Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் - சீக்கியர்களின் பொற்கோயில்!!!

ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் - சீக்கியர்களின் பொற்கோயில்!!!

By

பஞ்சாப் மாநிலத்தின் அம்ரித்ஸர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் என்று அழைக்கப்படும் இந்த தங்கக்கோயில் நாட்டிலுள்ள முக்கியமான ஆன்மீக வழிபாட்டுத்தலங்களில் ஒன்றாகவும், சீக்கிய மதப்பிரிவின் அடையாளச்சின்னமாகவும் புகழுடன் அறியப்படுகிறது.

19-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தக் கோயிலின் மேல்தளப்பகுதியை 400 கிலோ எடையுள்ள தங்கத்தகடுகளால் போர்த்தினார். அதற்குபிறகு இது தங்கக்கோயில் என்றழைக்கப்பட்டு வருகிறது.

பெயரும், வரலாறும்!

பெயரும், வரலாறும்!

1577-ஆம் ஆண்டு இப்பகுதியில் சீக்கியர்களின் நான்காவது குருவான குரு ராம் தாஸ், ஒரு குளத்தை தோண்டினார். ''அழியா தேன் குளம்'' என்ற அர்த்தத்தில் அம்ரித்ஸர் என்று அழைக்கப்படும் இந்தக் குளத்தின் நடுவே பிற்காலத்தில் கட்டப்பட்ட சீக்கிய குருத்வாராத்தான் ஹர்மந்திர் சாஹிப் ஆகும். ஹர்மந்திர் சாஹிப் என்றால் 'கடவுளின் இல்லம்' என்று பொருள். பின்னர் 1604-ஆம் ஆண்டில் குரு அர்ஜுன், சீக்கிய புனித நூலான ஆதி கிரந்தத்தை முடித்து குருத்வாராவில் அதை நிறுவினார்.

படம் : Ken Wieland

சீக்கிய கொள்கையால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமியர்!!!

சீக்கிய கொள்கையால் ஈர்க்கப்பட்ட இஸ்லாமியர்!!!

ஹர்மந்திர் சாஹிப் அருகாமையில் உள்ள கோயிந்தவால் என்ற பகுதிக்கு வந்த மொகலாய பேரரசர் அக்பர், மூன்றாவது சீக்கிய குரு, குரு அமர் தாஸின் வாழ்க்கை வழிமுறையால் ஈர்க்கப்பட்டு சாகிர் (நிலம் மற்றும் பல கிராமங்களின் வருவாய்) கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

படம் : Rakshakdua

மத நல்லிணக்கம்

மத நல்லிணக்கம்

ஹர்மந்திர் சாஹிப்புக்குள் நுழைய சகோதரத்துவம் மற்றும் சமத்துவம் போன்ற கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் நான்கு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது அனைத்து மக்கள் மற்றும் சமயங்களின் மீதான சீக்கியர்களின் வெளிப்படைத்தன்மையை பறைசாற்றும் சின்னமாக கருதப்படுகிறது. இங்கு ஜாதி மத பேதமின்றி அனைத்து மக்களும் வந்து வழிபடலாம்.

படம் : Sean Ellis

கட்டடக்கலை

கட்டடக்கலை

சீக்கிய குருத்வாராக்கள் பொதுவாக உயர் நிலப்பகுதியில் கட்டப்படுவது வழக்கம். ஆனால் இந்த தங்கக்கோயிலோ அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதியை விட குறைந்த உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் அதனுள் நுழைய கீழே படிகள் இறங்கி போக வேண்டும்.

படம் : Giridhar Appaji Nag Y

அம்ரித் சரோவர்

அம்ரித் சரோவர்

சலவைக்கல்லால் ஆன இரண்டு அடுக்கு அமைப்பை கொண்டுள்ள இந்த குருத்வாராவை சுற்றி அம்ரித் சரோவர் எனும் புனித தீர்த்தக்குளம் அமைந்திருக்கிறது. ‘அம்ரித்' எனும் சொல் அமிர்தத்தை குறிப்பிடுகிறது.

படம் : Apsk121

தீபாவளி

தீபாவளி

தீபாவளி கொண்டாடத்தின் போது ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப்.

நுழைவாயில்

நுழைவாயில்

ஹர்மந்திர் சாஹிப் குருத்துவராவின் நுழைவாயில்.

படம் : Guilhem Vellut

அகால் தக்த்

அகால் தக்த்

'காலமில்லாதவரின் அரியணை' என்று பொருள்படும் அகால் தக்த், ஹர்மந்திர் சாஹிப் வளாகத்திலேயே அமைந்துள்ளது. இது சீக்கிய சமயத்தின் ஐந்து தக்துகளில் (அரியணைகளில்) ஒன்றாகும். நீதி வழங்கலுக்காகவும், அரச விவகாரங்களுக்காகவும் அகால் தக்த்தை குரு அர்கோபிந்த் கட்டினார்.

படம்

அரியணையும், குருத்துவாராவும்!

அரியணையும், குருத்துவாராவும்!

அகால் தக்த்தும், ஹர்மந்திர் சாஹிபும் அருகருகே அமைந்துள்ள காட்சி.

படம் : Jasleen Kaur

உட்புறத் தோற்றம்

உட்புறத் தோற்றம்

அகால் தக்த்தின் உட்புறத் தோற்றம்.

படம் : Navroop Sehmi

தங்க மீன்கள்!

தங்க மீன்கள்!

தங்கக்கோயிலின் அம்ரித் சரோவர் குளத்தில் வளர்க்கப்படும் தங்க மீன்கள்.

படம் : Manuspanicker

செல்லும் வழி

செல்லும் வழி

குருத்வாரா செல்லும் வழி.

படம் : Ken Wieland

வடக்கு வாயில்

வடக்கு வாயில்

ஹர்மந்திர் சாஹிப்பின் வடக்கு வாயில்.

படம் : Vrlobo888

மேற்சுவர்

மேற்சுவர்

தங்கம் மற்றும் விலையுயர்ந்த கற்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் குருத்வாராவின் மேற்சுவர்.

படம் : SM14

மேற்கு வாயில்

மேற்கு வாயில்

ஹர்மந்திர் சாஹிப்பின் மேற்கு வாயில்.

படம் : Amarpreet.singh.in

புனித மரங்கள்

புனித மரங்கள்

ஹர்மந்திர் சாஹிப்பில் மொத்தம் 3 புனித மரங்கள் அமைந்துள்ளன.

படம் : Mandeep Singh

பக்தர்கள்

பக்தர்கள்

குருத்வாராவுக்கு திரள் திரளாக வரும் பக்தர்கள்.

படம் : Satbir 4

நிஹாங்

நிஹாங்

அகாலி எனவும் அழைக்கப்படும் சீக்கிய நிஹாங்.

படம்

புனித ஸ்நானம்

புனித ஸ்நானம்

அம்ரித் சரோவரில் புனித ஸ்நானம் செய்யும் பக்தர்கள்.

படம் : Koshy Koshy

அம்ரித்ஸரை எப்படி அடையலாம்?

அம்ரித்ஸரை எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

படம் : Paulrudd

Read more about: ஆன்மிகம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X