Search
  • Follow NativePlanet
Share
» »குழாய் மூலம் உருவாக்கப்பட்ட விசித்திர தீவு - பெங்களூர்ல இப்படி ஒரு தீவு இருக்குறது உங்களுக்கு தெரியு

குழாய் மூலம் உருவாக்கப்பட்ட விசித்திர தீவு - பெங்களூர்ல இப்படி ஒரு தீவு இருக்குறது உங்களுக்கு தெரியு

குழாய் மூலம் உருவாக்கப்பட்ட விசித்திர தீவு - பெங்களூர்ல இப்படி ஒரு தீவு இருக்குறது உங்களுக்கு தெரியுமா?

பெங்களூர்ல தீவா.. என்னங்க சொல்றீங்க..பெங்களூர்ல கடலே இல்லையேனு நம்மள்ல பலபேரு கேக்க வாய்ப்பிருக்கு.. அட ஆமா.. இங்கு இருக்குறவர்கள் பலருக்கும் இந்த விசயம் தெரியாமலிருக்க 100 சதவிகிதம் வாய்ப்பிருக்கு. இந்த தீவு எல்க்ட்ரானிக் சிட்டி பக்கத்துலயே அமைஞ்சிருக்கு வாங்க அந்த தீவு பத்தின சுவாரசியமான தகவல்களை காண்போம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது


பெங்களூருவின் புறநகர் பகுதியில் எலக்ட்ரானிக் சிட்டி அருகிலேயே அமைந்துள்ளது ஹெப்பகோடி எனும் பகுதி. இங்குள்ள ஒரு ஏரியில் தான் திட்டமிட்டு அழகாக உருவாக்கப்பட்டுள்ளது தீவு ஒன்று. வாருங்கள் நாமும் சென்று பார்க்கலாம்.

 சென்னைக்கு கூவம் போல

சென்னைக்கு கூவம் போல

சென்னையில் வசிப்பவர்களுக்கு நன்கு அறிமுகமாயிருக்கும் கூவம் நதி போலத்தான் பெங்களூரு மாநகரின் பகுதி சாக்கடைகள் வந்து தேங்கும் இடமாக இருந்தது இந்த ஹெப்பகோடி. உண்மையில் இது ஒரு சாக்கடையாகத்தான் இருந்தது. மக்களுக்கும் அது சாக்கடை என்றுதான் அறிமுகமாயிருந்தது. ஆனால்...

 அரசின் தீவிர முயற்சி

அரசின் தீவிர முயற்சி

பெங்களூரு நகரம் அதிகம் மாசடைந்து வருவது நகர வாசிகளிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களும் அரசுடன் இணைந்து இதுபோன்ற சுத்தப்படுத்துதல் நிகழ்வை நடத்த முன்வந்தன. இதையடுத்துதான் உருவாக்கப்பட்டது தென்னிந்தியாவின் அழகிய மறு உருவாக்கப்பட்ட ஏரி.

மிதக்கும் தீவுகள்

மிதக்கும் தீவுகள்

நான்கு பக்கமும் சுற்றி நீரால் இணைக்கப்பட்டிருந்தால் அதற்கு தீவு என்றுபெயர். அவை தரையுடன் தொடர்பில்தான் இருக்கும். ஆனால் சில தீவுகள் மிதக்கும் பொருள்களால் உருவாக்கப்படும். அப்படி ஒரு வகையில் இந்த ஏரியும் மிதக்கும் தீவாக உருவாக்கப்பட்டுள்ளது.

மிதக்கும் நெகிழிக் குழாய்கள்

மிதக்கும் நெகிழிக் குழாய்கள்

நெகிழி என்பது ஆங்கிலத்தில் பிளாஸ்டிக். இதன் மூலம் உருவாக்கப்பட்ட குழாய்களை குறுக்கும் நெடுக்குமாக இணைத்து, செடிகளை உருவாக்குகின்றனர். இது ஒருவகையில் பெரிய தீவாகவே உள்ளது. காண்பதற்கு அழகாகவும், மக்கள் செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

ஏரி உருவாக்கம்

ஏரி உருவாக்கம்

முதலில் சாக்கடையாக இருந்த இந்த ஏரியை சுத்தம் செய்ய நிறைய மெனக்கெட்டுள்ளனர். பின் அதன் மேல் 67 ஆயிரம் கனமீட்டர் மணலைக் கொட்டி தளம் அமைத்து, அதில் செடிகளை வளரச் செய்து மிகவும் அழகான முறையில் உருவாக்கியுள்ளனர்.

Shyamal

எவ்ளோ பெருசு தெரியுமா


ஹெப்பகோடி ஏரியில் உள்ள இந்த செயற்கைத் தீவு இந்தியாவின் உருவாக்கப்பட்ட தீவுகளில் பெரியதாகும். 35 ஆயிரம் ஏக்கரில் உள்ள இந்த ஏரியில் 12 ஆயிரம் சதுர அடிக்கு இந்த தீவு உருவாக்கப்பட்டுள்ளது.

அதிரடி காட்டும் பெங்களூரு

இந்த தீவில் வளர்க்கப்பட்டிருக்கும் செடிகள் அங்கு இருக்கும் மாசுக்களை உணவாக எடுத்துக்கொள்ளுமாம். இதனால் இந்த ஏரியில் மாசு சேர சேர அதை செடிகள் எடுத்துக்கொண்டு, ஏரியைத் தொடர்ந்து சுத்தப்படுத்திக்கொண்டே இருக்குமாம். பெங்களூருவின் மற்ற ஏரிகளுக்கும் இந்த திட்டத்தை கொண்டு வர இருக்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

Read more about: travel bangalore
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X