப்பட்டது. அதேவேளை கலைப்பொக்கிஷமான இந்த பெருவுடையார் கோயிலும் கட்டப்பட்டது.

படம் : Ssriraman

கோயில் விமானம்

கோயில் விமானம்

தஞ்சை பெரிய கோயிலின் விமானம் 216 அடியுடன் பிரம்மாண்டமாக காட்சியளிக்க, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் விமானத்தின் உயரமோ 160 அடியே ஆகும். அதேபோன்று 13 நிலைகள் கொண்ட பெரிய கோயில் விமானத்தோடு ஒப்பிடுகையில் சோழபுரம் கோயில் விமானத்தில் 8 நிலைகளே உள்ளன. ஆனால் நம் உள்ளங்களை கவரும் கவின் கொஞ்சும் வளைவுகள் சோழபுரம் கோயில் விமானத்தில் காணப்படுவதால், அதற்கு ஒரு பெண்ணியல்பை இவைத் தருகின்றன.

படம் : Thamizhpparithi Maari

கோட்டையும், கோயிலும்!

கோட்டையும், கோயிலும்!

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் ஒருகாலத்தில் கோயிலாக மட்டுமில்லாமல் சிறந்த கோட்டையாகவும் விளங்கியிருக்கிறது. இப்போதும் கோயிலின் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரணும், மேற்கே சிறிய அரண் ஒன்றும் உள்ளது.

படம் : Mahesh Balasubramania

மண்டபம்

மண்டபம்

340 அடி நீளமும், 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலின் மண்டபம் 175 அடி மற்றும் 95 அடி நீள அகலத்துடன் காட்சியளிக்கிறது. அதோடு மண்டபத்தையும், கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி ஒன்று அமைந்துள்ளது. தஞ்சாவூர் கோயிலில் இருப்பதுபோன்றே இந்த இடைவழியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணைக் கவரும் துவார பாலகர்களுடனும், படிக்கட்டுகளுடனும் மிளிர்கின்றன.

படம் : Kasiarunachalam

140 தூண்கள்

140 தூண்கள்

பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்கிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.

படம் : Simbubemba

அம்மனுக்கு தனிக்கோயில்

அம்மனுக்கு தனிக்கோயில்

கங்கைகொண்ட சோழபுரம் கட்டப்பட்ட காலத்திலேயே அம்மனுக்கும் ஒரு தனிக் கோயில் இங்கு கட்டப்பட்டுள்ளது. ஆனால் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரியநாயகி அம்மன் சந்நிதி, கோயில் கட்டிய பின் 200 ஆண்டுகளுக்கு பின்னர் 13-ஆம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.

படம் : Nagarjun Kandukuru

பிரஹதீஸ்வரர்

பிரஹதீஸ்வரர்

கங்கைகொண்ட சோழபுரத்தில் லிங்க வடிவில் காட்சிதரும் பிரஹதீஸ்வரர்.

படம் :Harish Aluru

சண்டேச அனுக்ரஹ மூர்த்தி

சண்டேச அனுக்ரஹ மூர்த்தி

தஞ்சை பெரிய கோயிலில் இல்லாத சிறப்பாக இந்தச் சிற்பத்தை பலர் குறிப்பிடுகின்றனர். அருகில் பார்வதி வீற்றிருக்க, காலடியில் பக்தியுடன் கைகூப்பியபடி அமர்ந்திருக்கும் சண்டேசருக்கு சிவன் பரிவட்டம் கட்டுகிறார்.

படம் : Nagarjun Kandukuru

சிம்ஹகேணி

சிம்ஹகேணி

கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் சிம்ஹகேணி என்பது சிங்கத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கிணறு.

படம் : Nagarjun Kandukuru

நந்தி

நந்தி

கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள இந்த நந்தி இந்தியாவின் மிகப்பெரிய நந்திகளில் ஒன்று.

படம் : Nagarjun Kandukuru

துவாரபாலகர்கள்

துவாரபாலகர்கள்

நுழைவாயிலில் பிரம்மாண்டமாக காட்சிதரும் துவாரபாலகர்கள்.

படம் : Nagarjun Kandukuru

நடராஜர்

நடராஜர்

அற்புத வேலைப்பாடுகளுடன் அமைந்த நடராஜர் சிலை.

படம் : Noé Alfaro

இசைக்கலைஞர்கள்

இசைக்கலைஞர்கள்

நாதஸ்வரம் மற்றும் தவில் வாசிக்கும் கலைஞர்கள்.

படம் : Nagarjun Kandukuru

பிரம்மா

பிரம்மா

பிரம்மனும், தேவதைகளும்.

படம் : Nagarjun Kandukuru

இரண்டு நந்திகள்!

இரண்டு நந்திகள்!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சிவபெருமானுக்கு முன்பு இரண்டு நந்திகள் இருக்கின்றன. இவற்றில் பெரிய நந்தி மண்டபத்துக்கு வெளியேயும், சிறியது மண்டபத்தின் துவக்கத்திலும் அமையப்பெற்றுள்ளன.

படம் : Balajijagadesh

கோயில் கிணறு

கோயில் கிணறு

கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கிணறு.

படம் : Nagarjun Kandukuru

மஹிசாசுரமர்த்தினி

மஹிசாசுரமர்த்தினி

மஹிசாசுரனை சம்ஹாரம் செய்யும் துர்கா தேவி.

படம் : Nagarjun Kandukuru

சிவ வழிபாடு

சிவ வழிபாடு

ஒரு பெண் சிவபெருமானை வழிபடுவது போன்று கோயில் சுவற்றில் வடிக்கப்பட்டுள்ள சிற்பம்.

படம் : Nagarjun Kandukuru

சிதைந்த சிற்பங்கள்

சிதைந்த சிற்பங்கள்

கோயில் வளாகத்தில் உள்ள சிதைந்த மற்றும் முடிக்கப்படாத சிற்பங்கள்.

படம் : Nagarjun Kandukuru

சரஸ்வதி

சரஸ்வதி

ஞான சரஸ்வதியின் சிற்பம்.

படம் : Nagarjun Kandukuru

முடிக்கப்படாத மண்டபம்

முடிக்கப்படாத மண்டபம்

நிறைய தூண்களுடன் காட்சியளிக்கும் முடிக்கப்படாத மண்டபம்.

படம் : Thamizhpparithi Maari

அந்திவேளையில்...

அந்திவேளையில்...

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் அந்திவேளை தோற்றம்.

படம் : Thamizhpparithi Maari

சோழ கேரளன் திருமாளிகை

சோழ கேரளன் திருமாளிகை

ராஜேந்திர சோழனின் பட்டப்பெயர்களில் ஒன்றான 'சோழ கேரளன் திருமாளிகை' கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு காலத்தில் இருந்துள்ளது. ஆனால் அதன் சுவடுகள்தான் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இந்த அரண்மனையிலிருந்து, சோழபுரம் பெருவுடையார் கோயிலுக்கு சுரங்கப்பாதை ஒன்றும் அமைந்திருந்ததாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

படம் : Kasiarunachalam

ஆலமரம்

ஆலமரம்

கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஆலமரம்.

படம் : Nagarjun Kandukuru

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

தஞ்சாவூரிலிருந்து 72 கி.மீ தொலைவில் கும்பகோணம், அணைக்கரை வழியாக ஜெயங்கொண்டம் போகும் வழியில் கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலுக்கு நிறைய பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

படம் : Thamizhpparithi Maari

இந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்! தெரியுமா?இந்த இடங்கள்ல காதல் புரபோஸ் பண்ணா கண்டிப்பா சக்ஸஸ்தான்! தெரியுமா?

இந்தியாவுல இருந்துட்டு இதுகூட தெரியலனா நாமெல்லாம் ஆன்டி இன்டியன்ஸ்தான்!இந்தியாவுல இருந்துட்டு இதுகூட தெரியலனா நாமெல்லாம் ஆன்டி இன்டியன்ஸ்தான்!

ராஜராஜ சோழனின் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் அதிசயங்கள் தெரியுமா?ராஜராஜ சோழனின் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் அதிசயங்கள் தெரியுமா?

இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...இந்த ஊருக்கு மட்டும் அப்படி என்ன வரம்... தினமும் மழை பெய்யுதாம்...

இந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்!இந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X