Search
  • Follow NativePlanet
Share
» »ஹாஜோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹாஜோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

ஹாஜோ சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

அசாம் மாநிலத்தின் முக்கியமான ஆன்மீக நகரம் ஹாஜோ. இந்து சமயம், பௌத்தம், இஸ்லாம் ஆகிய மூன்று சமயங்களின் கலவையாக திகழ்கிறது ஹாஜோ நகரம். இந்தக் கலவை தான் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்து வருகிறது. இங்கு பல்வேறு இந்துக் கடவுளர்களின் கோவில்கள், பௌத்த கோவில்கள் மற்றும் இஸ்லாமியத் துறவிகளின் தர்காக்கள் என பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.

எளிமையான பயணம்

எளிமையான பயணம்

அசாம் தலைநகர் குவஹாத்திக்கு அருகில் இருப்பதால், ஹாஜோ நகருக்கு எளிதில் செல்ல முடியும். அசாம் மாநிலம், கம்ருப் மாவட்டத்தில், பிரம்மபுத்ரா ஆற்றங்கரையில் அழகிய சிறிய நகரமாக ஹாஜோ காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஹாஜோவின் வரலாறு குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

Gaurav M Kumar

புத்தர் இங்கு தான் முக்தி

புத்தர் இங்கு தான் முக்தி

கொச் சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஹாஜோ திகழ்ந்ததாகவும், பிறகு இந்த நகரம் முகலாயர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததாகவும் கூறுகின்றனர். பல நூற்றாண்டுகளாக, பல பெயர்களைத் தாங்கி வந்திருக்கிறது ஹாஜோ. 11 ஆம் நூற்றாண்டில் அபூர்ணபவா மற்றும் மணிகுடா என்றும், 18 ஆம் நூற்றாண்டில் மணிகுட்கிரம் என்றும் ஹாஜோ நகரம் அழைக்கப்பட்டிருக்கிறது.
புத்தர் இங்கு தான் முக்தி அடைந்தார் என்கின்றனர் பௌத்தர்கள்.

wikipedia

ஹாஜோவை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஹாஜோவை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

ஹயாக்ரிவ மாதவ கோவில், ஹாஜோ நகரின் மிக முக்கியமான திருக்கோவிலாகும். இது ஒரு விஷ்ணு கோவில் ஆகும். ஹாஜோ நகரில் இருக்கும் போவா மெக்கா என்ற மசூதிக்கு இஸ்லாமியர்கள் சென்று மரியாதை செலுத்துகின்றனர். மேலும், கணேஷ் கோவில், கேதாரேஷ்வரர் கோவில், காமேஸ்வரி கோவில், தோபார்குரி சத்ரா மற்றும் ஜாய் துர்கா கோவில் என பல கோவில்கள் இங்கு உள்ளன. இவை அனைத்தும் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது.

anas shaikh

ஹாஜோவை அடைவது எப்படி?

ஹாஜோவை அடைவது எப்படி?

அசாம் தலைநகரம் குவஹாத்தியில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது ஹாஜோ. குவஹாத்தியில் இருந்து பல்வேறு பேருந்துகள் ஹாஜோ நகருக்கு இயக்கப்படுகின்றன.

ஹாஜோவின் வானிலை

ஹாஜோவில், கோடைக்காலத்தில் புழுக்கத்துடன் கூடிய கடுமையான வெயில் இருக்கும். குளிர்காலத்தில் வெப்பம் குறைந்து இதமாக இருக்கும். சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள குளிர்காலம் மிகவும் சிறந்ததாக இருக்கும்.


Christopher J. Fynn

Read more about: assam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X