Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா?

இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புதங்கள் எவை தெரியுமா?

By Naveen

தாஜ்மஹாலுக்கு நிகரான அழகுடைய கட்டிடம் இந்த உலகில் இருக்கவே முடியாது. அதுபோலவே தான் ஹம்பி நகரமும். இங்கிருக்கும் சிற்பங்களை எல்லாம் பார்க்கும் போது இவை கற்களால் செய்யப்பட்டவை என்று சொன்னால் நம்பமுடியாது. அதேபோன்று பீகார் மாநிலத்தில் இருக்கும் புத்த கயா கோயில். உலகுக்கே வழிகாட்டிய ஞான முனி புத்தன் மோட்சத்தை அடைந்த இடம்.

இதுபோல இந்திய திருநாட்டில் இருக்கும் விலைமதிப்பற்ற வரலாற்று பொக்கிஷங்களை சொல்லிக்கொண்டே போகலாம். இப்படியொரு நாட்டில் பிறக்கும் பாக்கியம் பெற்ற நாம் வாழ்கையில் ஒருமுறையேனும் இந்த இடங்களுக்கு கட்டாயம் சென்று சுற்றிப்பார்க்க வேண்டும்.

மேலே குறிப்பிட்டதை போல இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தும் அற்புத இடங்கள் எவைஎவை என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

உலகின் பழமையான நகரம்

உலகின் பழமையான நகரம்

வாரணாசி, இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் என்றழைக்கப்படும் இந்த இடம் ஹிந்துக்கள் மட்டுமில்லாது ஜைனர்கள் மற்றும் பௌத்த வாழ்வியல் நெறிகளை பின்பற்றுபவர்களுக்கும் புனித நகரமாக இருக்கிறது.

உலகின் பழமையான நகரம்

உலகின் பழமையான நகரம்

ஆன்மீக நகரம் என்பதை தாண்டி இன்று உலகில் தொடர்ந்து இயங்கி வரும் மிகப்பழமையான நகரம் என்ற பெருமையும் காசி என்றும் அழைக்கப்படும் இந்நகருக்கு உண்டு. கிட்டத்தட்ட 2000வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து மக்கள் இந்நகரில் வாழ்ந்து வருகிறார்களாம்.

காசி விஸ்வநாதர் கோயில்:

காசி விஸ்வநாதர் கோயில்:

காசியில் இருக்கும் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலம் விஸ்வநாதர் கோயில் ஆகும். இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதன்மையானதாக விஸ்வநாதர் கோயில் திகழ்கிறது. புண்ணிய நதியான கங்கையில் ஸ்நானம் செய்து காசி விஸ்வநாதரை வழிபட்டால் வாழ்கையில் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி மோக்ஷம் கிட்டும் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

படையெடுப்பின் கோரத்தாண்டவம்:

படையெடுப்பின் கோரத்தாண்டவம்:

இப்போது நாம் சென்று வழிபடும் கோயில் 1780ஆம் ஆண்டு இந்தூரை சேர்ந்த அஹில்ய பாய் ஹோல்கர் என்பவரால் கட்டப்பட்டது ஆகும். முதலில் 1194ஆம் ஆண்டு துருக்கிய தளபதி குதுப்-உதின் ஐபக் என்பவராலும் பின்னர் 1669ஆம் ஆண்டு முகலாய மன்னன் அவுரங்கசீப் என்பவனாலும் இடிக்கப்பட்டிருக்கிறது. இந்த கோயிலை இடித்த பிறகு அதே இடத்தில் கியான்வாபி என்ற மசூதியை அவுரங்கசீப் கட்டியிருக்கிறான். அதை இன்றும் நாம் காணமுடியும்.

படித்துறைகள்:

படித்துறைகள்:

காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த இடமென்றால் அது கங்கைக்கரையில் அமைந்திருக்கும் படித்துறைகள் தான். தஸ்வமேத காட், பஞ்சகங்கா காட், மணிகர்ணிகா காட் மற்றும் ஹரிஷ்சந்திர காட் ஆகிய படித்துறைகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இயற்கைஎய்திய தம் முன்னோர்களுக்கான சடங்குகளை மேற்கொள்கின்றனர்.

படித்துறைகள்:

படித்துறைகள்:

அதேபோல ஒவ்வொரு நாளும் மாலை ஆறுமணிக்கு தஸ்வமேத படித்துறையில் கங்கா ஆரத்தி நடக்கிறது. வேத ஸ்லோகங்கள் முழங்க வேத சாலை மாணவர்கள் மேற்கொள்ளும் இந்த பூஜையை காண அத்தனை அற்புதமாக இருக்கும்.

காசி பயணம்:

காசி பயணம்:

வாழ்கையின் வேறு பரிமாணங்களை புரிந்துகொள்ள காசி பயணம் மிகப்பெரிய உந்துகோளாக இருக்கும். பல நிலைகளில் இருந்தும் இங்கு வந்து வாழும் மக்கள், ஆன்மீக ஞானம் தேடி வந்திருக்கும் வெளிநாட்டவர், இறப்பை நோக்கி காத்திருக்கும் முதியவர்கள் போன்றோரிடம் இருந்து நிறையவே கற்றுக்கொள்ளலாம்.

காசி நகரை பற்றிய முழுமையான பயண தகவல்களையும், அங்கிருக்கும் தங்கும் விடுதிகள் பற்றிய விவரங்களையும் தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் ஞானமடைந்த இடம்:

அரச குடும்பத்தில் பிறந்து துன்பம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த சித்தார்த்த கௌதமன் என்ற இளவரசன் ஒருநாள் முதல்முறையாக தன் அரண்மனையை விட்டு வெளியே வருகிறார். மனிதர்கள் அறியாமையாலும் , ஆசையாலும் துன்பப்படுவதை காண்கிறார். இதுவே இவரை உண்மையான ஞானத்தை தேடுவதற்கு உந்துதலாக அமைகிறது

கி.மு 530 ஆம் ஆண்டு அரண்மனையை விட்டு வெளியேறும் புத்தர் புனித நதியான ப்ஹல்கு நதிக்கரையில் ஒரு அரச மரத்தின் அடியில் தொடர்ந்து மூன்று இரவு பகல் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடுகிறார். அந்த அரச மரம் 2500 ஆண்டுகள் கடந்து இன்றும் புத்தகயா என்னுமிடத்தில் இருக்கிறது.

Matt Stabile

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் ஞானமடைந்த இடம்:

பீகாரின் தலைநகரான பாட்னாவில் இருந்து 90 கி.மீ தொலைவில் கயா மாவட்டத்தில் 'புத்தகயா' என்ற இந்த இடம் அமைந்திருக்கிறது. இங்கே தான் புத்தர் ஞானமடைந்த 'மஹா போதி' அரச மரமும், மிகப்பெரியதொரு புத்த கோயிலும் அமைந்திருக்கிறது.

jack wickes

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் ஞானமடைந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு பின் அதாவது கி.மு 250 ஆம் ஆண்டு இங்கே வருகை தரும் அசோக மன்னர் போதி மரத்துக்கு நேர் கிழக்கே மஹாபோதி என்ற மிகப்பெரியதொரு கோயிலை கட்டியிருக்கிறார்.

இந்த கோயிலானது அசோக மன்னரால் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டாலும் பின்னர் வந்த தொல்லியல் ஆய்வு முடிவுகளின்படி அசோகர் காலத்தில் சிறிய அளவில் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது என்றும் பின்னர் கி.பி 5ஆம் நூற்றாண்டில் தற்போதிருக்கும் பிரம்மாண்ட கோயிலாக கட்டப்பட்டிருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.

H Savage

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் ஞானமடைந்த இடம்:

உலகமெங்கிலும் இருந்து வரும் பௌத்தர்கள் இந்த மகா போதி மரத்தை சுற்றியமர்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றனர். பௌத்த நம்பிக்கைப்படி கலியுகத்தின் முடிவில் இந்த அண்டம் பிரளயத்தால் அழியும் போது இந்த போதி மரம் தான் கடைசியாக அழியும் என்றும் பின் புதிய உலகம் படைக்கப்படும் போது இந்த மரம் தான் முதலில் தோன்றும் எனவும் சொல்லப்படுகிறது.

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் ஞானமடைந்த இடம்:

எனவே, எப்போதாவது பீகார் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் புத்த கயாவிற்கு சென்று வர மறந்துவிடாதீர்கள்.

புத்த கயாவை பற்றிய முழுமையான பயனுள்ள பயண தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் ஞானமடைந்த இடம்:

புத்தர் பாதம் !!

ஹம்பி!!

ஹம்பி!!

கர்நாடக மாநிலத்தில் இந்தியாவை ஆண்ட மிகப்பெரிய ஹிந்து சாம்ராஜ்யமான விஜயநகர பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தில் அமைந்திருந்த மிகச்செழிப்பான நகரம் தான் ஹம்பி ஆகும்.

14-15ஆம் நூற்றாண்டுகளில் இந்த நகரத்தின் வளமான காலகட்டத்தில் இங்கு மட்டுமே ஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்திருக்கின்றனர். அது அன்றைய காலகட்டத்தில் மொத்த உலக மக்கள் தொகையில் 0.1% ஆகும்.

Roehan Rengadurai

ஹம்பி!!

ஹம்பி!!

ஒரு பக்கம் துங்கபத்திரை நதியாலும் மற்ற மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் பாதுகாப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம் கருதி விஜயநகர அரசர்களால் இந்த ஹம்பி நகரம் தலைநகராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்த நகரமானது கர்நாடக மாநில தலைநகரான பெங்களுருவில் இருந்து 353 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது.

ஹம்பி!!

ஹம்பி!!

சிதலமடைந்து இருக்கும் இந்த ஹம்பி நகரில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் இடங்களில் ஒன்று 'விருபக்ஷா' கோயிலாகும். இந்த கோயிலுக்கு இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். விஜயநகர சாம்ராஜியத்தின் கட்டிடக்கலை வல்லமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது.

இந்த விருபக்ஷா கோயிலில் சிவ பெருமான் விருபாக்ஷ தேவராக அருள் பாலிக்கிறார். வரலாற்று ஆய்வுகளின்படி இந்த கோயிலானது 7ஆம் நூற்றாண்டில் இருந்தே இங்கே இருந்திருக்கிறது.

premasagar

ஹம்பி!!

ஹம்பி!!

இந்த கோயிலில் இருக்கும் கட்டிக்கலை அதிசயங்களில் முதன்மையானது இங்குள்ள முழுக்க முழுக்க கல்லினால் செய்யப்பட்ட தேர் ஆகும். ஹம்பியில் உள்ள விட்டலா கோயில் என்ற விஷ்ணு கோயிலில் அமைந்திருக்கும் இந்த தேர் 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஹம்பி!!

ஹம்பி!!

கற் தேருக்கு அடுத்தபடியாக இந்த கோயிலில் இருக்கும் சிறப்பம்சம் இங்குள்ள தூண்கள் தான். இந்த கோயில் மண்டபத்தில் உள்ள தூண்களை பார்க்கும் போது இவையெல்லாம் களிமண்ணினால் செய்யப்பட்டதா என்று வியப்பில் ஆழ்த்தும் வகையில் அத்தனை நுணுக்கமாக கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.

ஹம்பி!!

ஹம்பி!!

இந்தியாவில் இதுவரை நிர்மாணிக்கப்பட்ட நகரங்களிலேயே மிகச்சிறந்த ஒன்றான இந்த ஹம்பி நகரம் 1565இல் முற்றுகையிடப்பட்டு இஸ்லாமிய அரசர்களால் கைப்பற்றப்பட்ட பிறகு இன்றுவரை நூற்றாண்டுகள் கடந்தும் அதன் பழைய பெருமையை மீட்டேடுக்கவேயில்லை. ஹம்பி நகரை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more