Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பார்க்க வேண்டிய ஆடம்பரமான சொகுசு சுற்றுலாத் தளங்கள்!!

இந்தியாவில் பார்க்க வேண்டிய ஆடம்பரமான சொகுசு சுற்றுலாத் தளங்கள்!!

இந்தியாவில் காணப்படும் எட்டு ஆடம்பர விடுமுறை இலக்குகளுக்கு ஓர் அழகிய பயணம் வாருங்கள் போகலாம்

By Lekhaka

நாம் அனைவரும் வாரந்தோரும் ஓய்வற்று வாழ்க்கையில் உழைத்திட, நமக்கு வாழ்வில் அனைத்தும் சிறப்பாக கிடைக்குமெனில் மகிழ்ச்சியே. பணி மற்றும் வாழ்க்கையானது தராசில் சமமாக நிற்க, இவை நம் வாழ்வின் அன்றாட இதிகாசமாகவும் மாறிட, அழுத்தமான வாழ்க்கையாகவும் அமைந்துவிட, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு பணியினை தேர்வு செய்யவும் தேவைப்படுகிறது. உங்களுடைய இத்தகைய இலட்சியத்தை ஆடம்பர வாழ்க்கையினால் நீங்கள் கண்டால் அந்த உணர்வானது எப்படித்தான் இருந்திடக்கூடும்.

இந்த வாக்கியமானது உன்னதமெனில், உங்களுக்கு இடைவெளியானதும் தேவைப்பட! அனைத்தையும் நிறுத்திக்கொள்ள, ஒரு ஆழ்ந்த ஆசுவாசத்தை கொண்டு சவுகரியமான விடுமுறையையும் திட்டமிடுதல் அவசியமாகிறது. உங்களுடனான நேரத்தை நீங்களே இனிதாக செலவிட நேரம் வர, சிலருக்கோ மனம் கவர்ந்த ஒருவருடன் இந்த விடுமுறையானது ஆடம்பரமாக செல்லக்கூடும். இப்போது தலைச்சிறந்த எட்டு ஆடம்பர இலக்குகள் இந்தியாவில் பரந்து விரிந்து காணப்பட, அவை என்ன என்பதையும் நாம் பார்க்கலாம்.

ஜெய்ப்பூர்:

ஜெய்ப்பூர்:


ராஜஸ்தானின் தலைநகரமான ஜெய்ப்பூர், இந்தியாவிலேயே அதீத புகழ்மிக்க சுற்றுலாத் தளமாக காணப்படுகிறது. அதீத பாரம்பரியத்துடன் கூடிய பல சக்திவாய்ந்த ஆட்சிகளானது இந்த நகரத்தின் கடந்த காலத்து புகழை பிரதிபலித்த வண்ணம் காட்சியளித்திட, அவை கோட்டைகள், அரண்மனைகள், மாளிகைகள் என பல வடிவத்திலும் காணப்படுகிறது.

இதனால் ஜெய்ப்பூரில் எண்ணற்ற அரண்மனைகள் பரந்து விரிந்து காணப்பட, அவற்றுள் ஒரு சில, இன்றைய நாளில் ஆடம்பர ஹோட்டல்களாகவும் இருப்பதோடு, கடந்த காலத்து உணர்வுகளையும் நமக்கு தந்திடக்கூடும். வாழ தகுதியான இடங்களாக ராம்பாஹ் அரண்மனை, உமைத் மஹால், என பலவற்றையும் கொண்டிருக்க, ஜெய்ப்பூரில் சுவாரஸ்யத்தை தரக்கூடிய ஹவா மாளிகையும், ஆம்பெர் கோட்டையும், நாஹர்கார்ஹ் கோட்டையையுமென இங்கே பலவற்றையும் கொண்டிருக்கிறது.

PC: Unknown

கங்க்தோக்:

கங்க்தோக்:

அழகிய நகரமான கங்க்தோக், வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் அமைந்திருக்கும் அமைதியான இடமாகும். கண்கொள்ளா காட்சியுடன், தூய்மையான நகரமாக மாபெரும் இமயமலையினை தழுவிக்காணப்படுகிறது இவ்விடம்.

கங்க்தோக்கின் பிரதான வருமானமாக சுற்றுலாவும் ஹோட்டல்களும் இருந்திட; ஆகையால், கங்க்தோக்கின் ஆடம்பரமான ஹோட்டல்களில் சிறந்த முறையில் நம் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நம்மால் வாழ்ந்திடவும் கூடும். இந்த ஹோட்டல்கள் வழக்கமாக அழகிய உயரத்தில் அமைந்திருக்க, ஒவ்வொரு காலையும் அற்புதமான காட்சியையும் நம் கண்களுக்கு தருகிறது.

PC: Balaji Bharadwaj

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்:

அழகிய நகரமான ஸ்ரீநகர், பனி மூடிய மலைகளாலும், பரந்து விரிந்த இயற்கையாலும் சூழ்ந்திருக்கிறது. தலைநகரமான ஜம்மு & காஷ்மீர், பெயர்பெற்ற மதிமயக்கும் தால் ஏரிக்கு புகழ்பெற்று விளங்க, ஸ்ரீநகரில் நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் ஒன்றாகவும் அமைகிறது.

இந்த ஏரியில் காணப்படும் அழகிய ஆடம்பர ஹோட்டலை தவிர்த்து, பளிச்சென மின்னும் தால் ஏரி வழியாகவும் சிகாராவிற்கு சவாரி செய்ய, ஷலிமார் பாஹ், நிஷாத் பாஹ் என பல இடங்களையும் ஸ்ரீநகரில் நம்மால் பார்க்க முடிகிறது.

PC: ZeePack

தென் கோவா:

தென் கோவா:


கடற்கரைகளால் கொண்டாட்டம் சூழ்ந்த கோவா, பார்ட்டிகளெனவும் கடற்கரையை அலங்கரித்திட, அற்புதமான விடுமுறை இடமாகவும் இது அமைகிறது. குறிப்பாக, தெற்கு கோவாவில், நீங்கள் சில அற்புதமான ஹோட்டல்களை காண, அங்கே தங்கி உங்கள் மனதில் ஏற்பட்ட அழுத்தத்தையும் குறைத்திடலாம்.

கொல்வா, பொக்மாலோ, கவேலோசிம், என சில பகுதிகளுக்கு நாம் தாவ, வாழை படகு சவாரி, நீர் சறுக்கு, பாராசைலிங்க் என பல நீர் விளையாட்டுகளையும் முயல்கிறோம்.

PC: Unknown

 உதய்பூர்:

உதய்பூர்:

அரச குடும்ப வழக்கத்தை பிரதிபலிக்கும் நகரமாக விளங்குகிறது உதய்பூர். இந்த நகரத்தில் எண்ணற்ற முந்தைய அரண்மனைகள் காணப்பட, அதனை பார்க்கும் நம் விழிகள் வார்த்தையற்று தவித்திடவும் கூடும். இதனை ‘நகர ஏரிகள்' என அழைக்க, பல அழகிய ஏரிகளும் பரந்து விரிந்து காணப்பட, அவை பிச்சோலா ஏரி, பத்தேஹ் சாகர் ஏரி, தூத் தலாய் ஏரி என பெயர் சொல்லும் பலவுமாகவும் இருக்கிறது.

மாபெரும் அரண்மனைகளை வீடாக கொண்டிருக்கும் பிச்சோலா ஏரி இங்கே காணப்படுகிறது. இந்த அரண்மனையானது தற்போது பாரம்பரிய ஹோட்டல்களையுமென கடந்த காலத்தின் பெருமையை தாங்கியபடி ஆடம்பரம் பொங்க உயர்ந்து நிற்கிறது.

PC: gags9999

 மும்பை:

மும்பை:

கனவுகளின் நகரமென அழைக்கப்படும் மும்பை, வாழ்வதற்கு முயலும் இடமாக அனைத்தையும் கொண்டிருக்கிறது. ஒருவேளை நீங்கள் மும்பையில் வாழ விரும்பவில்லை என்றாலும், இந்த நகரத்தில் தங்கிடவாவது மனம் ஆசைக்கொள்ளும்.

ஒரு கையில் தலைச்சிறந்த ஆடம்பர ஹோட்டல்களில் நாம் தங்க விரும்ப, இரவு வாழ்க்கையானதும் இனிமையானதாக செல்லக்கூடும். மற்றுமோர் கரத்தில், பல இடங்களான கடல்வாழ் பயணம், இந்தியாவின் நுழைவாயில், எலிஃபண்டா குகைகள், ஜூஹு கடற்கரை என பலவும் நமக்கு பரவசத்தை தந்திடும். இவற்றை நாம் ஆராய்ந்திட, அற்புதமான ஆடம்பர விடுமுறை இலக்குகளும் நம்மை வரவேற்று அமர வைத்திடுகிறது.

PC: Vidur Malhotra

இலட்சத்தீவுகள்:

இலட்சத்தீவுகள்:

ஒரு இலட்சம் தீவுகளென்னும் இலக்கிய ரீதியான விளக்கம் தரும் லட்சத்தீவு, அமைதியான 36 தீவுகளை கொண்டு மாபெரும் அரபிக்கடலை தழுவியும் காணப்படுகிறது. இங்கே ஆடம்பர பயணமாக இலட்சத்தீவு அமைய, இங்கே காணப்படும் ஆடம்பரமான ஹோட்டல்களில் நாம் தங்கி எண்ணற்ற மதிமயக்கும் இடத்தையும் பார்த்திடலாம்.


இங்கே காணப்படும் சாகச செயல்களான ஸ்னோர்கெல்லிங்க், ஸ்கூபா டைவிங்க், என பலவற்றையும் நாம் தவறாமல் பார்த்திட, ஆழ்கடல் அனுபவமென்பது புதுவித அனுபத்தை நம் மனதில் தந்திடுகிறது. தீவுகள் விட்டு தீவு நாம் தாவ அவை, மினிகாய் தீவு, கவராட்டி தீவு, கல்பேனி தீவு, என பலவற்றையும் நம்மால் இங்கே பார்த்திட முடிய, இலட்சத்தீவில் காணப்படும் இவ்விடத்தில் தங்கிடவும் முடிகிறது.

தில்லி:

தில்லி:

நம் நாட்டின் தலைநகரமான தில்லி, சிறந்த ஆடம்பர ஓய்விடத்தை நகரத்தின் வழியே கொண்டிருக்கிறது. இவ்விடம் பெரு நகரப்பகுதியாக மட்டுமல்லாமல், சுழலும் வாழ்க்கையின் வேகத்துக்கு ஏற்ப நம்மையும் சுழல வைக்க, தில்லி முழுவதும் பரந்து காணப்படும் இவ்விடம், முகலாய பேரரசின் பாரம்பரியமெனவும் தெரியவருகிறது.

காலம் கடந்து நம்மை அழைத்து செல்லும் இடங்களாக., செங்கோட்டை, குதிப் மினார் கட்டிடம், இந்தியா கேட், ஜாமா மஸ்ஜித் என தில்லியின் புகழை பரப்பும் கலை நய அமைப்புகளும் இங்கே நம் மனதை நெகிழ செய்கிறது.

PC: Larry Johnson

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X