Search
  • Follow NativePlanet
Share
» »அழிந்து போன இந்தியாவின் மிக உன்னத நகரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

அழிந்து போன இந்தியாவின் மிக உன்னத நகரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

By Staff

இந்தியாவின் பழமையான வரலாற்று பக்கங்களை புரட்டும் போது பல அதிர்ச்சிகரமான தகவல்களை நாம் காண நேரிடும். நவீன யுகத்தில் பல விஷயங்களில் இந்தியா பின்தங்கியிருந்தாலும் ஆங்கிலேயரிடம் அடிமைப்படுவதற்கு முன்பு வரை உலகின் மிக உன்னதமான நாடாக இந்தியா திகழ்ந்திருக்கிறது. அறிவியல், கணிதம், வான சாஸ்திரம், மருத்துவம் போன்ற விஷயங்களில் உலகுக்கே முன்னோடியாக இருந்திருக்கிறது.

அறிவுசார் விஷயங்களில் சிறந்து விளங்கியதோடு மட்டுமில்லாமல் ரோம், கிரேக்கம் போன்ற ஐரோப்பிய நாடுகளுடன் கப்பல் வழி வாணிபமும் மேற்கொண்டு செல்வசெழிப்பு மிக்க இடமாகவும் இந்தியா இருந்திருக்கிறது. அப்படி இந்திய வரலாற்றில் மிகச்சிறந்ததொரு நகரமாக இருந்து இன்று அழிந்த நிலையில் இருக்கும் ஒரு நகரப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஹம்பி :

ஹம்பி :

கர்நாடக மாநிலத்தில் இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய ஹிந்து சாம்ராஜ்யமான விஜயநகர பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தில் அமைந்திருந்த மிகச்செழிப்பான நகரம் தான் ஹம்பி ஆகும்.

Photo:Roehan Rengadurai

ஹம்பி :

ஹம்பி :

14-15ஆம் நூற்றாண்டுகளில் இந்த நகரத்தின் வளமான காலகட்டத்தில் இங்கு மட்டுமே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்திருக்கின்றனர். அது அன்றைய காலகட்டத்தில்மொத்த உலக மக்கள் தொகையில் 0.1% ஆகும்.

Photo:Dietmut Teijgeman-Hansen

ஹம்பி :

ஹம்பி :

மேலும் சீனாவில் உள்ள பெய்ஜிங் நகருக்கு அடுத்து அப்போதைய உலகின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகவும்,பாரிஸ் நகரை காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இந்த ஹம்பி நகரம் இருந்துள்ளது.

Photo:Evgeni Zotov

ஹம்பி :

ஹம்பி :

பம்ப சத்திரம் என்று முதன்முதலில் அழைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் பம்ப என்பது ஹம்பே_வாக மருவி இப்போது ஹம்பி என்று இந்த நகரம் விளிக்கப்படுகிறது.

Photo:Aasif Iqbal J

ஹம்பி :

ஹம்பி :

ஒரு பக்கம் துங்கபத்திரை நதியாலும் மற்ற மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் பாதுகாப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம் கருதி விஜயநகர அரசர்களால் இந்த ஹம்பி நகரம் தலைநகராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கலாம் என
கூறப்படுகிறது.

Photo:Vijay Bandari

ஹம்பி :

ஹம்பி :

துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரமானது கர்நாடகமாநில தலைநகரான பெங்களுருவில் இருந்து 353 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

இந்த நகரை போன்றே துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்திருக்கும் மற்றுமொரு இடமான மந்தாரலயம் ஹம்பியில் இருந்து 150 கி.மீ தொலைவில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கிறது.

Photo:Jean-Pierre Dalbéra

விருபக்ஷா கோயில் :

விருபக்ஷா கோயில் :

சிதலமடைந்து இருக்கும் இந்த ஹம்பி நகரில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இடங்களில் ஒன்று 'விருபக்ஷா' கோயிலாகும். இந்த கோயிலுக்கு இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விஜயநகர சாம்ராஜியத்தின் கட்டிடக்கலை வல்லமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது.

Photo:premasagar

விருபக்ஷா கோயில் :

விருபக்ஷா கோயில் :

இந்த விருபக்ஷா கோயிலில் சிவ பெருமான் விருபாக்ஷ தேவராக அருள் பாலிக்கிறார். வரலாற்று ஆய்வுகளின்படி இந்த
கோயிலானது 7ஆம் நூற்றாண்டில் இருந்தே இங்கே இருந்திருக்கிறது என்றும் ஹோசல்யர்கள் மற்றும் சாளுக்கியர்கள் காலத்தில் சிறிய கோயிலாக இருந்து பின்னர் விஜயநகர பேரரசர்களின் காலத்தில் தற்போதிருக்கும் பிரமாண்ட கோயிலாக கட்டப்பட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

Photo:Jean-Pierre Dalbéra

விருபக்ஷா கோயில் :

விருபக்ஷா கோயில் :

1565ஆம் ஆண்டு இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பினால் இந்த சாம்ராஜ்யம் அழிந்து போனாலும் நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் பக்தர்களின் மனதில் நீங்கா இடம் கொண்டிருக்கிறது.

இந்த கோயிலில் இருக்கும் ஒரு அதிசயத்தை பற்றி தெரிந்துகொள்ள அடுத்த பக்கத்துக்கு வாருங்கள்.

Photo:Marmontel

கல்லினால் ஆன தேர் :

கல்லினால் ஆன தேர் :

இந்த கோயிலில் இருக்கும் கட்டிக்கலை அதிசயங்களில் முதன்மையானது இங்குள்ள முழுக்க முழுக்க கல்லினால் செய்யப்பட்ட தேர் ஆகும். ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் என்ற விஷ்ணு கோயிலில் அமைந்திருக்கும் இந்த தேர் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Photo:Venkataramesh Kommoju

கல்லினால் ஆன தேர் :

கல்லினால் ஆன தேர் :

இது போன்று கல்லினால் ஆன தேர் இந்தியாவில் மொத்தம் மூன்றே மூன்று தான் இருக்கிறது. மகாபலிபுரத்தில் உள்ள கடற்கரை கோயிலிலும், ஓடிஸா மாநிலத்தில் உள்ள கோனார்க் சூரிய கோயிலிலும் இது போன்ற தேர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo:Arian Zwegers

தூண்கள் !! :

தூண்கள் !! :

கற் தேருக்கு அடுத்தபடியாக இந்த கோயிலில் இருக்கும் சிறப்பம்சம் இங்குள்ள தூண்கள் தான். இந்த கோயில் மண்டபத்தில் உள்ள தூண்களை பார்க்கும் போதுஇவையெல்லாம் களிமண்ணினால் செய்யப்பட்டதா என்று வியப்பில் ஆழ்த்தும் வகையில் அத்தனை நுணுக்கமாக கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.

Photo:Jean-Pierre Dalbéra

ஹம்பி :

ஹம்பி :

மின் விளக்குகளின் வெளிச்சத்தில் ஒளிரும் அதிசய தூண்கள்.

Photo:Aparajith Bharathiyan

ஹம்பி :

ஹம்பி :

இந்தியாவில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட நகரங்களிலேயே மிகச்சிறந்த ஒன்றான இந்த ஹம்பி நகரம் 1565இல் முற்றுகையிடப்பட்டு இஸ்லாமிய அரசர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு இன்றுவரை நூற்றாண்டுகள் கடந்தும் அதன் பழைய பெருமையை மீட்டேடுக்கவேயில்லை. ஹம்பி நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

photo:Sissssou

ஹம்பி :

ஹம்பி :

ஹம்பியில் இருக்கும் பாத லிங்கேஸ்வரர் கோயில்லிங்கம். இக்கோயிலும் ஹம்பியில் இருக்கும் முக்கியமான கோயில்களுள் ஒன்றாக கருதப்படுகிறது.

Photo:V.Vasant

Read more about: historic places karnataka hampi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X