Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க! ஏன்னா?

பெங்களூரு போனா இந்த இடங்களுக்கு மட்டும் போய்டாதீங்க! ஏன்னா?

பெங்களூர்ல நிறைய இடங்கள்ல பேய்கள் உலாவுதுனு சொன்னா நம்பமாட்டீங்கதானே. பெங்களூருக்கு புதுசா வந்தவங்கனாலும் சரி, சுற்றுலாவுக்காக பெங்களூர் வந்தவங்களும் சரி இந்த இடங்களுக்கு போகும்போது பாத்து போங்க ஏன்னா

By Udhaya

பெங்களூர்ல நிறைய இடங்கள்ல பேய்கள் உலாவுதுனு சொன்னா நம்பமாட்டீங்கதானே. பெங்களூருக்கு புதுசா வந்தவங்கனாலும் சரி, சுற்றுலாவுக்காக பெங்களூர் வந்தவங்களும் சரி இந்த இடங்களுக்கு போகும்போது பாத்து போங்க ஏன்னா.. இங்கெல்லாம் பேய் இருக்குதுங்க...

 கல்பல்லி சிமெட்ரி

கல்பல்லி சிமெட்ரி

கல்பள்ளி அப்படிங்குற கல்லறைத் தோட்டம் பெங்களூரு பழைய சென்னை சாலையில இருக்கு. இந்த இடத்துல ஒரு பக்கம் சாதாரணமா வெளிச்சமா இருந்தாலும், இந்த கல்லறைத் தோட்டத்த நெருங்க நெருங்க கொஞ்சம் கொஞ்சமா பேய் பயம் உங்கள ஆட்கொள்ளும். அதற்கு காரணம் இங்க இருக்குற அமைதிதான்.

வழக்கமா சினிமாக்கள்ல காமிக்குற அமைதியான ஒரு சத்தம் இந்த பகுதியில அதிகமா இருக்கும். காத்து அடிக்குற சத்தம்கூட நம்மள பயமுறுத்தும்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட இந்த வழியா நடந்து போன ஒருத்தரு ஒரு சத்தத்த கேட்டு பக்கத்துல போயி பாத்துருக்காரு. அங்க அலறிட்டே ஒரு பெண் ஓடுனதாகவும், அப்றம் அது மறஞ்சிட்டதாகவும் சொல்லிருக்காரு.

இந்த பகுதி ஏற்கனவே கல்லறைகள் நிறஞ்சி இருக்குறனால நமக்கு இரவு நேரங்கள்ல இந்த பக்கம் போனாலே திகில்லா இருக்குங்குறது ஒரு விசயம். அதே நேரம் இந்த இடத்துக்கு தனியா போய் வரலாம் நான் தைரிய சாலினு கெளம்பி போனீங்க.. உயிருக்கு உத்திரவாதம் இல்லை சொல்லிட்டேன்.
jeet_sen

விக்டோரியா மருத்துவமனை

விக்டோரியா மருத்துவமனை

நூறு வருசம் பழமையான ஒரு மருத்துவமனை பெங்களூர்ல இருக்கு. பெங்களூர் சிட்டி மார்க்கெட் பக்கத்துல இருக்குற விக்டோரியா மருத்துவமனைதான் அது. இந்த மருத்துவமனையில அடிக்கடி பேய் நடமாட்டம் இருக்குறதா கேள்வி. வாய்வழி செய்திகள் இருந்தாலும் இத நம்புறதுக்காக உங்களுக்கு ஒரு தகவல சொல்றோம்.

இந்த மருத்துவமனை மாடியில இருந்து ஒரு வெள்ளை நிற கவுன் அணிஞ்ச பெண் ஒருத்தரு குதிக்குறதாகவும், அந்த பெண் குதிக்குறத பாத்து பதறிப்போயி அங்க வேகமா ஓடி போயி பாத்தா யாரும் இல்லாம காத்துல அந்த உருவம் மறஞ்சிடதாகவும் நிறைய பேரு சொல்லிருக்காங்க.

சிலர் ஒரு உறுதிப் படுத்தப்படாத கதையையும் சொல்றாங்க. இந்த ஹாஸ்பிட்டல்ல வேல செஞ்ச ஒரு நர்ஸ் இங்க இருந்து குதிச்சி இறந்துட்டதாவும், அவங்கதான் ஆவியா சுத்துறதாகவும் கதை நீளுது.

wiki

நாளைக்கு வா

நாளைக்கு வா

என்னடா இப்படி ஒரு தலைப்புனு பாக்கலாம். யார நாளைக்கு வர சொல்றீங்கனும் கேட்கலாம். அது பேய சொன்னோமுங்க.. என்னது பேயா.. அப்டினு பம்மாதீங்க.. அட பயப்படாதீங்க.. பக்கத்துல வாங்க.. பேய் அடிக்கல்லாம் செய்யாது.. நாளைக்கு வானு சொன்னா போய்டும்.

என்ன இது லூசுப் பேயா இருக்கும்போலியே..

இந்த பேய் வந்து உங்க கதவ தட்டும்.. டக் டக் டக் னு.. அப்ப பாத்து கதவ திறந்துட்டீங்கனு வைங்க அவ்ளோதான்.. உங்கள புடிச்சிட்டு போய்டும்னு சின்ன வயசுல நிறைய கதைகள் கேட்டுட்டு இருப்பீங்க..

பெயர் குறிப்பிடப்படாத ஒரு குறிப்பிட்ட இடத்துல இருக்குற குடியிருப்புல தினமும் இப்படியான பேய் வந்து கதவ தட்டுதான். இதுக்கு காரணம் இந்த குடியிருப்புக்கு பக்கத்துலேயே நிறைய கல்லறைகள் அடங்கிய சுடு இடுகாடுகள் இருக்குறதுதான்.

இங்க வர்ற பேய்கள் அப்படியே சின்ன குழந்தை மாதிரி பேசி தண்ணி கேக்குமாம். அட தண்ணி தானனு கதவ தொறந்தீங்க.... அவ்ளோதான் கழுத்து சங்க கடிச்சி கதற விட்ரும்.

 விமான நிலைய சாலை

விமான நிலைய சாலை

என்னது ஏர்போர்ட்ல பேயா..னு கேட்கறீங்களா.. ஆமா நிசம்மா பேய்தான். ஏர்போட் ரோட்ல மின்னல் வேகத்துல கார்களும், வண்டிகளும் பறக்கும் பாத்துருக்கீங்களா.. ஏர்போட்டுக்கு கரக்ட்டா ஒரு கிமீ முன்னாடி, ஒரு இடம் சுத்தியும் இருட்டா இருக்கும். அங்க போகுற வண்டிகள் எதையுமே கவனிக்காம போய்ட்டுருக்கும். ஆனா கொஞ்சம் சைட்ல கவனிச்சீங்கன்னா தூரத்துல கொஞ்சம் அசாதாரணமான ஏதோ அசைவுகள் கண்ணுல படும்னு நம்மள பயமுறுத்துறாரு இந்த இடத்துக்கு போய்ட்டு வந்த ஒருத்தரு. அட இதுலாம் சும்மானு சொல்லி முடிக்குறதுக்குள்ள, அத பாத்துட்டு வண்டிய ஸ்டார்ட் பண்ணிட்டு போனா உங்க வண்டிக்கு முன்னாடி சட்டார்னு வந்து நிக்கும்னாரு.. கொஞ்சம் பீதிய கெளப்பித்தான் விட்டாரு..

இதே மாதிரி ஒரு நிகழ்வு ஏர்போட்ல விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்குற இடங்கள்லயும் நிகழ்ந்துச்சாம். அதாவது பிளைட் கிளம்புற நேரத்துல கரக்ட்டா ஒரு பெண் ரன்வேல ஓடிச்சாம். அத பாத்துட்டு விமான காப்பாளர்கள் வர்றதுக்குள்ள சர்ர்ர்னு மறஞ்சிடிச்சாம்.

vermin-jr

தெர்ரா விரா

தெர்ரா விரா

புனித மார்க் சாலையில் இதுபோன்றதொரு அனுபவம் நிகழ்ந்துள்ளது. இங்க இருக்குற சில வீடுகள பாத்தாலே இது பேய் வீடு செட்டுக்காக கட்டி பாதில விட்டதுபோல இருக்கும். ஆனா இதெல்லாம் பழைய வீடுங்க.. இங்க பேய் இருக்கும்னு சொல்லி இந்த பக்கமா போறவங்க பேசிட்டே போவாங்க..

ஆனா பெருசா யாரு இந்த காலத்துல பேயெல்லாம் நம்புவானு சொல்லிட்டு ஒருத்தரு இந்த வீட்டுக்கு போயிருக்காரு... ஆனா அவரு திரும்பி வரவே இல்லியாம். போயி பாத்தா அவரு தற்கொலை பண்ணிருந்தாராம். ஆனா பாருங்க.. இவரு கயிறும் கொண்டு போகல, பக்கத்துல விஸ்கி பாட்டில் ஒன்னும் இருந்துருக்கு.. ரெட்டை தூக்குல தொங்கிட்டு இருந்த இவரோட தொண்டைக்குழி உடையவே இல்ல.. இப்படி ஒருத்தரு நம்மகிட்ட சொன்னாரு.

அந்த நபரே இன்னொரு கதையும் சொன்னாரு., 2002ம் வருசம் இதே வீட்ல அக்கா தங்கச்சி ரெண்டு பேரு தூக்கு போட்டுட்டு செத்து போய்ட்டாங்கனு. இதெல்லாம் உள்ளூர் கதைனாலும், இத நம்ப நம்ம மனசு மறுத்தாலும், இந்த வீட்ட பாத்தா ஒருவேள நடந்தாலும் நடந்துருக்கும்னுதான் சொல்லத்தோணுது.

Deepapctrsglr

கால் சென்டர்

கால் சென்டர்

எம்-ஜி ரோடுனு சொன்னாலே பெங்களூரியன்ஸ் குஷி ஆய்டுவாங்க.. இத பத்தி தெரியலனு சொன்னா நீங்க பெங்களூர்ல இருக்குறதே வேஸ்ட். ஆமாங்க பெங்களூரோட ஹார்ட் லிவர் கிட்னினு எல்லாமே நிரஞ்சிருக்குற பகுதி இந்த எம்ஜி ரோட். இங்க இருக்குற கால் சென்டர் ஒன்னுல பேய் இருக்குதுனு சொன்னா நம்புவீங்களா

அட நிசமாத்தாங்க.. இங்க ஒரு நாள் நைட் ஷிப்ட் போய்ட்டு வந்தப்ப ஒரு பொண்ணு காணாம போயிருக்கு. அடுத்த நாள் அது திரும்ப வந்துடிச்சாம். ஆனா அதுக்கிட்டகேட்கும்போது என்னயா யாரோ ரெண்டு அமானுஷ்ய சக்திகள் கடத்திட்டு போய்டிச்சினு சொல்லிருக்காம்.

முன்னாடி ஒரு நாள் குடிச்சி வண்டி ஓட்டிட்டு வந்த ஒருத்தன் ஒரு பொண்ணு மேல மோதிட்டு நிக்காம போய்ட்டானாம். அந்த பொண்ணுதான் இந்த இடத்துல பேயா சுத்துறதா கதை இருக்கு. இப்பவும் இந்த இடத்துக்கு நைட்ல போனீங்கனா அதுமாதிரியான நிகழ்வுகள் நடக்கும்னு சொல்றாங்க.
wikimedia.org

தேசிய நெடுஞ்சாலை 4

தேசிய நெடுஞ்சாலை 4

தேசிய நெடுஞ்சாலைகளில் வரும் பேய்கள் பற்றிய கதைகள் இன்னும் சுவாரசியமானவை. சில இடங்களில் லிப்ட் கேட்பதுபோல பேய்கள் வரும் என்று கூறுவார்கள். சில இடங்களில் வாகனத்தில் சென்றுகொண்டிருக்கும்போது நடு சாலையில் வந்து ஒரு உருவம் நிற்கும். நாம் வாகனத்தை ஏற்றிவிட்டு பதறினாற்போல பார்த்தால் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள். நாமும் தூக்கக்கலக்கத்தில் வண்டி ஓட்டுகிறோம்போல என்று நினைத்து கடந்து சென்றுவிடுவோம்.

இப்படித்தான், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும், பெங்களூரு ஹைதராபாத் சாலையிலும் அட்டகாசங்கள் நிகழும். இந்த சாலையில் பயணிக்கும்போது கவனித்துபாருங்கள்.

wikimedia.org

Read more about: bangalore chennai ghost trip travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X