Search
  • Follow NativePlanet
Share
» »அடுத்தடுத்து பலியான பதினோறு சிங்கங்கள்! அதிர்ச்சியில் விலங்கு ஆர்வலர்கள்! எங்கே தெரியுமா?

அடுத்தடுத்து பலியான பதினோறு சிங்கங்கள்! அதிர்ச்சியில் விலங்கு ஆர்வலர்கள்! எங்கே தெரியுமா?

அடுத்தடுத்து பலியான பதினோறு சிங்கங்கள்! அதிர்ச்சியில் விலங்கு ஆர்வலர்கள்! எங்கே தெரியுமா?

By Udhay

இந்தியாவிலேயே சிங்கங்கள் அதிகம் வாழும் ஒரு வனப்பகுதி கிர். கிர் வனப்பகுதியில் கடந்த 4 நாட்களில் 11 சிங்கங்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்த கிர் காடுகள் பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்...

கிர் தேசிய பூங்கா

கிர் தேசிய பூங்கா


கிர்னார் காட்டுக்கு அருகில் இருக்கிறது கிர் தேசிய பூங்கா. கிர்னார் மலைக்கு செல்லும் போது கரி காட்டினையும் சந்திப்பாக நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்த தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்ட காடாகவும் வன விலங்கின் சரணாலயமாகவும் விளங்குகிறது. இங்கே மட்டும் தான் ஆசிய சிங்கங்களை காணலாம்.

Jason Wharam

 பாதுகாக்கப்பட்ட காடுகள்

பாதுகாக்கப்பட்ட காடுகள்


அரிய வகை விலங்கினம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருவதால் ஆசியாவில் உள்ள பாதுகாக்கப்பட்ட காடுகளில் ஒன்றாக இது விளங்குகிறது. சுற்றுப்புறச் சூழல் அமைப்பு இங்கே பலவகைப்பட்டதாக திகழ்கிறது. ஹிரன், ஷெட்ருஞ்சி, டடர்டி, ஷின்கோடா, மச்சுன்றி, கோதாவரி மற்றும் ரவல் ஆகிய ஏழு நதிகள் இந்த காட்டில் ஓடுவதால், இதன் வளத்திற்கும் குறை இல்லை.

Vijayakumarblathur

 மற்ற விலங்குகள்

மற்ற விலங்குகள்

இங்கே ஆசிய சிங்கங்கள், காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள், நரிகள், புனுகுகள், இந்திய கீரிப்பிள்ளைகள் மற்றும் பாலைவன பூனைகளை பயணிகள் கண்டு ரசிக்கலாம். மானிட்டர் பல்லிகள், மார்ஷ் முதலைகள், இந்திய ஸ்டார் ஆமைகள் போன்ற அரிய வகை ஊர்வனதும் இங்கே உள்ளன.

Vijayakumarblathur

 நுழைவுக் கட்டணம்

நுழைவுக் கட்டணம்

நீங்கள் கிர் காடுகளுக்குள் சுற்றுலா செல்ல வேண்டும் என்று விரும்பினால், நுழைவுக் கட்டணம் செலுத்தவேண்டும்.

இந்தியர்களுக்கு 75ரூபாயும், வெளிநாட்டவருக்கு 100ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

வாகன சவாரிக்கு 35ரூபாய், புகைப்பட அனுமதிக்கு 100ரூபாய், 4 மணி நேர சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும்.

தனிப்பட்ட முறையில் உங்கள் குடும்பத்துக்கு ஒரு வாகனம் என்ற முறையில் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தி முழு காட்டையும் சுற்றி வரலாம்.

Tejas Mairal

நேரங்கள்

நேரங்கள்

இரண்டு நேர சவாரிக்கள் இருக்கின்றன

  • காலை நேர சவாரி
  • மாலை நேர சவாரி
  • காலை 6 மணிக்கு தொடங்கும் சவாரி, காலை 9 மணி வரை நடக்கும்.

    காலை 6 மணிக்கு தொடங்கும் சவாரி, நண்பகல் 12 மணி வரை நடக்கும்.

    மாலை 3 மணிக்கு தொடங்கும் சவாரி, மாலை 6 மணி வரை நடக்கும்.

    Dhaval Vargiya

     ஆசிய சிங்கங்கள்

    ஆசிய சிங்கங்கள்

    ஆசிய சிங்கங்கள் குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவை தவிர உலகத்தில் வேறு எங்கும் இனப்பெருக்கம் செய்யப்படவில்லை. இந்த சிங்கங்களை ஜுனகத்தின் நவாப் தான் பாதுகாக்க ஆரம்பித்தார் என்று நம்பப்படுகிறது. இவர் பாதுகாப்பை ஆரம்பித்த போது 13 சிங்கங்கள் இருந்தது என்றும் நம்பப்படுகிறது. ஆனால் அதற்கு பின் கிடைத்த ஆவணத்தின் படி இந்த கணக்கு மாறியிருக்கிறது.
    இந்த காட்டின் இயற்கை வசிப்பிடம் மற்றும் சுற்றுச் சூழலும் இந்த சிங்கங்களுக்கு பாதுகாப்பாக உள்ளது. இந்த காட்டின் பல பகுதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுவிட்டதால், இந்த பெரிய இந்திய பூனைகள் அழியும் அபாயத்தை அடைந்துள்ளன. மிருகங்களை பார்க்க விரும்புபவர்கள் இங்கே வந்து இவ்வகை அறிய சிங்கங்களை கண்டு ரசிக்கலாம்.

    Vijayakumarblathur

    மற்ற விலங்குகளுக்கும் இது சிறப்பான புகலிடம்

    மற்ற விலங்குகளுக்கும் இது சிறப்பான புகலிடம்


    குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்கா தான் ஆசிய சிங்கங்களின் வாழ்விடம் என்று அறியப்பட்டாலும், இங்கே வேறு சில விலங்குகளும் வாழ்கின்றன. காட்டுப் பூனைகள், இந்திய சிறுத்தை புலிகள், கரடிகள், வரிக் கழுதைப் புலிகள், இந்திய நல்ல பாம்புகள் போன்றவைகள் அவற்றில் சில. இங்கே பாலைவன பூனைகள் மற்றும் புள்ளிகள் நிறைந்த அறிய வகை பூனைகள் வாழ்ந்தாலும் அவைகளை அவ்வளவு சுலபத்தில் காண முடியாது. ரசெல்ஸ் வைபெர்ஸ், சா-ஸ்கேல்ட் வைபெர்ஸ் மற்றும் க்ரைட்ஸ் போன்ற வகையான பாம்புகளை இங்கே காணலாம். இங்கே அதிக அளவில் மார்ஷ் முதலைகள், ஸ்டார் ஆமைகள், லேசான ஓடுகளை கொண்ட ஆமைகள், மானிட்டர் பல்லிகள் மற்றும் இந்திய மலை பாம்புகளும் உள்ளன.

    Kalyaani Reddy

     பாணியா வனவிலங்கு சரணாலயம்

    பாணியா வனவிலங்கு சரணாலயம்


    பாணியா வனவிலங்கு சரணாலயம் என்பது கிர் தேசிய பூங்காவின் நீட்சியாகும். இந்த சரணாலயத்திற்கு வருகிறவர்கள் தேசிய பூங்காவில் இருந்து சுற்றித் திரியும் சிங்கங்களையும் சிறுத்தை புலிகளையும் காண நேரிடலாம். சஞ்சய்-பாணியா என்று அழைக்கப்படும் இந்த சரணாலயம், 1989-ஆம் வருடம் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இங்கேயும் ஆபத்தான பல வகை வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த வழியாக வண்டியில் செல்லும் போது சிங்கங்கள் சுற்றி திரிவதையும் மற்ற மிருங்கங்கள் தங்கள் உலகத்தில் உலாத்தி கொண்டிருப்பதையும் காணலாம்.

    Shailesh Raval

Read more about: travel forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X