Search
  • Follow NativePlanet
Share
» »ஹஃப்லொங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹஃப்லொங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹஃப்லொங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹஃப்லொங்கை பற்றி விவரிக்க வேண்டும் எனில் கீழ் கண்ட வாக்கியம் சரியாக இருக்கும். அசாம் மாநிலத்தில் உள்ள மனதை மயக்கும் ஒரே மலைவாசஸ்தலம் ஹஃப்லொங் மட்டுமே!. ஆகவே இது 'கிழக்கு சுவிஸ்ஸர்லாந்து ' என செல்லமாக அழைக்கப்படுகிறது. ஹஃப்லொங்கில் பனி மூடிய சிகரங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது அழகில் சுவிஸ்ஸர்லாந்திற்கு இணையாகக் கருதப்படுகிறது. ஹஃப்லொங், வட சச்சார் மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. மேலும் இது புகழ்பெற்ற பாரக் பள்ளத்தாக்கிற்கு மிக நெருக்கமாக அமையப்பெற்றிருக்கிறது.

ஹஃப்லொங் சுற்றுலா அருகிலுள்ள நகரங்கள் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள மக்களின் கோடை காலத்தை செலவிட சிறந்த இடமாக இருப்பதால் இந்த இடம் அந்தப் பருவத்தில் உயிர்ப்புடன் உள்ளது.

ஹஃப்லொங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Thoiba Paonam

ஹஃப்லொங் உருண்டோடும் மலைகளின் மத்தியில் அமைந்துள்ளது. சுமார் 513 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஹஃப்லொங் குளிர்ந்த அழகிய மற்றும் மிகச் சிறந்த மலைவாசஸ்தலமாக உள்ளது.

இங்கு பாய்ந்து ஓடும் நீர்வீழ்ச்சி, ஆபத்தான நீரோடைகள், ஏராளமான பசுமைகள், இந்த இடத்தை சுற்றி அமைந்துள்ளதால் இங்கு சுற்றுலா வரும் பயணிகள் இந்த சுற்றுலாவை என்றும் மறக்க முடியாது. ஹஃப்லொங் 'வெள்ளை எறும்பு மலை' என்றும் அழைக்கப்படுகிறது.

ஹஃப்லொங்கில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்கள்

நீங்கள் ஹஃப்லொங்கில் இருக்கும் பொழுது வெறுமனே அழகிய மலைகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதே உங்கள் மனதிற்கு இதம் அளிக்கும். எ

னினும், ஹஃப்லொங் சுற்றுலாவில் ஹஃப்லொங் ஏரி மிக முக்கிய இடம் வகிக்கிறது. மனதை மயக்கும் இந்த ஏரியின் அழகிய காட்சியானது உங்களை மெய் மறக்கச் செய்யும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் அருகிலுள்ள மைபோங்கிற்கு செல்லலாம். மைபோங்க் பண்டைய டிமாச கச்சரி அரசர்களின் தலைநகராக விளங்கியது.

ஹஃப்லொங் பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

Sunayana29

ஹஃப்லொங்கை எவ்வாறு சென்றடைவது?

ஹஃப்லொங் அசாமின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான சில்சாரில் இருந்து சுமார் 106 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சில்சாரில் இருந்து ஹஃப்லொங்கை அடைய உதவும் முக்கிய சாலை மிகவும் நல்ல நிலையில் உள்ளது.

மேலும் சில்சாரில் இருந்து ஹஃப்லொங்கை சாலை மார்க்கமாக அடைய இரண்டு மணி நேரம் ஆகும். சில்சார் நாட்டின் ஏனைய பகுதிகளுடன் விமானம் மற்றும் ரயில் மூலம் நன்றாக இணைக்கப்படுள்ளது.

ஹஃப்லொங் வானிலை

ஹஃப்லொங் ஒரு ஈரமான துணை வெப்பமண்டல காலநிலையைப் பெற்றிருக்கிறது. ஹஃப்லொங்கின் கோடைகாலம் இனிமையானது எனினும் கோடையில் சிறிய அளவில் வெப்பம் நிலவுகிறது. குளிர்காலத்தில் அதிக குளிர் இருக்கும். பருவமழை இந்த மலைவாசஸ்தலத்திற்கு கனிசமான மழையை கொண்டு வருகிறது.

ஹஃப்லொங் ஏரி நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரி, ஹஃப்லொங் நகரத்திற்கு பெருமை சேர்க்கிறது. ஹஃப்லொங்கிற்கு சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த ஏரியை தவறவிடக் கூடாது. இந்த ஏரி அசாம் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய இயற்கை நீர் நிலைகளில் ஒன்றாகும். ஆகவே இது 'அஸ்ஸாமின் ஸ்காட்லாந்து' என்று குறிப்பிடப்படுகிறது.

ஹஃப்லொங் ஏரி இங்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு படகுச் சவாரி வசதிகளை வழங்குகிறது. இங்கு படகுச் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள், இந்த ஏரியை சுற்றியுள்ள அழகிய மலைக் காட்சிகளை கண்டு மகிழலாம். ஹஃப்லொங் நகரம் இன்றும் மாசடையாமல் உள்ளதால், இங்கு படகுச் சவாரி செய்யும் பயணிகள் தெளிந்த வானம் மற்றும் அழகிய தொடுவானம் போன்றவற்றை கண்டு மகிழலாம்.

ஹஃப்லொங் ஏரி இந்த மலைவாசஸ்தலத்தின் மையத்தில் அமைந்துள்ளது. எனவே மலைவாசஸ்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து, தங்களுடைய விடுமுறைய கழிக்க விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு இது ஒரு சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சில நாட்கள் தங்கியிருந்து தங்களுடைய நாட்களை இனிமையாக கழிக்கலாம்.

Read more about: assam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X