Search
  • Follow NativePlanet
Share
» » கோருமரா தேசிய பூங்கா - வங்காளத்தின் அற்புதம்!

கோருமரா தேசிய பூங்கா - வங்காளத்தின் அற்புதம்!

மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்கு பகுதியில் ஹிமாலய மலையின் அடிவாரத்தில் அடர்ந்த வனம் மற்றும் உயரவளரும் புல்வெளிகளை உடைய தேராய் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது கோருமரா தேசிய பூங்கா என்னும் இயற்கை அற்புதம் நிறைந்த பகுதி.

 கோருமரா தேசிய பூங்கா - வங்காளத்தின் அற்புதம்!

இன்னும் வெளி உலகிற்கு அதிகம் தெரியாத பகுதியாகவே விளங்கும் இப்பூங்கா இந்திய காண்டாமிருகங்களின் வசிப்பிடமாக திகழ்கிறது. மத்திய சுற்றுச்சூழல் துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மிக அழகானதென 2009ஆம் ஆண்டு இந்த பூங்காவினை அறிவித்தது மற்றுமொரு சிறப்பாகும். வாருங்கள் இந்த கோருமரா தேசிய பூங்காவை பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.

பழமையான பூங்கா:

Photo: Jonoikobangali

மேற்கு வங்காள மாநிலத்தில் ஜல்பைகுரி மாநிலத்தில் 80 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பூங்காவானது 1895ஆம் ஆண்டே பிரிட்டிஷ் அரசால் பாதுக்கக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 1949ஆம் ஆண்டு வனவிலங்கு சரணாலயமாக மாற்றப்பட்டு 1994ஆம் ஆண்டு இந்திய காண்டா மிருகங்கள் அழிந்து வரும் உயிரினமாக ஆனதை கருத்தில் கொண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டது.

பூங்காவினுள் வாழும் உயிரினங்கள்:

Photo: Indrajit Chakraborty

மிகவும் இயற்கை செறிவுள்ள ஹிமால மலைப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பூங்காவினுள் 193 வகை பறவைகள், 22 வகை ஊர்வன, 7 வகையான ஆமைகள் வாழ்கின்றன.

மேலும் ஆசிய யானைகள், இந்திய காண்டா மிருகங்கள், கரடி, புள்ளிமான்கள், சிறுத்தைகள் மற்றும் சாம்பார் மான்கள் போன்ற பாலுட்டி வகைகளும் இங்கு இருக்கின்றன.

எப்படி சுற்றிப்பார்க்கலாம் இந்த பூங்காவை:

Photo: Tanmoy Bhaduri

மற்ற தேசிய பூங்காக்களில் இருப்பது போன்று இதனுள் வாகனங்களிலோ அல்லது யானையின் மீது அமர்ந்தோ சபாரி செய்யும் வசதி இங்கு இல்லை. மாறாக குறிப்பிட்ட இடங்களில் காட்சி கோபுரங்கள் (Watch Towers) அமைந்துள்ளது. அங்கிருந்தபடி பைனாக்குலர் உதவியுடன் வன விலங்குகளை பார்த்து மகிழலாம்.

சுக்-சுகி பறவை காணும் கோபுரம், சந்த்ரசுர் காட்சி கோபுரம், ஜாத்ரப்ரசாத் காட்சி கோபுரம் போன்றவை இதனுள் இருக்கும் சில பிரபலமான காட்சி கோபுரங்கள் ஆகும்.

எப்போது செல்லலாம்:

Photo: Mithun Kundu

ஜூன் 16 முதல் செப்டம்பர் 15 வரை மழைகாலத்தில் இப்பூங்கா மூடப்படுகிறது. இந்த பூங்காவிற்கு செல்ல நவம்பர் முதல் செப்டம்பர் வரையிலான காலம் உகந்ததாகும்.

இந்த பூங்காவிற்கு சென்று விட்டு அப்படியே புத்துரம் பழங்குடிகள் கிராமத்திற்கு சென்று அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்க வழக்கம், விவசாய முறை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.

எங்கு தங்குவது:

Photo: Jonoikobangali

இந்த பூங்காவினுள் நாம் தங்க வேண்டுமானால் பிரிட்டிஷ் காலத்தில் மரத்தினால் கட்டப்பட்ட விடுதி ஒன்று மட்டுமே உள்ளது. இங்குன் தங்குவது அவ்வளவு வசதியானது இல்லை என்பதால் கோருமரா தேசிய பூங்கா மற்றும் மூர்த்தி ஆற்றுக்கு பக்கத்தில் இருக்கும் துப்ஜோஹ்ரா என்னும் இடத்தில் நான்கு நட்சத்திர விடுதி ஒன்று இருக்கிறது. வனத்தின் மத்தியில் இங்கு தாங்கியபடி ஓர் இரவை கழிப்பது சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும்.

எப்படி அடையலாம்?:

விமானம் மூலம் எனில் ஜல்பைகுரி மாவட்டத்தில் பாக்டோக்ரா விமான நிலையம் அமைந்திருக்கிறது. அங்கிருந்து பூங்காவை வாடகை கார் மூலம் அடையலாம். தேசிய நெடுஞ்சாலை 31இல் சிலிகுரி - கவ்ஹாதிக்கு இடையில் லதகுரி என்ற இடத்தில் இருந்து இந்த பூங்கா விற்கான பாதை ஆரம்பிக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X